வைதேகி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வைதேகி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 19 மார்ச், 2017

விண்வெளி களஞ்சியம்



விண்வெளி களஞ்சியம்



பீடல்ஜீயஸ் (BETELGEUSE)

விண்வெளியில் எராளமான நட்சத்திர குழுக்கள் உள்ளன. அவற்றில் நேர்த்தியுடன் அமைந்த நட்சத்திர குழு ‘ஆல்பா ஒரியனிஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நட்சத்திரக்குழு பூமியில் இருந்து 640 ஒளி ஆண்டுகள் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரக்குழுவில் உள்ள ஒரு நட்சத்திரம் தான் பீடல்ஜீஸ்.
இந்திய வானியல் மரபு மற்றும் ஜோதிட மரபுப்படி தமிழில் இது ‘திருவாதிரை’ என்றும் ’சிவப்பு அரக்க விண்மீன்’ என்றும் அழைக்கப்படுகிறது . இரவு நேரத்தில் வானில் இது சிவப்பு புள்ளியாக காட்சியளிக்கும். இந்த நட்சத்திரத்தின் ஆயுள் இன்னும் பத்து லட்சம் ஆண்டுகளில் முடிந்துவிடும் என்றும் அதன்பிறகு இது வெடித்துச்சிதறும் என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
தடைபடும் சுழல் பால் மண்டலம்;
விண்வெளியில் நமது சூரியக்குடும்பம் உள்பட பல் வேறு கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் கொண்ட அண்ட வெளிக்கூட்டங்கள் உள்ளன. இந்த அண்டவெளிக்கூட்டங்கள் இருக்கும் பகுதி பால்வெளி வீதி (மில்கி வே) என்று அழைக்கப்படுகின்றன. இதில் உருண்டையான வடிவத்தில் நட்சத்திரங்கள் கூட்டம் அமைக்கப்படுகின்றன. இந்த நட்சத்திரங்கள் ஒரு மத்திய சட்டத்தின் பிணைப்பில் அமைந்துள்ளது போல இந்த மண்டலம் உருவாகி இருக்கிறது. இது தடைபடும் சுழல் பால் மண்டலம் என்று அழைக்கப்படுகிறது.


பியோன் (BION):
சோவியத் யூனியன் கூட்டமைப்பின் (ரஷ்யா) விண்வெளி ஆய்வுத் திட்டத்தின் பெயர் தான் “பியோன்” என்பதாகும். நுண்ணுயிர்கள் தொடர்பான ஆய்வுகளை விண்வெளியில் நடத்தியதால் அதற்கு இந்த பெயர் வந்தத . 1973 முதல்1966 வரை இந்த ஆய்வுகளை ரஷ்யா நடத்தியது. இந்த காலகட்டத்தில் பல்வேறு உயிரிகள் கொண்ட செயற்கை கோள்களை ரஷ்யா விண்வெளிக்கு அனுப்பி ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வுக்காக முதலில் அனுப்பட்ட செயற்கைகோளின் பெயர் காஸ்மோஸ் 605. இதில் பூஞ்சை காளான், பூச்சின், எலிகள் மற்றும் ஆமைகள் போன்றவை அனுப்பி வைக்கப்பட்டன. இந்த உயிரினங்கள் விண்வெளியில் எப்படி செயல்படுகின்றன என்பது குறித்து ஆய்வுகள் நடைபெற்றது. இந்த உயிரினங்கள் சுமந்து கொண்டு காஸ்மோஸ் 605 செயற்கைகோள் விண்ணில் செலுத்தி வைக்கப்பட்டது. சுமார் 22 நாட்கள் இந்த செயற்கைகோள் விண்ணில் சுற்றிவிட்டு பூமிக்கு திரும்பியது.


நீல நிலவு (BLUE MOON);

ஒரு மாதத்தில் இரண்டு பவுர்ணமிகள் வந்தால் இரண்டாவதாக வரும் பவுர்ணமி ‘நீல நிலவு’ என்று அழைக்கப்படுகிறது. இது போன்று நிகழ்வு ஒவ்வொரு 2% ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்கிறது. இதனால் தான் அபூர்வமாக நடைபெறும் நிகழ்வுகளை ‘ஒன்ஸ் இன் எ புளூ மூன்’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றன.


பெர்னார்ட் எட்வர்டு எமர்சன் (BARNARD EDWARD EMERSON):
பெர்னார்ட் எட்வர்டு எமர்சன் அமெரிக்கா வானியல் ஆய்வாளர் ஆவார். 1829 ம் ஆண்டு இவர் வானில் உள்ள 16 வால் மீன்களை கண்டுபிடித்தார். அதுபோல ஜீபிடர் கோளுக்கு துணைக்கோள் இருப்பதையும் கண்டுபித்தவர் இவர் தான். 200 ஆண்டுகளில் அதிகபட்சமாக கோள்களை கண்டுபிடித்தவர் என்ற பெருமையும் உண்டு. சூரியனுக்கு அருகே உள்ள நட்சத்திரம் ஒன்று குறித்து அவர் ஆய்வுகள் நடத்தினார். இதனால் அந்த நட்சத்திரத்திற்கு இவரது பெயரான பெர்னார்ட் என்ற பெயரே சூட்டப்பட்டது.