பர்ஜனா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பர்ஜனா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 6 ஏப்ரல், 2017

அன்பு..




உன்னுடைய அன்பைப் பற்றி
முழுவதும் அறியாதவர்களிம்
உன்னுடை கோபத்தை காட்டாதே எனென்றால்
அந்த கோபம் கூட ஒரு விதமான அன்புதான்

பல எதிர்ப்புகளைவும்,
 சோதனைகளைவும் தாடி
வருவது தான் உண்மையான அன்பு

என்னுள் உயிராய் இரு   
       இதயமாய் இருக்க வேண்டாம்
என் ஏன்றால் உன்னைத் துடிக்கவிட்டு
        நான் வாழ் விரும்பவில்லை

கண் சிமிட்டாமல் உன்னை பார்க்க ஆசைபட்டேன்
        ஆனால் இப்போது கண்சிட்டும் நேரம்மாவது
உன்னை பார்க்க ஆசை படுகிறேன்




திருமணம்...



     பத்து பொருந்தங்கள் பார்த்து
      ஒன்பது கோள்நிலை அறிந்து
எட்டு திசையில் இருந்து உறவை அழைத்து
      ஏழு ஸ்வரங்கள் ஒலிக்க
அறுசுவை உணவு படைத்து
      ஐந்து பூதங்கள் சாட்சியாக
நான்கு வேதங்கள் செல்லி
      முன்று முடிச்சுகள் போட்டு
இரு மணம் சேர்ந்து
      ஒரு உயிராக இணையும்


பிறப்பு முதல் இறப்பு வரை..




உதிரம் என்ற நான்கு எழுத்திலே விழுந்து
        கருப்பை என்ற நான்கு எழுத்திலே மலர்ந்து
பிறப்பு என்ற நான்கு எழுத்திலே பிறந்து
        உலகம் என்ற நான்கு எழுத்திலே பார்த்து
பாலகன் என்ற நான்கு எழுத்திலே தவழ்ந்து
       பருவம் என்ற நான்கு எழுத்திலே அடைந்து
முயற்சி என்ற நான்கு எழுத்திலே முயன்று
       உழைப்பு என்ற நான்கு எழுத்திலே உயர்ந்து
இன்பம் என்ற நான்கு எழுத்திலே குளித்து
      குழந்தை என்ற நான்கு எழுத்திலே மகிழ்ந்து
முதிர்மை என்ற நான்கு எழுத்திலே  முதிர்ந்து

      மரணம் என்ற நான்கு எழுத்திலே உதிரும்

வாழ்க்கை ஒரு பரிசு..





வாழ்க்கை ஒரு பரிசு       
          அதைப் பெற்றுக் கொள்ளுங்கள்

வாழ்க்கை ஒரு சாகப் பயணம்  
            அதைப் மெற்க் கொள்ளுங்கள்

வாழ்க்கை ஒரு வினோதம் 
           அதை கண்டறியுங்கள்

வாழ்க்கை ஒரு காதல்      
           அதை அனுபவியுங்கள்

வாழ்க்கை ஒரு பாடல்   
          அதை பாடுங்கள்

வாழ்க்கை ஒரு அழகு     
          அதை ரசித்துப் பாருங்கள்

வாழ்க்கை ஒரு உணர்வு 
          அதை உணர்ந்துக் கொள்ளுங்கள்

வாழ்க்கை ஒரு கடமை  
          அதை நிறைவேற்றுங்கள்


வாழ்க்கை ஒரு துயரம்    
          அதை தாங்கிக் கொள்ளுங்கள்

வாழ்க்கை ஒரு பயணம்  
         அதை முடிக்கப்பாருங்கள்

வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம்
           அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்

வாழ்க்கை ஒரு போராட்டம் 
           அதை எதிர்க் கொள்ளுங்கள்

வாழ்க்கை ஒரு உறுதி
          அதை இறுதி வரை காப்பாற்றுங்கள்

வாழ்க்கை ஒரு சவால்
         அதை சந்தியுங்கள்

வாழ்க்கை ஒரு குழப்பம்
          அதை விடைக் கானுங்கள்

வாழ்க்கை ஒரு இலக்கு
         அதை எட்டி பிடியுங்கள்

வாழ்க்கை ஒரு சுவாசம்
         அதை சுவாசிங்கள்




தாயே உனக்காக...




தாயே உன் மனதில் எத்தனை கவலைகள் இருந்தாலும்
என்னை சிரிக்க வைக்க நீ சிரித்தாய்
இன்று உன்னை சிரிக்க ஏனோ நான் மறந்துவிட்டேன்.


தாயே நீயே கருவில் சுமந்தாய்
நானோ உன்னை என் இதயம் என்னும்
கருவில் என் வாழ்நாள் முழுவதும் சுமப்பேன்
இதுவே நான் உனக்கு செய்யும் நன்றி..


தாயே உன்னை பற்றி எழுத வார்த்தை இல்லை
இதோ எழுதிவிட்டேன் என் வார்த்தை உன்னை பற்றி

கண்ணீர்… கண்ணீர்…கண்ணீர்….