ரா.ரேவதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரா.ரேவதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 4 மார்ச், 2016

சாதனை பெண்கள்

                                                  
Image result for successful women in india with name

அக்காலத்து பெண்கள்:
          அன்றைய காலத்தில் பெண்களுக்கு சுதந்திரம் என்ற ஒன்று  இல்லாமல் அடிமைவாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். அன்றைய  காலத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூட  பயப்படுவார்கள். அடுப்பங்கரையை விட்டு எங்கும் சென்றது இல்லை.தன்  கணவனைக்கூட நிமிர்ந்து பார்காமல் இருந்தார்கள். ஒரு சில பெண்கள்  மட்டுமே அவர்களுடைய திறமைகளை வெளிக்கொண்டு  வந்தனர்.அன்றைய காலத்து பெண்களுக்கு சமுதாயத்தில் ஒரு இடம்  கூட இல்லை. அன்றைய காலத்தில் பெண்களைவிட ஆண்கள் தான்  முதல் இடத்தில் இருந்தனர்.

இக்காலத்து பெண்கள்:

Image result for successful women in india in sports

            இன்றைய காலத்து பெண்கள் ஆண்களுக்கு இணையாக வாழ்ந்து  வருகிறார். அடுப்பங்கரையில் இருப்பதைவிட சாதனை செய்பவர்கள்தான்  அதிகம்.எந்தத்துறையிலும் பெண்கள் இல்லாத துறையே இல்லை.  பெண்கள் தன் வாழ்க்கையை தானே தேர்ந்தெடுக்கும் அளவிற்க்கு  உயர்ந்து கொண்டு இருக்கின்றனர். பள்ளி, கல்லூரி போன்ற இடங்களில்  பெண்களும் முதல் இடத்தில் இருக்கின்றார். இன்றைய காலத்து  பெண்களுக்கு சமுதாயத்தில் ஒரு இடம் இருக்கிறது. ஆனால் திருமணம்  என்று வந்தால் கட்டாயப்படுத்திதான் அதிகமாக திருமணம்  நடத்துகிறார்கள். தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு பிடித்தால் மட்டுமே  திருமணம் நடக்கிறது. அதுவே பெண்களுக்கு பிடித்தவனை திருமணம்  செய்து வைப்பது இல்லை. இன்றைய காலத்தில் மகளிர் கல்லூரி என  இருக்கிறது, எங்கயாவது ஆண்கள் கல்லூரி என இருக்கிறதா!.

வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

பெண்ணின் மதிப்பு..!!




குழந்தை உள்ளம் கொண்டவள்தான் பெண் அவளை குமுறும் கடலாக
மாற்றுபவன் ஆண்தான்.


ஆணும் பெண்ணும் இணையானவர்கள் இதில் வித்தியாசம் பார்ப்பவர்கள்
மனிதர்களே இல்லை.


ஆண்படித்தால் ஒருவன் தான் படித்தவனாவான் பெண் படித்தால் ஒரு குடும்பத்தையே படிக்க வைக்க முடியும்


ஆண்களின் ஆராய்ச்சி அறிவுகள் எல்லாம் பெண்களின் உணர்ச்சிமயாமான அன்புக்கு ஈடாகாது


சட்டங்களை விட பெண்களின் கண்கள் சக்தி வாய்ந்தவை கொடும் தண்டனையை விட அவர்களின் கண்ணசைவுகள் திருத்தும் ஆற்றல்
கொண்டவை


பெண் இல்லாத வீடும் வீடில்லாத பெண்ணும் மதிப்பில்லாதவை.........