தெரிந்ததும் தெரியாததும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தெரிந்ததும் தெரியாததும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 3 மே, 2017

கலாமுக்கு வருத்தம் உண்டு..


Image result for அப்துல் கலாம்

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், ஒரே ஒரு வருத்தத்தை வாழ் நாள் முழுவதும் கொண்டிருந்ததாக அவரது உதவியாளர் ஶ்ரீஜன் பால் சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "கலாமுக்கு தனது வாழ்க்கை முழுவதும் ஒரே ஒரு வருத்தம் உண்டு. அது, 'தனது பெற்றோருக்கு அவர்களது வாழ்நாளில் 24 மணி நேரமும் மின்சார வசதி கிடைக்க செய்யும் வகையிலான வசதியை செய்து கொடுக்க முடியவில்லையே...!' என்பது தான்.

இதனை அவர் அவ்வப் போது என்னிடம் மிகுந்த வருத்தமுடன் பகிர்ந்து கொள்வார். அநேகமாக கலாம் தனது வாழ்க்கையில் கொண்டிருந்த ஒரே வருத்தம் இதுவாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

திங்கள், 24 ஏப்ரல், 2017

எளிய பாட்டி வைத்தியம்.....



1) வெள்ளைபூண்டையும், தித்தி இலையையும் நறுக்கி நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி பரு மீது தடவி வர முகப்பரு நீங்கும்.

2) மஞ்சள் சாமந்தி பூவை தேங்காய் எண்ணெயில் ஊர வைத்து 3 நாட்களுக்கு பின் தலைக்கு தடவி வர தலை குளிர்ச்சி பெரும்

3) காய்ந்த நெல்லிக்காயை பொடியாக்கி தேங்காய் எண்ணெய்யுடன் கொதிக்க வைத்து குளிப்பதற்கு முன் தலைக்கு தேய்த்தால் தலைமுடி கருமையாக மாறும்.

4) மாதுளம் பழச் சுளைகளை வேக வைத்து அதனுடன் இரண்டு தேக்கரண்டி தேன் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு குணமாகும்.

5) வெந்தயத்தை தேங்காய் பாலில் ஊர வைத்து அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் குறையும்

6) வாழைப்பழத்தை நல்லெண்ணெயுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூலம் தொந்தரவு குறையும்.

7) எலுமிச்சை சாறில் தேன் கலந்து தினமும் காலையிலும், இரவிலும் துங்கும் முன் குடித்து வந்தால் இருமல் குறையும்.

8) அத்தி இலை சாறெடுத்து வெண்ணெய் , தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க பித்தம் குறையும்.

9) அத்தி இலையை நன்கு அரைத்து மூட்டில் வைத்து தினமும் கட்டி வந்தால் மூட்டு வலி குறையும்.

10) அருகம்புல் சாறு தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

படம்

9ன் சிறப்பு தெரியுமா?

ஒன்பதின் தத்துவம்,என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்

Image result for 9ன் சிறப்பு தெரியுமா?


9ன் சிறப்பு தெரியுமா?
எண்களில் விசேஷமான எண்ணாக கருதப்படுவது ஒன்பது. அந்த எண்ணில் நீண்ட வாழ்வு எனும் அர்த்தம் பொதிந்திருப்பதாகச்சொல்கின்றனர்,

சீனர்களின் சொர்க்க கோபுரம்,ஒன்பது வளையங்களால்சூழப்பட்டுள்ளது. எகிப்து, ஐரோப்பா, கிரீக் முதலான நாடுகளும் 9-ஆம் எண்ணை விசேஷமாகப் பயன்படுத்திப்
போற்றுகின்றன. புத்த மதத்தில், மிக முக்கியமான சடங்குகள் யாவும் ஒன்பது துறவிகளைக் கொண்டே நடைபெறும். தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் சுத்தத்தை 999 என்றுமதிப்பிடுவார்கள்.

பெண்களின் கர்ப்பம், பூரணமாவது ஒன்பதாம் மாத நிறைவில்தான்!
ஒன்பது எனும் எண் இன்னும் மகத்துவங்கள் கொண்டது.
ஒன்பது என்ற எண்ணுக்கு வடமொழியில் நவம் என்று பெயர்.
நவ என்ற சொல் புதிய, புதுமை எனும் பொருள் உடையது.

புதன், 19 ஏப்ரல், 2017

பிரண்டை


பிரண்டையில் உள்ள மிகையான சுண்ணாம்பு சத்து(கால்சியம்) தான் எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க கால்சியம் தேவை அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடபட்டுள்ளது குறிப்பாக சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும் இதை எனது அனுபவத்தில் உணர்ந்தேன் ......

பிரண்டை உப்பை சுமார் 300mg தேனில் அல்லது நெய்யில் தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றபட்டு உடல் குறைப்பு ஏற்படுகிறது சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு முழுவதும் வெளியேறுவதை உடனடியாக உணரலாம்......

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல்(அ)உப்பை பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது அரு மருந்து.....

நிறைய குறைபாடுகள் பிரண்டையால் குணமாகும்போது எதற்கு கால்சியம் மாத்திரை சாப்பிட்டு சிறுநீரகத்தை பாழ் பண்ணனும் யோசிங்க.....

வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று போகர் ஏழாயிரத்தில் உள்ள குறிப்பை கவனிக்கவும் உலகிலேயே கடினமான பொருள் வைரம் தானே அதில் உள்ள கார்பன் பிணைப்பை உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு எனும்போது ........

இதற்கு மற்றொரு பெயர் "வஜ்ஜிரவல்லி" தேகத்தை வஜ்சிரமாக்கும் என்பதனால் தானோ என்னவோ....

வியாழன், 6 ஏப்ரல், 2017

இளஞ்சிவப்பு வைரம்



அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அரியவகை இளஞ்சிவப்பு வைரம்

உலகிலேயே மிகவும் அரியவகையில் காணப்படும் இளஞ்சிவப்பு நிறத்திலான வைரத்தினை அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
அவுஸ்திரேலியாவில் ரியோ டியட் நிறுவனம், ஆர்க்கிள் சுரங்கத்தில் வைரங்கள் தேடும் பணியில் 26 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் இதுவரை கண்டிராத வகையில் 12.76 காரட் இளஞ்சிவப்பு வைரத்தை கண்டுபிடித்தது.
இதுகுறித்து ரியோ டியரட் நிறுவனம் கூறிகையில், பொதுவாக இளஞ்சிவப்பு வைரம் கிடைப்பது மிகவும் அரிதானது என்றும் இதன் விலை 20 ஆண்டுகளில் பன்மடங்கு உயர்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வைரத்தினைப் பளபளப்பாக்கி வடிவமைத்தபின் இதன் மதிப்பு சர்வதேச நிபுணர்களால் நிர்ணயிக்கப்படும். பின்னர், ஆண்டு இறுதியில் ஏலம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு விற்கப்படும்.
அரிய வகை வைரமான இதன் ஒரு காரட் 4.9 கோடி(இந்திய ரூபாய்) வரைக்கும் அல்லது மொத்தமும் குறைந்தது 49 கோடிக்கு விற்பனையாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா ஒரு இஸ்லாமிய நாடு



அமெரிக்க ஹோம்லாண்ட் பாதுகாப்பு ஆலோசனை கவுன்சில் துறையின் உறுப்பினர், அமெரிக்காவை ஒரு இஸ்லாமிய நாடு என்று குறிப்பிட்டு டிவிட்டரில் பதிவு செய்த கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
முகமது எலிபியரி என்ற அந்த உறுப்பினர், அமெரிக்க ஐக்கிய நாடுகள் இஸ்லாமிய சட்ட முறைகளுள்ள இஸ்லாமிய நாடு என்று டிவிட்டரில் கூறியுள்ளார். இதனை வாஷிங்டன் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.
டிவிட்டரில் உறுப்பினர் ஒருவர், இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை சமமாக நடத்தும் ஏதாவது ஒரு இஸ்லாமிய நாட்டைக் கூறுங்கள் பார்ப்போம் என்று கேள்வி எழுப்பியதை அடுத்து. அதற்கு பதில் அளித்துள்ள எலிபியரி இவ்வாறு கூறியுள்ளார்.

பொன்மொழிகள்.....





  •  வற்றி போனால்தான், கிணற்றின் அருமை தெரியும். பிராங்க்ளின்.
  •  தொழில் இல்லாத கல்வி, நீரின்றி வாடும் தாவரத்தைப் போன்றது. போவீ. 
  •  வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை. அதேபோல வாழ்வில், உயர்வும் ஒரே நாளில் கிட்டி விடாது. அரிஸ்டாட்டில். 
  • நல்ல காரியங்களைச் செய்ய ஒருபோதும் பயப்படாதீர்கள்! தாமதமின்றி உடனே நல்ல காரியங்களைச் செய்யுங்கள்!- நெப்பொலியன் ஹில் 
  • தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழிநடத்திச் செல்லும்.- கன்ஃப்யூஷியன்
  • மாபெரும் செயல்களைச் செயல் வகையில் செய்து முடிக்க உறுதி எடுக்க வேண்டும் என்றால், உங்களுக்கு இன்றியமையாத முதல் மூலப் பொருளான, வெற்றிக்குத் தேவையான முதல் கூறான தன்னம்பிக்கை நெஞ்சில் பொங்கி வழிய வேண்டும். தடைகளையும், அவமதிப்புகளையும், தன்னம்பிக்கைதான் சமாளித்து அடித்துத் துரத்தி பொன்னாக நம்மை உருவாக்கும். நேர் வழி பாதுக்காப்பானது என்பதை உணர்த்தும். தன்னம்பிக்கையுடன், செயல்படுங்கள் அனைத்தையும் துணிச்சல்தான் சாதிக்கும்.- டாக்டர்ஜான்சன் 
  • உடைமையில் உரிமை கோருவது அல்ல அன்பு. உன்னையே காணிக்கையாகத் தருவதுதான் அன்பு கொள்வதன் பொருளாகும்- ஸ்ரீ அன்னை
  • கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள்!- சுபாஷ் சந்திரபோஸ்.
  • நீ என்ன நினைக்கிறாயோ அது உன்னால் இயலாமல் போகும்போது உன் ரத்தத்தில் ஜனித்த ஜீவன் அதைச் சாதித்துக் காட்டிவிடும்- கிரந்தம்.
  • பிறர் பாரத்தை தாங்க கை கொடுத்தால் நம் பாரத்தின் கனம் தானே குறைந்துவிடும் -அவ்பரி. 
  • கவலை நம் சவப்பெட்டிக்கு ஓர் ஆணி சேர்க்கிறது. கலகலவெனும் சிரிப்பு ஓர் ஆணியை கழற்றுகிறது -பீட்டர். 

லிச்சிப் பழத்தின் மருத்துவம்




  • சீனாவை பூர்விகமாகக் கொண்ட  லிச்சி பழம், இந்தியா, வங்கதேசம் போன்ற நாடுகளிலும் அதிகமாக விளைகிறது. இவை தவிர நெதர்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள், சவுதி அரேபியா, லெபனான், கனடா, ரஷ்யா மற்றும் ஏமன் நாடுகளில் இந்தப் பழம் விளைகிறது.

  • பலாப்பழம் போல வெளிப்புறம் பரபரவென கூர்மையான சிவப்பு நிற தோலைக் கொண்டிருக்கும்.
  • உள்புறம் நுங்கு போல கொழுகொழுவென இருக்கும் இந்த பகுதிதான் சாப்பிடக்கூடியது. இது இனிப்புச் சுவையுடன் இருக்கும்.
  • உடலுக்கு சக்தி அளிக்கக்வல்லதோடு இப் பழம் வைன் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
  • பழத்தின் உள்ளே, 2-3 செ.மி. நீளத்தில் இதன் வித்து இருக்கும். அதை சாப்பிடக்கூடாது. லிச்சி பழத்தில் கொழுகொழு சதைப்பகுதிதான் சத்துகளின் இருப்பிடம். இதில் விட்டமின் C சத்து அதிகம் உள்ளதால் தோல் மற்றும் எலும்புக்கு நல்லது.
  • கோடை காலத்தில் உடல் நோய் மற்றும் அலர்ஜி போன்றவற்றிற்கு எதிர்ப்பு சக்தியை அளிக்கக்கூடியது.
  • அதிக கலோரி இல்லை என்பதால், நீர்ச்சத்து மிகுந்தது முடியும் அளவு சாப்பிடலாம்.
  • இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதனால் மலச்சிக்கலைப் போக்குகிறது.

மனித கண்களை பற்றிய சில உண்மைகள்



1] ஒரு சராசரி மனிதன் நிமிடத்துக்கு பன்னிரண்டு முறை கண்
  சிமிட்டுவான்.

2] 2 மில்லியனுக்கும் அதிகமான வேலை செய்யும் பாகங்களை
   கொண்டது.

3] மனிதனுடைய கண் 576 மெகா பிக்சல்.


4] விழி வெண்படலம் திசுக்களுக்கு மட்டுமே ரத்தம் தேவை இல்லை.

5] இது 36000 பிட் தகவல்களை ஒரு மணி நேரத்திற்கு செயல்படுத்த   

   முடியும்.

6] மனிதனின் கண் விழிகள் ஏறத்தாழ 28 கிராம் எடை கொண்டது.

7] கண்ணை துறந்துகொண்டு இரும முடியாது.

8] மனிதன் ஒரு நாளைக்கு 10,000 முறை கண் சிமிடுகிறான்.

உலகின் முதல் மருத்துவமனை

   
பண்டைய கிரேக்க மக்கள் தமது கோவில்களை தற்காலிக மருத்துவமனையாகப் பயன்படுத்தி வந்தனர். மருத்துவர்களைப் போல கடவுள் நோயைக் குணமாக்குவரார் என்று நம்பினர்.
  பின்னாளில், ரோமானியர்கள் சிறந்த ராணுவ மருத்துவமனைகளை உருவாக்கினர்.
  ’ஹாஸ்பிடல்’ என்கிற ஆங்கில வார்த்தை ’ஹாஸ்பிடாலியா’ என்ற லத்தீன் வார்த்தையில் இருந்து தோன்றியது. அதற்கு,’விருந்தினர் தங்குமிடம்’ என்று பொருள்.

பாலிதானா கோயில்கள் - ஒரே மலையில் 900 கோயில்கள்!!!


குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள ஷத்ருஞ்சயா எனும் மலைகளில்தான் பாலிதானா கோயில்கள் என்று அறியப்படும் 900 ஜைனக் கோயில்கள் அமைந்துள்ளன. உலகிலேயே 900 கோயில்கள் உள்ள ஒரே மலையாக ஷத்ருஞ்சயா விளங்குகிறது. இந்தக் கோயில்கள் அனைத்தும் மார்பிள் கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் 3000-த்துக்கும் அதிகமான படிக்கட்டுகளை கடந்து சென்று இந்தக் கோயில்களை அடைவது ஒரு டிரெக்கிங் அனுபவம் போலவே இருக்கும். இங்கே இளம் பெண்கள் முதல் முதிய பெண்கள் வரை ஜைனத்துறவிகள், வெள்ளை நிற உடையில் காட்சியளிக்கின்றனர். இப்பெண் துறவிகள் தங்களுடைய தலைமுடியை தாங்களே ஒரு வகை செய்முறையால் பிய்த்து எறிவதாக சொல்லப்படுகிறது. இங்குதான் ஜைன மத தீர்த்தங்கரர்கள் நிர்வாணா எனும் சமாதி நிலையை எய்தியாகக் நம்பப்படுகிறது. இதன் காரணமாக ஜைன மத ஐதீகங்களின் அடிப்படையில் பண்டைய காலம் முதலே இந்த இடம் பாவ விமோச்சனம் அளிக்கும் புண்ணியத் தலமாக இடமாக கருதப்படுகிறது.


கோயில்கள்


            

கோயில்கள்  என்பவை  மன அமைதிக்கான  இடமே  தவிர  குறைகளை  கொட்டும்  இடமல்ல. நம்  முன்னோர்களின் சிற்ப  கலைகளை  கண்டு  ரசிக்கலாம். ஆனால், நாம்  அனைவரும்  அங்கும்  வணிகத்தையே  மேற்க்கொள்கிறோம். இந்த  நிலை  மாற  வேண்டும்.  மாறினால்  மட்டுமே  மூடநம்பிக்கைகளை  ஒழிக்க  முடியும். மன்னர்களின்  ஆட்சி  முறைகளை  கண்டு பெருமைப்பட  வேண்டும். இனிமேலாவது  கோயில்களை  மன  அமைதிக்கான  இடமாக  மட்டுமே  பாருங்கள்.  வணிகம்  செய்யும்  இடமாக  மாற்றாதிர்கள்.  

அடைமொழியால் குறிக்கப் பெறும் சான்றோர்கள்





1. தமிழ் தியாகப்பர்        -       பாபநாசம் சிவன்2. இன்தமிழ் ஏசுநாதர்      -      திருஞானசம்பந்தர்3. ஷெல்லிதாசன்          -      பாரதியார்4. முத்தமிழ்க் காவலர்     -      கி.ஆ.பெ.விசுவநாதம்5. தொண்டர் சீர் பரவுவார்  -      சேக்கிழார்6. விப்ர  நாராயணர்       -    தொண்டரடிப்  பொடியாழ்வார்7. குழந்தைக் கவிஞர்      -     அழ.வள்ளியப்பன்8. ஆட்சி மொழிக் காவலர் -     சி.இராமலிங்கனார்9. தமிழ்நாட்டு மாப்ஸான்  -     ஜெயகாந்தன்10. கவியோகி             -      சுத்தானந்த பாரதியார்

தமிழன் உருவாக்கிய அதிசயம் !!!





கும்பகோணம் "தாராசுரம்" கோயிலில் உள்ள " இசைப்படிகள் " இவை.

ஏழு படிகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கலை பொக்கிஷத்தில், மேலே உள்ள படியில் சிறிய கல்லை வைத்து விட்டால் அதுவே ஒவ்வொரு படியாக உருண்டு " ச,ரி,க,ம,ப,த,நி " என்ற சப்தஸ்வரங்களை எழுப்பும். ஒவ்வொரு படியிலும் ஒவ்வொரு ஸ்வரங்களை இது இசைக்கும்.

இதன் அருமைகளை அறியாத சிலர் இதன் மீது பெரிய பெரிய கற்களை போட்டு சோதித்ததால் இது சேதமடையத் தொடங்கியது. அதனால், இப்போது இந்த படிகளை சுற்றி இரும்பு வேலி அமைத்து பூட்டப்பட்டுள்ளது.

உள்ளே சென்று இதன் அருகில் புகைப்படம் எடுக்க மட்டும் இப்போது அனுமதிக்கப்படுகின்றது. இதன் இசையை கேட்க விரும்புவோர் கோயில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்றால், அவர்களே இசைத்து காண்பிக்கிறார்கள்.

இந்த கோயிலை கட்டியவர் " ராஜா ராஜா சோழன் " மகன் , " ராஜேந்திர சோழன் ". கும்பகோணத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் பயணித்தாலே இந்த பிரம்மாண்டமான அழிகிய கோயில் வந்து விடும் ".

காலடி அழுத்தம் மூலம் மின் உற்பத்தி..




காலடி அழுத்தம் மூலம் மின் உற்பத்தி காரைக்குடி கிட் அன்ட் கிம் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடிப்பு! (y)

மனிதனின் காலடி அழுத்தத்தை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும் சாதனத்தை, காரைக்குடி கிட் அன்ட் கிம் இன்ஜி., கல்லுாரி மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.

மின்சார தட்டுப்பாட்டை போக்குவதற்கும், புதுப்பிக்கத்தக்க மற்றும் புதுப்பிக்க இயலாத தொழில் நுட்ப முறைகள் பயன்பாட்டில் உள்ளன. ஆனால், பருவநிலை மாற்றம் மற்றும் பராமரிப்பு செலவு இதற்கு தடையாக உள்ளது. இதனை ஈடு செய்ய மனிதனின் காலடி அழுத்தம் மூலம் "பியோசோ எலக்ட்ரிக் சென்சார்' எனும் சாதனத்தை பயன்படுத்தி எளிதான முறையில், குறைந்த செலவில் மின் உற்பத்தி செய்ய முடியும் என்பதை கிட் அன்ட் கிம் கல்லுாரி மாணவர்கள் நிரூபித்துள்ளனர்.

பி.இ., இறுதியாண்டு மாணவர்கள் நிருபன்குணா, நரேந்திரன் கூறும்போது: "பியாசோ எலக்ட்ரிக் சென்சார்' என்பது இயந்திர ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் தன்மை கொண்டது. எங்களது கருவியில் நான்கு சென்சார்களை ஒரு சதுர அடியில் பொருத்தியுள்ளோம். இதன் மேல் அழுத்தம் கொடுக்கும்போது, ஒவ்வொரு சென்சாருக்கும் 5 வோல்ட் வீதம் 20 வோல்ட் மின்சாரம் சேமிக்கப்படுகிறது.

இந்த மின்சாரத்தை மின்கலத்தில் சேமித்து, அதன் வெளியீட்டில் தானியங்கி போக்குவரத்து ஒளி கட்டுப்பாட்டு அமைப்பை இணைத்து, வாகனங்களின் நெரிசலுக்கு ஏற்றவாறு சிக்னல்களை செயல்படுத்தலாம். இதன் மூலம் தடையில்லா மின்சாரம் குறைந்த செலவில் உற்பத்தி செய்ய முடியும், என்றனர். மாணவர்களை கல்லுாரிகளில் குழும தலைவர் அய்யப்பன், பொருளாளர் ராமசுப்பிரமணியன்,ஆசிரியர்கள் பாராட்டினர்.

பாப்கான் ஆபத்து..




தியேட்டர்ல இன்டர்வெல் விட்டா நம்மாளுங்க நேரா பாப்கான் ஸ்டாலுக் குத்தான் போறாங்க.இந்த பாப்கார்ன் எவ்வளவு ஆபத்தானது என்று யாருக்கும் தெரியறது இல்ல.
பாப் கார்ன் கொறிப்பது ஒரு நல்ல யோசனை தான் என்றால் கூட இந்த பாப்கார்னுக்கு மறுபக்கமும் உள்ளது. இந்த பாப்கார்ன் எனும் சோளப் பொரி மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோளத்தில் இருந்து தயார் செய்யப் பட்டவை. அதுமட்டுமின்றி பதப்படுத்தப்பட்ட உப்பு, பதப்பொருட்கள் போன்றவை சோளப்பொரியின் சுவையை அதிகப்படுத்துவதற்காக சேர்க்கப்படுகின்றன. மேலும் அதிக அளவில் சோடியம் மற்றும் பிற வேதிப் பொருட்கள் உடலுக்குத் தீங்கு விளைவிப்பவை. வெண்ணெய் சேர்த்த சுவையூட்டப்பட்ட சோளப்பொரி மேலும் மோசமான விளைவுகளைத் தருபவை.

சின்னப் பசங்க தியேட்டர்ல கேக்கிற முதல் ஐயிட்டமே இந்த பாப்கார்ன் தான்.. அதுவும் சில பேரு அடம்பிடிச்சு பட்டர் பாப்கார்ன் தான் வேனும்னு சொல்வாங்க. ஆனா இதுல சேர்க்கற வெண்ணைய் எங்கிருந்து வருதுன்னு கொஞ்சம் பார்த்தோமுன்னா பாப்கார்ன் வாங்கிக் கொடுக்கறதையே விட்டுடத்தோணும்.

பெரும்பாலான தனியார் வெண்ணைய் தயாரிப்பு நிறுவனங்கள் அசல் பாலில் தான் வெண்ணையை பிரித்தெடுத்து நமக்கு வழங்குகின்றார்கள் என நாம் இதுவரை நினைத்துக்கொண்டிருந்தால் நாம் உண்மையிலேயே ஏமாளிகள் தான்.
நமக்கு வருகின்ற பெரும்பாலான தனியார் நிறுவனங்களின் வெண்ணைய் பாக்கெட்டுகள் Margarine எனப்படும் செயற்கை வெண்ணெய் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்..?

ஒரு சின்ன பரிசோதனையைக் கொண்டு நாம் வாங்கியது ஒரிஜினல் பட்டரா அல்லது Margarine பட்டரா என்பதை தெரிந்து கொள்ளமுடியும் . ஒரிஜினல் பட்டர் என்றால் அது கீழே சிந்தினால் உடனே எரும்புகள் வந்து மொய்க்கும். இந்த செயற்கை பட்டரில் எரும்புகள் மொய்க்காது.. எரும்புக்கு தெரிந்தது கூட நமக்குக் தெரியவில்லையே..
பாலில் இருந்து தயாரிக்கப்படும் வெண்ணெய்க்கு பதிலாக மார்க்ரைன் எனப்படும் செயற்கை வெண்ணெய் ஹைட்ரஜனேற்றப்பட்ட டிரான்ஸ் கொழுப்பு நிறைந்தது ஆகும். இது உடலில் கொழுப்பு அளவுகளை கணிசமாக அதிகப்படுத்தி, நோய் எதிர்ப்பு திறனை மட்டுப்படுத்துகிறது.

பிரபல நிறுவனங்கள் கூட பட்டர் பிஸ்கெட் தயாரிக்கும்போது இந்த Margarine கொழுப்பைத்தான் பயன்படுத்துகின்றன என்பது கூடுதல் அதிர்ச்சித் தகவல். குழந்தைகளுக்குக் கொடுக்கும் போது நாளடைவில் இந்த கொழுப்பானது உடலில் படர்ந்து கேன்சர் செல்களை உற்பத்தி செய்யவும் வாய்ப்புண்டு சில மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

இந்த Margraine கொழுப்பினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதோடு எல்.டி.எல். கொழுப்பானது உடலில் அதிகமாகச் சேர்ந்து இரத்த நாளங்களில் படிந்து அளவுக்கு அதிகமான எடை மற்றும் இதயம் சம்மந்தமான நோய்களை இந்த செயற்கை வெண்ணைய் நமக்கு பரிசாகத் தருகின்றது.இதய நாளங்களில் இது படிவதால் இரத்தம் சீராக செல்வது கொஞ்சம் கொஞ்சமாக தடை படுகிறது.

இப்போது இந்தியச் சந்தையில் பெரும்பாலும் மரபணுமாற்றம் செய்யப் பட்ட உணவுப் பொருட்கள், செயற்கையாக இரசாயணம் கலந்து தயாரிக்கும் உணவுப்பொருட்கள் எவ்வித கட்டுபாடுமின்றி தாராளமாக புழக்த்தில் விடப்பட்டுவிட்டன. இவற்றை நாம் நம்மையறியாமலேயே வாங்கி உண்கின்றோம். கூடுமானவரை இந்த டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளையும் இப்படி இயற்கைக்கு மாறாக செயற்கையான பொருட்களை கொண்டு தயாரிக்கும் உணவுப்பொருட்களை வாங்கி உண்பதை தவிர்த்தாலே பல இனம் புரியாத நோய்கள் நம்மை தாக்குவதிலிருந்து தடுத்துக்கொள்ள முடியும்.

சாதனைப் பெண்கள்..





சுனிதா வில்லியம்ஸ்..

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். அமெரிக்காவில் உள்ள `நாசா' விண்வெளி ஆய்வு நிலையத்தில் பணிபுரிந்து வரும் இவர், சமீபத்தில் விண்வெளிப் பயணம் மேற்கொண்டு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடைந்தார். அங்கு பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட சுனிதா, 188 நாட்கள் தங்கியிருந்து புதிய உலக சாதனை படைத்தார். விண்வெளியில் மராத்தான் ஓட்டம், விண்வெளியில் அதிக முறை நடந்த வீராங்கனை என்று வேறு பல சாதனைகளையும் அங்கு நிகழ்த்தினார்.

சுருதி வதேரா

இங்கிலாந்தின் புதிய பிரதமரான கார்டன் பிரவுனின் அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு இந்தியாவை சேர்ந்த சுருதி வதேராவுக்கு வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார அறிஞரான இவர், சர்வதேச மேம்பாட்டுத் துறையில்,நாடாளுமன்ற துணை அரசு செயலர் பதவி இவருக்கு வழங்கப்பட்டது. இது துணை அமைச்சர் பதவிக்கு சமமானதாகும். நெல்சன் மண்டேலா, கார்டன் பிரவுன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்த அனைவருக்கும் கல்வித் திட்டத்தை உருவாக்கியவர் சுருதி வதேரா என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் கிரிக்கெட் தரவரிசையில் சிறந்த வீராங்கனை ஜுலான் கோஸ்வாமி

முதல்முறையாக மகளிருக்கான கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. அறிமுகம் செய்துள்ளது. இதில் பந்து வீச்சாளர் பட்டியலில் இந்தியக் கேப்டன் ஜுலான் கோஸ்வாமி முதலிடத்தைப் பெற்றுள்ளார். 2007-ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர்-வீராங்கனைக்கான விருதுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழங்கியது. ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் சிறந்த வீரருக்கான விருதையும், இந்திய வீராங்கனை கோஸ்வாமி சிறந்த வீராங்கனைக்கான விருதையும் பெற்றனர்.

சானியாவின் சாதனை

சானியா மிர்சா இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை. இப்பொழுது ஹைதராபாத்தில் வசிக்கிறார். டென்னிஸ் தர வரிசையில் இடம் பிடித்த இந்தியப் பெண்களில் மிக உயர்ந்த தரவரிசையை அடைந்தவர் சானியா மிர்சா. இந்திய அரசாங்கம் அவருக்குப் பத்மசிறீ விருது வழங்கிக் கௌரவித்துள்ளது.இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா.
இன்றைய இளம் பெண்களுக்கு முன்மாதிரி பெண் எனலாம்.

தமிழக விருதுகள்




ü  பாரத ரத்னா விருதுகள் ;
1.   சி. இராஜகோபாலச்சாரி   1954
2.   டாக்டர் சர்.சி.வி.ராமன்  1954
3.   கே. காமராஜர் ( இறப்பதற்குப் பின் )  1976
4.   எம்.ஜி. ராமச்சந்திரன் (இறப்பதற்குப் பின் ) 1988
5.   டாக்டர் ஏ,பி.ஜே. அப்துல்கலாம்  1997
6.   எம். எஸ். சுப்புலட்சுமி  1998
7.   சி. சுப்புரமணியம்  1988
ü  அய்யன் திருவள்ளுவர் விருது ;
2001-ம் ஆண்டில் அய்யன் திருவள்ளுவர் விருது பெருங்கவிக்கோ வா. மு.சேதுராமன் அவர்களுக்கு வழங்கப்பட்டது . ரூ. 1 லட்சம் பரிசும் , தங்கப்பதக்கமும் அடங்கும் . இவ்விருது அன்றைய தமிழக முதல்வர் திரு. மு. கருணாநிதி அவர்களால் 15-01-2001 அன்று சென்னையில் வழங்கப்பட்டது. இதுவரை இவ்விருது பெற்றுள்ளவர்களின் விவரம் ;
1.    தவத்திரு, குன்றக்குடி அடிகளார்  1986
2.   திரு. கி. ஆ. பெ. விசுவநாதம்  1987
3.   திரு. ச. தண்டபாணி தேசிகர்  1988
4.   திரு. வ. சுப. மாணிக்கம்  1989
5.   திரு. கு. ச. ஆனந்தன்  1990
6.   திரு. சுந்தர சண்முகனார்  1991
7.   திரு. நாவலார் நெடுஞிசெழியன்  1992
8.   திரு. கல்லை தே. கண்ணன்  1993
9.   திருக்குறளார் திரு. வீ. முனுசாமி  1994
10. திருமதி. சு. சிவகாமசுந்தரி  1995
11. முனைவர். மு. கோவிந்தசாமி  1996
12. முனைவர். கு. மோகனராசு  1997
13. முனைவர். இரா. சாரங்கபாணி  1998
14. முனைவர். வா. செ. குழந்தைசாமி  1999
15. திரு. வ. மு. சேதுராமன்  2001
16. திரு. த. சி. கண்ணன்  2000
                 குறள்பீட விருது
தமிழக அரசால் நிறுவப்பட்ட இவ்விருது ரூ.2லட்சம் பரிசு மேற்கொண்டதாகும் வாழ்நாள் சாதனைக்காக தமிழறிஞர் அ.ச. ஞானசம்பந்தனுக்கு குறள்பீட விருதை அன்றைய தமிழக முதல்வர் திரு.மு.கருணாநிதி அவர்கள் 15-01-2001 அன்று சென்னையில் வழங்கினார். குறள்பீட வரிசாக ரூ.25ஆயிரம் வழங்கப்பட்டுள்ளவர்களில்
ஈரோடு தமிழன்பன் (கவிதை), மணவைமுஸ்தபா (அறிவியல்), தே.லூர்து (நாட்டுப்புறவியல்), சேஷநாராயணா (மொழி பெயர்ப்பு), கவிஞர்இளவேனில் (திறனாய்வு), சு.ப.செல்வம் (குழந்தை இலக்கியம்),
பா.அண்ணாத்துரை(சிறுகதை), கலைசெழியன் (பொதுக்கட்டுரை), இரா.கீதாராணி (புதினம்), செ.செந்தில்குமார் (மொழிப் பெயர்ப்பு), ஆகியோருக்கு குறள்பீடப் பாராட்ட இதழும், தலா ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டன.


தமிழ்நாட்டின் பிறவிருதுகள்;
     இராஜராஜன் விருது – தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக் கழகத்தால் வழங்கப்படுகிறது.
தமிழ்ச்செம்மல் விருது ;
     மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தால் வழங்கப்படுகிறது.
திருவள்ளுவர் விருது, திரு.வி.க. விருது, பாரதியார் விருது, பாரதிதாசன் விருது, கி.ஆ.பெ.விருது ;
தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை ஒவ்வொன்றுக்கும் சான்று மற்றும் ரூ.1 லட்சம் ,ரெக்கமும் வழங்குகிறது. சிறந்த, நமிழ் நூல்கள் பரிசு ( முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.5,000, மூன்றாம் பரிசு ரூ.2,000 ). தமிழ் வளர்ச்சித்துறை ( 24 துறைகள் சம்பந்தப்பட்ட புதிய நூல்களுக்கு ) வழங்குகிறது.
    தமிழ்நாடு விஞ்ஞானி விருது ;
தமிழ்நாடு விஞ்ஞான தொழில் நுட்பக்கழகம் வழங்குகிறது.
    டாக்டர்.எஸ்.ராதாகிருஷ்ணன் நினைவு விருது ;
தமிழ்நாடு கல்வித் துறையால் சான்று, வெள்ளிப் புத்தகம் மற்றும்          ரொக்கம் ரூ.2,000 வழங்கப்படுகிறது.
    கலைமாமணி விருது ;
           பொற்பதக்கம், பொற்கிழி, சுழுற்கேடயம் மற்றும்கேடயம் இயல்      இசை – நாடக மன்றத்தால் வழங்கப்படுகிறது.
    பொரியார் விருது ;
பிற்பட்டோர் நலத்துறையால் சான்றும் மற்றும் ரொக்கம் ரூ.1    இலட்சம் வழங்கப்படுகிறது.
    
டாக்டர் அம்பேத்கர் விருது ;
ஆதி திராவிடர் நலத்துறையால் வழங்கப்படும்.


 .



இந்திய ஆராய்ச்சி நிறுவனம்



Image result for research centre in india

இந்திய ஆராய்ச்சி நிறுவனம்
அமைந்துள்ள இடம்
தேசியஇயற்பியல்
புதுடெல்லி
தேசியகடலியல்
கோவா
தேசியவேதியியல்
புனே
மத்தியஉப்புமற்றும்கடல்சார்ந்தவேதியியல்
பாவ்நகர்,குஜராத்
மத்தியஎரிபொருள்மற்றும்
தான்பாத்
இந்தியவேதியியல்தொழில்நுட்பக்கழகம்
ஹைதராபாத்
இந்தியபெட்ரோலியம்
டேராடூன்
மத்தியஉணவுதொழில்நுட்பம்
மைசூரு
மத்தியமருந்து
லக்னோ
தேசியதாவரவியல்ஆய்வு
லக்னோ
மத்தியசெல்லியல்மற்றும்உயிரியல்
ஹைதராபாத்
தொழிலியல்விஷம்
லக்னோ
மத்தியகட்டிடம்
ரூர்க்கி
மத்தியசாலை
புதுடெல்லி
மத்தியசுரங்கம்
தான்பாத்
தேசியஉலோகவியல்
ஜாம்ஷெட்பூர்
மத்தியஇயந்திரவியல்என்ஜினீயரிங்
துர்காபூர்
தேசியசுற்றுப்புறச்சூழல்
நாக்பூர்
தேசியவானவியல்
பெங்களூரு
மத்தியகண்ணாடிமற்றும்மண்பாண்டம்
கொல்கத்தா
மத்தியகடல்மீன்வளம்
ராமேஷ்வரம் (தமிழ்நாடு)
மத்தியஅரிசி
கட்டாக் (ஒடிசா)
மத்தியதேங்காய்
காயாங்குளம் (கேரளா)
இந்தியஅறிவியல்
பெங்களூரு
தேசியஇயற்பியல்
புதுடெல்லி
இந்தியவிண்வெளி
தும்பா (கேரளா)