விண்ணுக்கு
சென்றாலும் – எங்கள்
கண்ணுக்குள் வாழ்கிறீர்
அப்துல் கலாம்
கடைக்
கோடி கடல் மணலில் கால் பதிந்து
உழைப்பால்
வட கோடியின் உச்சம் தொட்ட
உன்னத
தலைவர் – நீர்…,
காலன்,
நேசிக்கும்
இதயங்களோடு – நீர் பேசிக்கொண்டிருக்கும் போதே
எங்களிடமிருந்து
பிரித்து விட்டான்
தூங்காமல்
செய்வது தான் கனவு என, கனவுக்கு முப்பரிம்மாணம் தந்தீர்!
உம்
இளைஞர்களை கடந்த ஓராண்டுகளாய் தூங்காமல் செய்திருக்கீறீர்
உம்
இறப்பும் கனவு தானோ?
நீர்
பூமிக்குள் விதைக்கப்பட்டிருக்கலாம்
புன்னகைக்கும்
உம் இதழ்கள் எங்கள் மாணவர்கள், இளைஞர்கள்
இதயத்துக்குள்
வாழ்ந்து கொண்டிருக்கின்றன….
ஏவுகணையில்
ஏற்றினாய் தமிழின் பெருமை
உம்மை
நினைப்பது எங்களின் பெருமை……