ஆடுகளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆடுகளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 1 மார்ச், 2016

நில்,கவனி,சொல்..!! (சுற்று-1)


Image result for கேள்விகள் குறி

அன்புடையீருக்கு வணக்கம்,

இன்று முதல் எங்கள் கல்லூரி வலைப்பூவின் ஆடுகளத்தில் விளையாடி நட்சத்திரனராக முயற்சி செய்யுங்கள் நட்பு பூக்களே..!!தங்களின் திறமை வெளிப்படுத்த அமைந்த இக்களத்தை பயனுள்ளதாக மாற்றுங்கள்..!!

1.இந்திய வேதங்களை முதன்  முதலில் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தவர் யார்..??
அ) ஜியு போப்          ஆ) வீரமாமுனிவர்
இ)மாக்ஸ் முல்லர்   ஈ) யாருமில்லை

திங்கள், 22 பிப்ரவரி, 2016

நீங்களும் நட்சத்திரமாகலாம்..




அன்புடையீருக்கு வணக்கம்.

கடந்த இரு நாட்களாக  சிந்தனைச் செய்து பலமுறை என்னுள் கேள்விகளைக் கேட்டு இந்த  பதிவை இப்பொழுது வெளியிடுகிறேன்.தலைப்பு பார்த்ததுமே சிலருக்கு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன் நண்பர்களே.ஆம் இது ஒரு விளையாட்டு தான்.இதன் தலைப்பு  “நில்,கவனி,சொல்”.சிந்தனையின் ஆடுகளமாக அமைய உள்ளது நண்பர்களே. வருகிற மார்ச்  1 தேதி முதல் தொடங்க உள்ளது.

விளையாட்டு   நிரல்;

1.மொத்தம் பத்து சுற்றுகள்.

2.ஒவ்வொரு சுற்றுக்கும் 5 கேள்விகள்.

3.அனைத்தும் வெவ்வேறு துறை மற்றும் சிந்திக்க வைக்கும் கேள்விகள்.

4.இதில் முதல் சுற்றில் விடையளிக்கும் நபர்கள் அடுத்தச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

5.இதில் வெற்றிப் பெறும் வெற்றியாளர்கள் எங்கள் வலைப்பூவில் தொடர்ந்து ஒரு வாரம் நட்சத்திரம்  என்ற சிறப்பு  இடத்தை தரவுள்ளோம்.

6.மேலும் இந்த கேள்விகள் அனைத்தும் போட்டித்தேர்வுகளும் உதவும் வகையில் அமையும்.

7.இது ஒரு விளையாட்டாக கருதாமல்,தங்களின் சிந்தனைக்கான ஒரு ஆடுகளமாக கருதி பதில் அளிக்கலாம்.

8.இதன் மூலம்  உங்களை அடையாளப்படுத்திக் கொள்ள இயலும்.

9.கேள்விகள்  அறிவிக்கப்பட்ட  நேரத்தில் இருந்து  அடுத்த  நாள் மாலைக்குள்  விடைகளைத்  தெரிவிக்க வேண்டும்.

10.மொத்தம் 50 வினாக்கள்,சரியாக விடையளிக்கும் முதல் 3 நபர்கள் சிறப்பு  நட்சத்திரங்களாகவும்,பிறகு வரும் 2 நபர்கள் சிறந்த  பங்கேற்பாளராகவும் அறிவிக்கப்படுவர்.

முடிவு;

இது என்னுடைய சிறிய முயற்சி தான்.நான் இது விளையாட்டாக மட்டும் கருதவில்லை.எத்தனை நபர்கள் இதுப் போன்ற களத்தை உபயோகித்து தன்னை அடையாளப்படுத்த முன் வருகிறார்கள் என்று காண ஆவலாக உள்ளேன்.அனைவரும் ஆர்வத்தோடு  கலந்துக் கொண்டு தங்களின் சிந்தனைக்கான ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்ளுங்கள் நண்பர்களே..!என்ன தயாராயிட்டிங்களா..??தங்களின் வெற்றி என்னுடைய முயற்சி  நண்பர்களே.

அனைவரும் வந்து பயன்பெறவும்.வெற்றி தோல்வி என்பது இயல்பே.தோல்வி வெற்றியின் ஏணிப் படி,வெற்றி தோல்வியில் இருந்து கற்றுக் கொண்ட பாடம்.இதுவே வித்தியாசங்கள்.

வெற்றி வாகை சூடிட தயாராகுங்கள்.விரைவில் சந்திப்போம்..!!வாழ்த்துகள் நண்பர்களே..!!