வைதேகி வணிகவியல் கணினி பயன்பாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வைதேகி வணிகவியல் கணினி பயன்பாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

தத்துவத் துளிகள்


   தத்துவ  துளிகள் 
சை, கோபம், களவு, கொண்டவன்
        பேசத் தெரிந்த மிருகம்.
அன்பு, நன்றி, கருணை கொண்டவன்
        மனித வடிவில் தெய்வம்.   
                                       
1.  நம்பிக்கை இழக்காதே, அவநம்பிக்கையானது அறிவு, ஒழுக்கம் ஆகியவைகளுக்கு வீழ்ச்சியாகும்.
2.  செயற்கரிய செயலை துவக்கி வைப்பது நல்லறிவு அதை நிறைவேற்றி வைப்பது இடையறாத உழைப்பு.
3.  சினத்தை விட்டவன் எந்நாளும் துன்பப்படுவதில்லை. பேராசையை விட்டவன் பேரின்பம் அடைகிறான்.
4.  தேவைகள் குறையும் அளவுக்கே, தெய்வத் தன்மை அடைவோம்.
5.  பொறாமையில்லாதவனிடம் தத்துவ ஞானம் இருப்பதில்லை.
6.  ஒரு மனிதன் எப்படி இறந்தான் என்பது முக்கியமன்று, அவன் எப்படி வாழ்ந்து வந்தான்  என்பதுதான் முக்கியம்.
7.  துன்பம் இல்லாமல் வெற்றியில்லை, முயற்சியில்லாமல் பெருமையில்லை.
8.  செல்வத்தை உண்டாக்குவது உழைப்பு, எல்லா செல்வதையும் இயக்குவதும் அதுவே.
9.  பாவத்திற்கு பல கருவிகள் உண்டு,ஆனால் அவற்றிற் கெல்லாம் பொருத்தமான கைப்பிடு பொய்…
10.         அறிவு தெளிவுபெற வைக்கிறது, தெளிவு துணிவைத் தருகிறது, வேறென்ன வேண்டும்.
11.         மனிதனின் அறிவு உறங்கினால் கீழான இச்சைகள் கண் விழித்தெழுந்து குதியாட்டம் போடும்.

இலட்சியம்



                       இலட்சியம்

   …ஒரு  சீடன் தன் குருவிடம் சென்று, ‘ஐயா,எனக்கு ஆன்மீகம் வேண்டும்’ என்றான், குரு அந்த இளைஞனைப் பார்த்து அமைதியாகப் புன்முறுவல் பூத்தார், எதுவுமே பேசவில்லை. இளைஞன் ஒவ்வொரு நாளும் வந்து தனக்கு ஆன்மீகம் வேண்டுமென வற்புறுத்தினான். அந்த முதியவர் இளைஞனை விட விஷயம் தெரிந்தவர். ஒரு நாள் வெயில் கடுமையாக இருந்தது. அன்று அவர் அந்த இளைஞனைத் தம்மோடு ஆற்றுக்கு நீராட அலைத்துச் சென்றார். அவன் நீருக்குள் இறங்கி மூழ்கியதும், முதியவர் அவனைப் பிடித்து, பலவந்தமாக நீருனுள் அமிழ்த்தி வைத்துக் கொண்டார். அவன் திணறிப்போய் வெளியே வரப் போராடினான். சிறிது நேரம் அவர் விடவே இல்லை. பிறகு அவனை விட்டார். சோர்ந்துபோய் தலையை மேலே துக்கினான் அவன், அப்போது அவர் அவனிடம், ‘நீரினுள் இருந்த போது உனக்கு மிகவும் தேவையாக இருந்த்து எது? என்று கேட்டார். மூச்சுக் காற்று என்றான் சீடன். ‘ஆம்’ இறைவன் வேண்டும் என்று அவ்வாறே  நீனைக்கிறாயா?  அவ்வுளவு தூரம் இறைவனின் தேவையை உணர்ந்தாயானால் அவனைப் பெறுவாய்’ என்றார் குரு.
    அந்தத் தாகம் , அந்த ஆசை எழும்வரை, உன் அறிவாலோ, உனது சாஸ்த்திரங்கரலோ, உருவங்கலோ, நீ எவ்வுளவு தான் பாடுபட்டாலும் ஆன்மீகத்தைப் பெற முடியாது.அந்தத் தாக்கம் உன்னிடம் எழும் போது,நீ நாத்திகனைவிட மேலானவன் அல்ல. நாத்திகன் நேர்மையாகவாவது இருக்கிறான். உன்னிடம் அதுவும் இல்லை.
            
   
                              
 2-ம் ஆண்டு வணிகவியல் கணினிப்பயன்பாட்டுத் துறை
                        து.வைதேகி.                                   

முதல் பெண் மருத்துவர்



                  முதல் பெண் மருத்துவர்
                   [ஆனந்திபாய் ஜோஷி (1865 -1887)]
                                
இந்தியாவில் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையைப் பெற்றவர் ஆனந்தி பாய் ஜோஷி. ஐரோப்பிய மருத்துவத்தில் முதன்முதலாக பட்டம் பெற்ற இரு இந்தியப்பெண்களில் ஒருவர் ஆனந்தி பாய் ஜோஷி, மற்றொருவர் கடம்பினி கங்கூல .
முதல் பெண் மருத்துவரான ஆனந்தி பாய் ஜோஷியின் வாழ்க்கை வரலாறு குறுத்த தகவல்கள் காண்போம்.
மராட்டிய மாநிலத்தில் பூனாவில் பிராமணக்குடும்பத்தில் 31.0.1865-ம் ஆண்டு பிறந்தார் யமுனா. ஆனந்தி பாய் ஜோஷியாக புகழ்பெற்றவருக்கு
பெற்றோர் முதலில் சூட்டிய பெயர் யமுனா, இவருக்கு 9 வயதாக இருந்தபோது இவரைவிட 20 வயது மூத்தவரான கோபால் ஜோஷி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர் அஞ்சல் துறையில் குமாஸ்தாவாக பணிபுருந்தார். முற்போக்கு வாதியான கோபால் ஜோஷி தனது மனைவியின் பெயரை ஆனந்தி என்று மாற்றினார். மேலும் தன் மனைவியை கல்வி கற்கும் படியும் ஆர்வமூட்டினார். இதைத் தொடர்ந்து ஆனந்தி ஆங்கிலம் மற்றும் பிறகல்வியையும் ஆர்வமுடன் கற்றுக்கொண்டார். 14 வயதாக இருந்த போது ஆனந்தி ஆண் குழந்தை ஒன்றை பெற்றார். அக்குழந்தை போதிய மருத்துவ வசதி இல்லாத காரணத்தால் 10 நாட்களில் மரணம் அடைந்துவிட்டார்.
     மேலும் அப்போது ஆனந்திக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அந்தக்காலத்தில் மருத்துவர்கள் மிகவும் குறைவாகவே இருந்தனர், அதிலும் பெண் மருத்துவர்கள் என்று யாருமே இல்லை.
     எனவே மருத்துவம் படித்து தான் ஒரு சிறந்த மருத்துவராக வேண்டும் என்று ஆனந்தி விரும்பினார் .  இதற்கு அவரது கணவரும் ஆதரவு அளித்தார். ஆனால் அந்தக்காலத்தில் குடும்பக்கட்டுப்பாடு , சழூக கட்டுப்பாடுகள் நிறைய இருத்தன. பெண்கள் கல்வி கற்கும் வாய்ப்பு அதிகமாக இல்லாமல் இருந்த்து . அது போன்ற நிலையில் ஒரு பெண் வெளிநாடு சென்று மருத்துவம் படிப்பது என்பது மிகவும் சவாலான காரியமாக இருந்தது.
     இருப்பினும் கணவரின் உதவியுடன் அத்தனை தடைகளையும் அவர் தாண்டினார். ஆனந்தியின் மருத்துவக்கல்வி ஆர்வத்திற்கு உதவ அமெரிக்க குடும்பம் ஒன்று உதவி செய்தது. இதையடுத்து 1883-ம் ஆண்டு ஆனந்தி தனியாக அமெரிக்க சென்றார். கொல்கத்தாவில் இருந்து நியூயார்க் நகருக்கு கப்பலில் சென்றார். பின்னர் பென்சில்வேனியாவில் உள்ள பெண்கள் மருத்துவகல்லுரியில் சேர்ந்தார். ஆனந்திபாய் மருத்துவக்கல்லுரியில் சேர்ந்த போது அவருக்கு வயது 19. அமெரிக்காவின் கடுங்குளிரும், பழக்கமில்லாத உணவு வகைகளும் அவரது உடல்நலத்தை மிகவும் பாதித்தன. காச நோய் அவரைத் தாக்கியது. இதுபோன்ற பல்வேறு தடைகளையும், துன்பங்களையும் நாண்டி அவர் 1886-ம் ஆண்டு மருத்துவ பட்டம் பெற்றார். அப்போது அவருக்கு விக்டோரியா ராணு வாழ்த்துச்செய்தி அனுப்பி கவுரவித்தார்.
     1886 இறுதியில் ஆனந்திபாய் இந்தியா திரும்பினார். கோலாப்பூர் சமஸ்தானத்தில் உள்ள மருத்துவமனையில் பெண்கள் மருத்துவப்பிரிவில் பொறுப்பு மருத்துவராக நியமிக்கப்பட்டார். ஆனால் அவரது உடல் நிலை நாளுக்கு நாள் மோசமானது. அவரைத்தாக்கிய காச நோய் முற்றியதால் “1887-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந் தேதி மரணம் அடைந்தார். மரணம் அடைந்த போது ஆனந்தியின் வயது 22 தான். மரணப்படுக்கையில் இருந்த போது ‘என்னால் முடிந்த அளவு நான் செய்துவிட்டேன் ‘ என்று ஆனந்தி கடைசியாக கூறினார்.”
                     
             2-ம் ஆண்டு வணிகவியல்  கணினிப்பயன்பாடுத் துறை
                                       வைதேகி.து