விழிப்புணா்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விழிப்புணா்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

ஜிகா வைரஸ் – உலக சுகாதர அமைப்பு எச்சரிக்கை



ஜிகா வைரஸ் உலக சுகாதர அமைப்பு எச்சரிக்கை

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும்ஜிகாவைரஸ் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பரவக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, கரிபீயன் நாடுகளில் ஜிகா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. அமெரிக்காவின் சில பகுதிகளிலும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 25 நாடுகளில் வைரஸ் பாதிப்பு உள்ளது. அந்த நாடுகளில் 40 லட்சம் பேர் பாதிக் கப்பட்டுள்ளனர். இதில் பிரேசி லில் மட்டும் 15 லட்சம் பேர் உள் ளனர். ஜிகா வைரஸ் பாதித்த கர்ப்பிணிகளுக்கு சிறிய தலை, மூளை பாதிப்பு, பார்வை குறை பாடு, நரம்பு மண்டல பாதிப்பு களுடன் குழந்தைகள் பிறக் கின்றன. இதனால் இப் போதைக்கு பெண்கள் கருத் தரிக்க வேண்டாம் என்று பிரேசில் உள்ளிட்ட நாடுகள் அறிவுறுத்தி யுள்ளன. ஜிகா வைரஸால் பாதிக்கப் பட்டவருக்கு காய்ச்சல், மூட்டுவலி, கண்களில் எரிச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படுகின்றன. இந்த வைரஸால் இதுவரை யாரும் உயிரிழந்ததாக தகவல் இல்லை. ஆனால் இதன் பாதிப்புகள் உலக நாடுகளை அச்சுறுத்துகின்றன.

பக்கவாதம் ஏற்படும்

ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மூளை பாதிக்கப் பட்டு அவர்களுக்கு பக்கவாதம் ஏற்படுகிறது. குழந்தைகள் குறை பாடுகளுடன் பிறக்கின்றன. இதுவரை இந்த வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் முறையான சிகிச்சை அளிக்க முடியவில்லை.

இந்தியாவுக்கு எச்சரிக்கை

டெங்கு, சிக்குன்குனியா காய்ச் சலுக்கு காரணமான ஏடிஎஸ் கொசுக் களே ஜிகா வைரஸையும் பரப்பி வருகின்றன. இதனால் இந்த வகை கொசுக்கள் அதிகமா காணப்படும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில்  வைரஸ் பரவக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச் சரிக்கை விடுத்துள்ளது.
ஜிகா உடல் உறவு மூலமும் ஜிகா வைரஸ் பரவுவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. எனவே வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது. தென்அமெரிக்க நாடுகளில் இருந்து தாய்லாந்து, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளிலும் ஜிகா வைரஸ் பரவியிருப்பது அண்மை யில் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இந்தியா மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக கர்ப்பிணிகள், லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐஎம்ஏ) அறிவுறுத்தியுள்ளது.
மருத்துவக் குழு நியமனம்


உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து ஜிகா வைரஸ் பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா டெல்லியில் நேற்று உயர் நிலை ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.அதன்பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: எந்த சூழ்நிலையை யும் சமாளிக்கும் திறன் இந்தியா வுக்கு உள்ளது. ஜிகா வைரஸ் பாதிப்பு குறித்து கண்காணிக்க மருத்துவ நிபுணர் குழுவை நிய மிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச நிலைமையை உன்னிப் பாகக் கவனித்து வருகிறோம்.சுத்தமான நீரில் உற்பத்தியாகும் எடிஎஸ் கொசுக்களை அழிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் படும். இதுதொடர்பாக நாடு முழுவ தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பிரேசில் ஒலிம்பிக் போட்டி நடக்குமா?

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன. இதில் 206 நாடுகளை சேர்ந்த 10,500 வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.தற்போது அங்கு ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. போட்டியை காண லட்சக்கணக்கான ரசிகர்கள் பிரேசிலில் கூடுவார்கள். அவர்கள் மூலம் உலக நாடுகள் அனைத்திலும் ஜிகா வைரஸ் பரவக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எனினும் ஜிகா வைரஸ் காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படாது என்று ரியோ ஒலிம்பிக் நிர்வாகக் குழு செய்தித் தொடர்பாளர் மரியா அண்ட்ரடா கூறியுள்ளார்.