தமிழர் திருநாள் விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழர் திருநாள் விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 10 ஜனவரி, 2017

யார் இந்த விவசாயி..???








1031 - சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது.
1032 - உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா
தெழுவாரை எல்லாம் பொறுத்து.
பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும்.
1033 - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது.
1034 - பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.
பல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள்.
1035 - இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.
தாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர், பிறரிடம் சென்று கையேந்த மாட்டார், தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவார்.
1036 - உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேமென் பார்க்கும் நிலை.
எல்லாப் பற்றையும் விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகள்கூட உழவரின் கையை எதிர்பார்த்துதான் வாழ வேண்டும்.
1037 - தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.
ஒருபலம் புழுதி, காற்பலம் ஆகிற அளவுக்குப் பலமுறை உழுதாலே ஒரு பிடி எருவும் தேவையின்றிப் பயிர் செழித்து வளரும்.
1038 - ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.
உழுவதைக் காட்டிலும் உரம் இடுதல் நல்லது; களை எடுப்பதும், நீர் பாய்ச்சுவதும் மிகவும் நல்லது; அதைவிட நல்லது அந்தப் பயிரைப் பாதுகாப்பது.
1039 - செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்
தில்லாளின் ஊடி விடும்.
உழவன், தனது நிலத்தை நாள்தோறும் சென்று கவனிக்காமல் இருந்தால், அவனால் வெறுப்புற்று விலகியிருக்கும் மனைவிபோல அது விளைச்சலின்றிப் போய்விடும்.
1040 - இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.
வாழ வழியில்லை என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி புரிவாள்.

இத்தகைய உழவனையும் உழவுத் தொழிலையையும் எண்ண மறக்கலாமா..?? 

வெள்ளி, 15 ஜனவரி, 2016

உழவுக்கு உயிரூட்டுவோம்..!!!


முன்னுரை;

உணவு, உடை, இருப்பிடம் என்பது குடிசையில் இருந்து மாட மாளிகையில் வாழ்பவர்கள் அனைவரது அடிப்படைத் தேவைகள் ஆகும்.பூமி எப்படி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறதோ அதுபோல தான் விவசாயியும் தனக்கு வேண்டிய உணவை உற்பத்திச் செய்துவிட்டு பிறருக்கும் உணவை உற்பத்திச் செய்து தருகின்றனர்.இப்படிப்பட்ட விவசாயின் உழவுக்கு உயிரூட்வோம் என்ற வகையில் சில கருத்துகளை காண்போம்.

உழவு என்பதன் பொருள்;

உழவு தொழில் அல்லது விவசாயம் அல்லது கமம் என்பது உணவு மற்றும் பிற பயன்பாடுகளுக்காக சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும் கால்நடைகளை வளர்பதையும் குறிக்கும்.வேள் என்னும் சொல்லின் அடியாகப்  பிறந்த வேளாண்மை எனும் சொல் பொதுவாக கொடை,ஈகை ஆகியவற்றைக் குறிக்கும்.நிலமானது தரும் கொடையால் தான் இப்பெயர் வழங்கியிருக்கலாம்.வேளான் என்னும் சொல் வெள்ளத்தை ஆள்பவன் என்றும் பொருளது என்பர்.வேளாண்மை என்ற சொல் விருப்பத்துடன் பிறரைப் பேணுதல் என்ற பொருளும் உண்டு.

நெல் உற்பத்தி தொடக்கம்;

கி.மு.7000 நூற்றாண்டில் கோதுமை மற்றும் பார்லி வகைப் பயிரிடப்பட்டன.பிறகு தான் கோதுமையை விட நெல் (அரிசி) அதிகளவில் பயிரிடப்பட்டன.கடந்த நமது முன்னோர்கள் காலத்தில் சுமார் 4,00,000 இலட்சம் நெல் வகைகள் பயிரிடப்பட்டன.ஆனால் இன்று 130 நெல் வகைகள் மட்டும் தான் பயிரிப்படுக்கின்றன என்பது எவ்வளவு கசப்பான உண்மை.

உழவுக்கு சான்றோர் தந்த சான்றுகள்;

உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்பது பழமொழி.ஆம் அனைவரும் கணக்கு பார்பது  போல உழுகின்றவனும் கணக்குப் பார்த்தால் உணவு கூட மிஞ்சாது.

செங்கோல் நடத்துவது உழவனின் ஏரடிக்கும் சிறுகோல் என்றுரைத்தார் கம்பர்.

உலகம் என்னும் தேருக்கு உழவனே அச்சாணி என்றுரைத்தார் வள்ளுவர்.

இந்தியாவின் முதுகெழும்பு விவசாயம் என்றுரைத்தார் அண்ணல் காந்தி.

ஔவையார், இளவரசரே வாழ்க என்று வாழ்த்தவில்லை.அரசே  உன் வரப்புகள் உயர்க என்று தான் வாழ்த்துவார்.காரணம், வரப்புயர நீருயரும்,நீருயர நெல்லுயரும்,நெல்லுயர குடியுயரும்,குடியுயர கோனுயர்வான் என்ற உம்மையை உவமையாக கூறுவார்.

ஏன் அண்மையில் விதைக்கப்பட்ட அ.ப.ஜெ.அப்துல் கலாம் ஐயா கூட இந்தியா வல்லரசு அடைய வேண்டும் என்றால் விவசாயம் மேன்மை அடைய வேண்டும் என்றுரைத்துச் சென்றனர் நம் சான்றோர்கள்.

நீரின்றி அமையாது உழவு;



என்னடா நீரின்றி அமையாது உலகு என்று தானே வள்ளுவர் கூறிப் படித்திருந்தோம்.இப்போ வேற மாறி இருக்கே என்று நினைக்கத் தோன்றுகிறதா..??உண்மை தான் இனி வரும் காலத்தில் நீரின்றி அமையாது உழவு என்பது மிகைதான்.காவேரியிலும்  நீரில்லை நிலத்தடி நீரும் இல்லை.பிறகு எப்படி உழவு செய்து அறுவடை செய்வது..??இயலாத ஒன்று தான்.

ஒரு உதாரணம்;

சாணத்தை சாணமாக விற்றால் கிலோவிற்கு ஒரு(1) ரூபாய்.அதே சாணத்தில் இருந்து பயோ கேஸ் ஆக பிரித்து விற்றால் கிலோவிற்கு ஆறு (6) ரூபாய்.மேலும் அதே சாணத்தை மீன் வளர்ப்புக்கு கொடுத்து மீனாகப் பெற்றால் கிலோவிற்கு நூறு (100) ரூபாய் எனப் பல்வகையில் இலாபம் ஈட்டலாம்.

விவசாயி அடையும் துயரம்;

மூன்று வேளை சோற்றுக்கு உற்பத்திச் செய்தவன் அடுத்த வேளை சோற்றுக்கு என்னச் செய்வது என்று தெரியாமல் வருந்துகிறான் விவசாயி.மேலும் விவசாயம் செய்ய காலநிலையை நம்பி தான் விவசாயம் செய்கிறான்.ஆனால் அந்த காலநிலை கூட  அவர்களை ஏமாற்றிவிடுகிறது.எப்படி தெரியுமா..??மழை அதிகமாகப் பொழிந்தாலும் கஷ்டம் மழைப் பொழியாவிட்டாலும் கஷ்டம் தான் நமது விவசாயிகளுக்கு.இவ்வுலகம் கண்டிடாத பிரச்சனையும் இல்லை.மாற்றிடாதப் பிரச்சனையும் இல்லை.

உழவர் திருநாள்;

வீட்டில் சூரியன் ரதத்தில்  வருவது போல கோலமிட்டு மாவிலை தோரணங்கள் கட்டி வீட்டை அலங்கரிப்பார்கள்.பொங்கலுக்கு தமிழர் திருநாள் என்பதைப் போல உழவர் என்ற சிறப்பு பெயரும் உண்டு.உழவுக்கும்,தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்பதற்கேற்ப உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது.உழவர்கள் இந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவார்கள் வருடம் முழுவதும் வயலில் வியர்வை சிந்த உழைத்த உழவர்கள் பகவலனுக்கு (சூரியனுக்கு) நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

எப்போது உதயமாகும் விவசாயம் குறித்த ஞானம்;



பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருக்கலாம்..ஆனால் உணவு உற்பத்திச் செய்ய விவசாயம் என்ற ஒருமுறை தான் உண்டு.

வயிற்றுல பசி இருக்கறவரைக்கும் விவசாயம் அழியாது.ஒரு நாள் விவசாயத்த கார்போரைட் கம்பெனி நடத்தும் அப்ப அரிசியோட விலை தங்கத்தை விட அதிகமாக இருக்கும்.அன்னைக்கு தான் தெரியும் நம் விவசாயியின் மதிப்பும், உணவின் மதிப்பும்.இவர்கள் சேற்றில் கை வைத்தால் தான் நம்மால் சோற்றில் கை வைக்கமுடியும்.இவர் தான் விவசாயி.காலம் கடந்து கிடைக்கும் ஞானம் பயனற்றது.

முடிவுரை;



நான் இந்த கட்டுரையை எழுதும் போது நாம் சாப்பிடும் உணவின் பின்னால் ஒரு விவசாயி அடையும் துயரமும் வேதனையும் கண்டு மனம் நொந்து போனேன்.நாம் இது தெரியாமல் உணவை எப்படி எல்லாம் வீண் செய்கிறோம்.உணவின் பின் ஒரு விவசாய குடும்பமே இருக்கிறது.மேலும் விவசாயத்துக்கு அவர்கள் கடன் வாங்கி அதை திருப்ப செலுத்த இயலாமல் சிலர் உயிர் துறந்து விடும் நிலையைக் கண்டு மனம் வேதனை அடைகிறது.வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடும் வள்ளலாராக இருக்க நம்மால் இயலாம் போனாலும் வறுமைத் துயரினால் உயிர் துறக்கும் உழவரின் சோகம் தணிக்கும் மனம் கொண்ட மனிதனாக மாற முயற்சிப்போம்.முடிந்த வரை உணவை வீண் செய்யாதீர்கள்.விளை நிலம் விளை நிலமாகவே இருக்கட்டும் விலை நிலமாக மாறினால் விளைவு மரணம் என்பதை நினைவில் கொண்டு வாழ்வோம். அனைத்து விவசாயக் குடும்பத்துக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் பல..

வாழ்க விவசாயம்..!!வளர்க வரப்புகள்..!!






வியாழன், 14 ஜனவரி, 2016

தமிழர் திருநாள் விழா


 

13.01.15 அன்று  கே.எஸ்.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நேற்று நடைபெற்ற தமிழா் திருநாள் விழாவில் மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டி, கோலப்போட்டி, பண்பாட்டு அணிவகுப்பு, நெருப்பின்றி சமைத்தல், இசைமேடை, பானை உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. பொங்கல் வைத்து தமிழர் பண்பாட்டை நினைவுகொள்வதாக இவ்விழா அமைந்தது.