அக்காலத்து பெண்கள்:
அன்றைய காலத்தில்
பெண்களுக்கு சுதந்திரம் என்ற ஒன்று இல்லாமல் அடிமைவாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். அன்றைய காலத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூட பயப்படுவார்கள். அடுப்பங்கரையை
விட்டு எங்கும் சென்றது இல்லை.தன் கணவனைக்கூட நிமிர்ந்து பார்காமல் இருந்தார்கள். ஒரு
சில பெண்கள் மட்டுமே அவர்களுடைய திறமைகளை வெளிக்கொண்டு வந்தனர்.அன்றைய காலத்து பெண்களுக்கு
சமுதாயத்தில் ஒரு இடம் கூட இல்லை. அன்றைய காலத்தில் பெண்களைவிட ஆண்கள் தான் முதல் இடத்தில்
இருந்தனர்.
இக்காலத்து பெண்கள்:
இன்றைய காலத்து பெண்கள் ஆண்களுக்கு இணையாக வாழ்ந்து வருகிறார். அடுப்பங்கரையில் இருப்பதைவிட சாதனை செய்பவர்கள்தான் அதிகம்.எந்தத்துறையிலும்
பெண்கள் இல்லாத துறையே இல்லை. பெண்கள் தன் வாழ்க்கையை தானே தேர்ந்தெடுக்கும் அளவிற்க்கு உயர்ந்து கொண்டு இருக்கின்றனர். பள்ளி, கல்லூரி போன்ற இடங்களில் பெண்களும் முதல் இடத்தில்
இருக்கின்றார். இன்றைய காலத்து பெண்களுக்கு சமுதாயத்தில் ஒரு இடம் இருக்கிறது. ஆனால்
திருமணம் என்று வந்தால் கட்டாயப்படுத்திதான் அதிகமாக திருமணம் நடத்துகிறார்கள். தன்னை
சுற்றியுள்ளவர்களுக்கு பிடித்தால் மட்டுமே திருமணம் நடக்கிறது. அதுவே பெண்களுக்கு பிடித்தவனை
திருமணம் செய்து வைப்பது இல்லை. இன்றைய காலத்தில் மகளிர் கல்லூரி என இருக்கிறது, எங்கயாவது
ஆண்கள் கல்லூரி என இருக்கிறதா!.
தாங்கள் சொல்வது உண்மைதான்..
பதிலளிநீக்குஇருந்தாலும்...
அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் கலைக் கல்லூரி, நாமக்கல்...
புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி.................
ஆண்கள் கல்லூரியும் உண்டு ரேவதி..