வெள்ளி, 25 மார்ச், 2016

நிறங்கள் மூலம் சிகிச்சை              நிறங்கள் மூலம் சிகிச்சை
முன்னுரை


தொழில்நுட்பம் வளர வளர நோய்களும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் மருத்துவமனைகளும் அதிகரித்து கொண்டே செல்கிறது. நோய்க்கு சிகிச்சை என்றால் நமக்கு தெரிந்தது ஆங்கில மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி என்று பல முறைகள் உள்ளன. ஆனால் நிறங்களைக் கொண்டு பார்க்கப்படும் ஒரு மருத்துவமும் இருக்கிறது. இதற்கு கிரோமோதெரபி என்று பெயர்.
கிரோமோதெரபி
இதுவொரு மாற்று மருத்துவ முறை ஆகும். ஒளியில் இருந்து பெறக்கூடிய வண்ணங்களை வைத்து வைத்தியம் செய்வது ஒரு முறை. தனியே இருக்கிற வண்ணங்களை வைத்து செய்வது இன்னொரு முறை. ஒவ்வோர் உயிரும் ஒளியில் ஏற்படும் மாற்றங்களால் பாதிப்புக்கு உள்ளாகும். நிற மருத்துவத்தின்படி மனித உடல் வண்ணங்களால் தூண்டப்படுகிறது. உடலின் ஒவ்வொரு பகுதியும் முறையாக இயங்க வண்ணங்கள் காரணமாக இருக்கின்றன. ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு நிறம் உண்டு.
நம் முன்னோரின் சிறப்பு
 இதை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் அறிவித்திருந்தார்கள் என்கின்ற போதும் அறிவியல் முறையில் எந்த நிறம் உடலின் எந்த பகுதியின் நோயை போக்கப் பயன்படும் என்பது தெரியாமல் இருந்தது. 2 வண்ணங்களை ஒன்று சேர்த்து புதிதாக ஒரு வண்ணம் எப்படி தயாரிப்பது என்பதை அறியாததால் அடிப்படை நிறங்களான சிவப்பு, நீலம், மஞ்சள்,  ஆகியவற்றையே அதிகம் பயன்படுத்தினார்கள். கி.பி 910-ல் அவிசென்னா என்பவர் உடலின் ஒவ்வொரு பாகத்துக்கும் ஒரு நிறத்தைப் பட்டியலிட்டார். உடலின் நிறம் மாறுபட்டால் அது நோய்க்கான அறிகுறி என்று அறிவித்தார்.

உறுப்புகளை காக்கும் நிறங்கள்
1876-ல் பிளிசாண்டன் என்பவர் நீல நிறத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு வலி, காயம், எரிச்சல் போன்ற உபாதைகளுக்கு தீர்வு கண்டார். அதன்பிறகு பல மருத்துவர்கள் பல்வேறு ஆய்வுகள் செய்து நிற மருத்துவத்தை மேம்படுத்தினர். சிவப்பு நிறம் ரத்த ஓட்டத்தையும், நீல நிறம் தொண்டைப்பகுதியையும், ஆரஞ்சு நிறம் நுரையீரலையும், இண்டிகா நிறம் சருமத்தையும், ஊதா நிறம் தலைப்பகுதியையும் காப்பதாக இந்த மருத்தவமுறை சொல்கிறது. டிஸ்லெக்சியா  போன்ற கற்றல் குறையாடு உள்ளவர்களுக்கு நிற மருத்துவத்தின் மூலம் தீர்வு காண முடியும் என்கிறார்கள்.
முடிவுரை
ஆனால் நிற மருத்துவத்தைப் பற்றி கற்றவர்கள் மிக குறைவாகவே இருக்கிறார்கள்.  இதனை  அரைகுறையாக தெரிந்து கொண்டு எதையாவது செய்தால் அதன் பின்விளைவுகள் மிக கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக