சனி, 26 மார்ச், 2016

சுற்றுச்சூழலின் வரலாறு
                        சுற்றுச்சூழலின் வரலாறு

முன்னுரை
இன்றைக்கு எல்லோருமே சுற்றுச்சூழல் சீர்க்கேட்டை பற்றி பரவலாக பேசுகிறோம். சமீபத்தில் தான் இது குறித்த விழிப்புணர்வு அதிகமாக ஏற்பட்டிருக்கிறது.  ஒரு புறம் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டாலும் மறுபுறம் அதை மாசுபடுத்திக் கொண்டு தான் இருக்கின்றன.
கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு
ஆனால் சுற்றுச்சூழல் சீர்க்கேட்டின் வரலாறு கிறிஸ்துப் பிறப்பதற்கு முந்தைய காலத்தில் இருந்தே தொடங்கிவிட்டது. உலக வரலாற்றில் பல்வேறு நிகழ்வுகளுக்கும் பிள்ளையார் சுழி போட்டார்கள் ரோமானியர்கள் தான். அவர்கள் தான் சுற்றுச்சூழல் சீர்க்கேட்டுக்கும், பிள்ளையார் சுழிப்போட்டனர். ஆனால் அது விவரம் தெரியாத காலத்தில் நடந்த அறியாமை செயல் என்கிறார்கள், சரித்திர ஆய்வாளர்கள். கி.மு.400க்குப் பின் நெடி மிகுந்த மிகப் பழமையான மதுவின் கசப்புச் சுவையை மாற்றுவதற்காக ரோமானியர்கள் அந்த மதுவில் காரியம் கலந்த ஒருவித இனிப்புச் சுவையை கொடுத்தது. இந்த ரசாயனம் உடலுக்கு மட்டுமல்லாமல், மனநிலை பாதிப்புக்கும் காரணமாகிறது. இந்த மது உடலுக்குள் சென்று எலும்புகளை பெரிதாக பாதித்து இருக்கிறது. ரோமபேரரசர்களின் எலும்புக்கூடுகள் மிக அதிக அளவில் காரியம் கலந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உயிர்த்தியாகம்
கி.மு.வில் ரோமபேரரசில் இப்படி நிகழ்ந்தது என்றால், கி.பியில் நமது நாட்டில் சுற்றுச்சூழலை காக்க பெரும் உயிர் தியாகமே நிகழ்ந்து இருக்கிறது. 1730-ல் ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில், மன்னர் அஜய்ஜிங் என்பவர் தனது அரண்மனையை மேலும் விஸ்தரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மார்வார் என்ற வனப் பகுதியில் புதிதாக அரண்மனையை அமைக்க நினைத்தார். அரண்மனை அமைக்க வேண்டும் என்றால் அங்குள்ள மரங்களை வெட்டியாக வேண்டும்.அந்த வேலையை செய்ய  மன்னர் தன் வீரர்களை அனுப்பி வைத்தார்.அந்த பகுதியில் வாழ்ந்து வந்த பிஷ்ணோய் என்ற இனமக்கள், இயற்கையை தெய்வமாக வழிபடுபவர்கள். அவர்கள் மரங்களை வெட்ட வந்த வீரர்களை பார்த்ததும் பதறிப்போய் முடிந்தவரை எதிர்ப்பை தெரிவித்தனர். ஆனால் இவர்களின் எதிர்ப்பு மன்னரின் ஆணை முன்பு நமத்துப் போனது. வேறு வழியில்லாமல் ஒவ்வோரு பிஷ்ணோய் இனத்தவரும் ஒரு மரத்தை கட்டிபிடித்தவர்களை வெட்டி போட்ட பின்புதான் மரத்தை வெட்ட முடிந்தது.
சிப்கோ இயக்கம்
363 மரங்களையும் கட்டிப்பிடித்த மனிதர்களையும் சேர்த்து வெட்டிய மன்னனின் மனம் இலேசாக இளகியது. அந்த இடம் வேண்டாம் என்று திரும்பி வர கட்டளை இட்டான்.  பிஷ்ணோய் இன மக்களின் இந்த போராட்டம் தான் சுற்றுச்சூழல் பாதுக்காப்புகான முதல் போராட்டம். அதை நினைவுபடுத்தும் விதமாகத்தான், இந்த நிகழ்வை சிப்கோ இயக்கம் என்று கொண்டாடுகிறார்கள். ஒரு பிரச்சனையைப் பற்றி எதாவது புத்தகம் வந்தால்தான், அந்த நிகழ்வு உண்மையில் பதிவு செய்யப்பட்டதாக அர்த்தம். சுற்றுச்சூழல் குறித்து முதல் விழிப்புணர்வு புத்தகம் 1864-ல் அமெரிக்க தத்துவ சிந்தனையாளர் ஜார்ஜ் பெர்கின்ஸ் மார்ஸ் என்பவர் எழுதினரார். மேன் அன்ட் நேச்சர்என்ற இந்த  புத்தகம் தான் சுற்றுச்சூழலின் அவசியத்தையும், அதன் பாதிப்பையும் முதன் முதலாக சொன்னது.
முடிவுரை
சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை நன்கு உணரந்த நம் முன்னோர்கள் உயிரைத் தியாகம் செய்தனர். ஆனால் நாமோ அதை புரிந்து கொள்ளாமல்  சுற்றுச்சூழலை மாசுபடுத்திக் கொண்டே போகின்றோம். இதனால் ஏற்படும் விளைவுகளை நன்கு உணர்ந்தும் நாம் அமைதியாக இருக்கின்றோம். தனிமனிதன் மாறினால் சமுதாயம் மாறும் என்று கூறுவர். எனவே நாம் மற்றவர்களை குறை கூறாமல் நாம் இருக்கும் இடத்தை சுத்தமாக வைப்போம். சுற்றுச்சூழலைப் பாதுக்காப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக