ஜார்ஜ் கேன்டர் சிறுவயதிலேயே கணிதம்
மற்றும் அறிவியல் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். கேன்டர் ரஷ்யாவிலிருந்து ஜெர்மனி நாட்டிற்குச் சென்றார். அங்குள்ள பெர்லின் பல்கலைக் கழகத்தில் கணிதம் கற்றார். 1867ஆம் ஆண்டு டாக்டர் பட்டமும் பெற்றார்.
ஆரம்ப காலத்தில் ஒரு சிறு பள்ளியில்
ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய கேன்டர், பின்னாளில் லீப்சிக் அருகிலுள்ள ஹேல் பல்கழைக்கழகத்தில்
பேராசிரியராகச் சேர்ந்தார்.
கணிதத்தில் மிகவும் வேறுபட்டதும்,
முக்கியமானதாகவும் விளங்கும் தொடா்எண் தேற்றம் (Theory of sets) என்னும் புதிய வகைக்
கணிதத்ததைக் கண்டறிந்தது உலகிற்குக் கூறினார்.
பெர்லின் நகரில் வசித்தபோரு கேன்டர்,
எண் கணிதத் தேற்றத்தில் அதிக ஆர்வம் காட்டினார். ஹேல் நகரத்திற்குச் சென்றபின், அவரது
கவனம் திரிகோணமிதி தொடரில் சென்றது.
இதன் விளைவாக முடிவிலாத் தொடர்களிலுள்ள
எண்களின் கூட்டுத்தொகை, விகிதம் போன்றவற்றைப் பற்றிய உண்மைகளைக் கண்டறிந்தார். கேன்டரின் காலத்திற்கு முன்பு வரை முழு எண்களைப்
(Real number) பற்றி உலகம் அறிந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடா்ந்து கணித ஆராய்ச்சியில் ஈடுபட்ட
கேன்டர், தனது ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டார். அவரது ஆராய்ச்சிக் கட்டுரைகளில் ஒன்று கணித உலகில்
ஒரு மைல்கல்லாக அமைந்தது. அதுவே தொடா்எண் தேற்றமாகும்.
1884ஆம் ஆண்டு பாரீஸ் சென்ற கேன்டர்
பல கணிதமேதைகளைச் சந்தித்து, தனது புதிய கண்டுபிடிப்பைப் பற்றிக் கூறினார். ஆனால் பலரும் கேன்டரின் கண்டுபிடிப்பு ஆதாரமற்றதாகக்
கூறி, அவரை விமர்சனம் செய்தனர்.
ஆனால், அவரது முடிவிலித் தொடர்
பற்றிய கண்டுபிடிப்புகள் ஆதாரமானவை என்று பின்னாளில் கணிதமேதைகள் விரைவிலேயே ஏற்றுக்கொண்டனா். “டிரான்ஸ்ஃயைனிட் எண்கள்” என்ற எண்களைக் கண்டறிந்து
கூறிய கேன்டர், அவ்வெண்களுக்கும் “முடிவிலித் தொடருக்கும் (Infinite sets) உள்ள தொடர்பை
விளக்கிக் கூறினார்.
ஒரு தொடரிலுள்ள நேர்மறை எண்களின்
(positive Integers) கூட்டுத்தொகை, அத்தொடரிலுள்ள முழு எண்களின் கூட்டுத்தொகையினினிறும்
வேறுபடும் என்பது கேன்டர் கண்டறிந்து கூறிய உண்மைகளாகும்.
“இரு தொடர்களை எடுத்துக்கொண்டால்,
அவற்றில் ஒரு தொடரிலுள்ள ஒரு குறிப்பிட்ட எண்ணிற்கும், மற்ற தொடரிலுள்ள ஒரு குறிப்பிட்ட
எண்ணிற்கும் தொடர்பு உண்டு” என்பதையும் கேன்டர் கண்டறிந்து கூறினார்.
கணிதத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை
மேற்கொண்ட ஜார்ஜ் கேன்டர், தனது இறுதி நாட்களில் மனநலம் பாதிக்கப்பட்டு, ஹேல் நகரிலுள்ள
மனநல மருத்துவனையில் 1918ஆம் ஆண்டு காலமானார்.
கேன்டரின் பல கணித கண்டுபிடிப்புகள், விஞ்ஞானத்திலும் பலவகைகளில் பயன்படுகிறது.
குறிப்பு - படித்ததில் பிடித்தது
நூல் - உலக கணித மேதைகள் ப.எண் 81
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக