நீல்ஸ் ஹென்ரிச் ஏபல் நார்வே நாட்டில் தோன்றிய மிகச்சிறந்த கணிதமேதை மட்டுமின்றி, புகழ்பெற்ற மனிதரும் ஆவாா். ஆஸ்லோ நகாில் அமைந்துள்ள அரண்மனைத் தோட்டத்தில் ஏபலின் சிலை நிறுவப்பட்டுள்ளதே இதற்குச் சான்றாகும். இது சுற்றுலாப் பயணிகளுக்கு ஓர் அறிய காட்சிப் பொருளாக விளங்குகிறது. ஸ்காண்டி நேவிய கணித மேதைகளுள் ஏபல் முதன்மையானவர்.
“பெர்ன்ட் மிக்கேல் ஹாம்போ” என்னும் கணித ஆசிரியர் ஏபலின் கணித ஆசிரியராக விளங்கினார். இவர் ஏபலின் கணித அறிவைப் புரிந்துகொண்டு, கணிதத்தைக் கற்கும்படி அறிவுறுத்தினார். ஹாம்போவின் மேற்பார்வையில் ஏபல், மிகச்சிறந்த கணிதமேதைகளான லாக்ரேஞ்ஜ், லாப்லஸ், யூலர் போன்றோரின் கணிதங்களைக் கற்றுத் தேர்ந்தார். நீள்வளைய முழுமை (Elliptic Integrals) பற்றி ஏபல் கற்றறிந்தார். அது குறித்த கட்டுரை ஒன்றையும் எழுதினார்.
1823ஆம் ஆண்டு கோபென்ஹேகன் நகருக்குச் சென்ற ஏபல், பல டேனிஷ் நாட்டு கணித மேதைகளைச் சந்தித்தார். பிறகு அங்கிருந்து கிறிஸ்டியானியா நகருக்குத் திரும்பி வந்தார். ஏபல், தான் ஏற்கனவே முயந்சி செய்த ஐந்தொகுதி சமன்பாடு (Quintic Equation) பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
இக்காலகட்டத்தில் “அகங்ட் லியோபோல்டு க்ரெல்” என்பவா் இவரது முயற்சிகளை ஆதரித்து, புரவலராக (patron) ஆனாா். க்ரெல் ஒரு கட்டடப் பொறியாளராதலால் அவருக்கு கணிதத்தில் அதிக விருப்பம் ஏற்பட்டது. அவர் தனிக்கணிதம் மற்றும் செயல்முறைக் கணிதம் பற்றிய பத்திரிக்கை ஒன்றை வெளியிட்டார். அதற்கு “க்ரெல் ஜர்னல்” எனப் பெயரிட்டார்.
1826ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் நேரில் சந்தித்தனர். க்ரெல்லுடன் ஏபல் பல நாடுகளுக்குச் சென்றார். மேலை நாடுகளில் 2 ஆண்டுகள் படிப்பு முடிந்தபின் 1827-ல் கிறிஸ்டியான நகருக்குத் திரும்பினார்.
கணிதத்தில் சிறந்த அறிவைப் பெற்றிருந்தும் ஏபலுக்கு சரியான வேலை எதுவும் கிட்டவில்லை. இது தவிர அவருக்கு நிறையவே கடன் சுமையும் இருந்தது.
அவர் பல மாணவர்களுக்கு கணிதம் கற்பிக்கத் தொடங்கினார். ஏபலின் கணிதக் கண்டுபிடிப்புகள் ஜெர்மன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் பெரிய வரவேற்பைப் பெற்றன.
ஸ்டாக்ஹோம் அகாடமி ஏபலின் கணித அறிசை அங்கீகரித்தது. டிராந்தியம் நகரில் அமைந்திருந்த நார்வேஜியன் ராயல் சொசைட்டி அமைப்பில் ஏபல் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1826ஆம் ஆண்டுக்குப் பின்பு ஏபல், உயிர் வாழ்ந்தது வெறும் மூன்று ஆண்டுகள் மட்டுமே. ஏபலுக்கு காசநோய் ஏற்பட்டு, உடல்நிலை மிகவும் பலவீனமானது. அந்நிலையிலும் அவர் தொடர்ந்து கணித ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்தார். கணித ஆராய்ச்சிக் கட்டுரைகள் பலவற்றையும் எழுதினார். அவர் 1829ஆம் ஆண்டு, ஏப்ரல் 6ஆம் நாள் தனது 27ஆவது வயதில் இறந்தார்.
ஏபலின் கணித அறிசைப் புரிந்து கொண்ட பெர்லின் பல்கலைகழகம் அவருக்கு பேராசிரியர் பணி தருவதாக செய்தி அனுப்பியது. ஆனால், அச்செய்தி வருவதற்கு 2 நாட்கள் முன்பே, ஏபல் மறைந்தார்.
தமிழில் கணிதமேதைகளின் வரலாறு தேவையான ஒன்று. தொடரட்டும் தங்கள் கட்டுரைகள்.
பதிலளிநீக்குநன்றி ஐயா. தொடர்கிறேன்.
நீக்குகணித மேதைகள் பற்றிய தகவல்கள் தொடரட்டும். நன்றி.
பதிலளிநீக்குநன்றி ஐயா. அவசியம் தொடர்கிறேன்...
நீக்கு