உலகின் மிகப்பெரிய சூரியசக்தி மின் நிலையம்
உலகின் மிகப்பெரிய சூரியசக்தி மின்நிலையம் முழுமையாக
செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
மின்தேவையை சூரிய சக்தியைக் கொண்டு ஈடுக்கட்டும்
முயற்சியில் உலகநாடுகள் மும்முரம் காட்டி வருகின்றன.அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில்
உலகின் பிரமாண்ட சூரியசக்தி மின்நிலையம் நிறுவப்பட்டு வந்தது.’இவான்பா சோலார் எலக்ட்ரிக்
ஜெனரேட்டிங் சிஸ்டம்’ என்று இந்த மின்திட்டத்திற்கு பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
பிரபல தனியார் நிறுவனங்களான என்.ஆர்.ஜி.,கூகுள்
மற்றும் ‘பிரைட்சோர்ஸ் எனர்ஜி’போன்றவை, கடந்த 2011-ம் ஆண்டு பிரமாண்ட முயற்சியை சாதிக்கும்
களத்தில் இறங்கின. இந்த திட்டத்திற்காக சுமார் 2.2 பில்லியன் டாலர் செலவிடப்பட்டது.3,500
ஏக்கர் நிலப்பரப்பில் ‘சோலார் பேனல்’கள் நிறுவப்பட்டன. 3 அலகுகளாக மின்சாரம் பெறும்வகையில்
இது செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
உலகின் மிகப்பெரிய சூரியசக்தி மின்நிலையமாக இது
செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இங்கிருந்து 392 மெகா வாட்ஸ் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
இது அமெரிக்காவின் மின் உற்பத்தியில் மூன்றில் ஒருபாகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் 1 லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்களுக்கு மின்சாரம் வினியோகிக்கலாம்.
சூரியஒளி தென்படும் இடத்தை நோக்கி சோலார் தகடுகளை
திருப்பி வைத்து மின்சாரம் தயாரிக்க முடியும்.மேலும் 3 பிரமாண்ட கொதிநீர் கலன்களும்
இங்கு நிறுவப்பட்டுள்ளது. சூரியசக்தி தகடுகளில் உள்ள 1 லட்சத்து 73 ஆயிரத்து 500 கண்ணாடிகள்
எதிரொளிக்கும் வெப்ப ஆற்றலைக்கொண்டு இந்த கொதிகலன்களை கொதிக்க வைத்து மின்சாரம் தயாரிக்கிறார்கள்.
இது கூடிதலாக 259 மெகா வாட் மின்சாரம் ஒப்பந்தப்படி பிற இடங்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
அட தகவலுக்கு நன்றிடா.
பதிலளிநீக்குநன்றி வைசாலி
பதிலளிநீக்கு