திங்கள், 21 மார்ச், 2016

கல்வி கட்டணம் குறைப்பதற்கான கூக்குரல்..!!


Image result for மாற்று

அன்புடையீருக்கு  வணக்கம்,

தலைப்பு வைத்தே புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.ஆம் கல்வி கட்டணம் குறித்த விழிப்புணர்வு தான் இந்த கட்டுரையை  அமைக்க  இருக்கிறேன்.
இன்று(20.03.2016) விஜய் தொலைகாட்சியில் நீயா..??நானா..?? இந்நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு இதுக் குறித்த எண்ணம் தோன்றியிருக்கலாம்.எனக்கு தோன்றியதை தான் இங்கு கட்டுரையாக வடிவமைக்க இருக்கிறேன்.

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்கு தக.(குறள்)

இதன் பொருள் கற்கும் கல்வியானது குற்றமறக் கற்று,பிறகு  கற்ற கல்வியின் நெறியில் நிற்க வேண்டும்  என்பது வள்ளுவன் கூற்று.

ஆனால் இன்றைய அரசாலும் அரசியலாலும்,மக்களாலும்

கற்க கசடற கற்பவை கற்றபின்
விற்க அதற்கு தக.

இதோடு பொருள் நான் சொல்ல வேண்டியதில்லை.இன்றை கல்வி முறை சேவை என்பது மாறி வியாபாரம் என்று உருவெடுத்துள்ளது.இதற்கு காரணம் தரமற்ற கல்வி தான்.முன்னொரு காலத்தில் கல்வி என்பது சேவையாக மட்டுமே பார்த்தது.இன்று கல்வி என்பது முதலீட்டு சந்தையாக மாறி இலாபம் ஈட்டும் நோக்கத்திலே நடைபெறுகிறது.இப்படி இருக்கையில் எப்படி ஒரு கல்வி நிறுவனம் தரமான கல்வியை தர இயலும்..??

இந்நிகழ்ச்சியில் எந்த மதிப்பெண் அடிப்படையில்  கட்டணம் நிர்ணயிக்க வேண்டுமென்று ஒரு செய்தியை சொன்னர்கள்.அதாவது கல்வி நிறுவனத்தை சுற்றி மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருந்தால் 20 மதிப்பெண்,இரண்டு குழந்தைகள் இருந்தால் 20 மதிப்பெண்,அடுத்த குழந்தையையும் இதே பள்ளியில் சேர்த்தால் 5 மதிப்பெண்,பெற்றோர்கள் படித்திருந்தால் 20 மதிப்பெண்,பெற்றோர்கள் குறைவாக படித்திருந்தால் 8 மதிப்பெண்,ஊனமுற்றோர்க்கு 5 மதிப்பெண் மேலும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 5 மதிப்பெண் இதற்கும் மேலே இதை பள்ளிச் சேர்க்கை விண்ணப்பத்தில் தெளிவாக குறிப்பிட வேண்டும்  என்பது இந்திய சட்டத்தில் உள்ளது.இதை எத்தனை பள்ளிகள் கடைப்பிடிக்கிறது.??

தனியார் கல்வி நிறுவனங்கள் பெற்றோர்களின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் தான் கட்டணம் நிர்ணயிக்கிறோம் என்று வாதிட்டனர்.இன்னொரு புறம் பெற்றோர்கள் எங்களை தேர்ந்தெடுப்பது கல்வி நிறுவனங்கள் தான் என்று.சரி இது எல்லாம் அனைவருக்கும் தெரிந்த உண்மையே.ஆனால் இன்று புதியதாக ஒரு செய்தி கேள்விப்பட்டேன் கல்வி என்பது கடை(education is a shop) என்று கூறினார்கள்.இது எவ்வளவு உண்மை.கல்வியில் தான் ஒரு நாட்டின் முன்னேற்றமே உள்ளது.மேலை நாடுகளில் கல்வி என்பது அரசின் கட்டுபாட்டில் உள்ளது.நம் நாட்டில் தான் தனியார் இடத்தில் உள்ளது.சிவராம் என்பவர் அருமையாக வாதிட்டார்.
அவர் கூறியது,பள்ளிச் சேர்க்கை படிவத்தில் ஆண்டு வருமானம் குறிப்பிடவே பயமாக உள்ளது ஏனென்றால் எங்கே கல்வி கட்டணத்தை உயர்த்திவிடுவார்களோ என்ற பயம்.மேலும் பல விதமான வாதங்கள்  இருந்தது.

எனக்கு ஒரே ஒரு கேள்வி தான் மாணவர்களுக்கு இது அது என்று என்ன என்னமோ  சொல்லித் தருகிறோம் என்று சொல்லிக்கொண்டு கட்டணத்தை வசூலிக்கும் கல்வி நிறுவனமும் பெற்றோருக்கும் ஏன் தெரியவில்லை அவனுக்கு எது வரும் என்று..??அந்த மாணவனின் திறமைகளை ஏன் பார்ப்பதில்லை.??இந்த இடத்திலே இரு தரப்பினருமே தவறு செய்கின்றனர்.
இதெல்லாம் இருக்கட்டும் கல்வி கட்டணம் எப்படி தெரியுமா சின்னதா ஒரு பள்ளியை நிறுவினால் போதும்  பிறகு அதுவே  ஒரு பல்கலைக்கழகமாக உருவெடுத்து   நிற்கும்.இது தாங்க நம் நாட்டு கல்வி கட்டணம்.இதனால் பாதிக்கப்படுவர்கள் நடுத்தர குடும்பத்தினரே.நான் படிக்கவில்லை என் பிள்ளைகள் படிக்கட்டும் என்று நினைத்து தான் அவர்களின் வாழ்க்கையை  அர்பணிக்கிறார்கள்.ஆனால் இப்படி கட்டணம் வசூலிப்பதை பார்த்தால் அவர்களால் எப்படி முடியும்..??   

இதுக்குறித்து நான் பெரிய அளவில் சொல்ல முடியாது காரணம் எனக்கு அனுபவமில்லை.இப்பொழுது தான் நான் கல்லூரி வாழ்க்கையில் பயணிக்கிறேன்.கல்வி கட்டணம் குறையவதற்கு கூக்குரல் என்னால் முடிந்ததை எழுப்பியுள்ளேன்.காரணம் இப்பொழுது தேர்தல் நேரம் மற்றும் அடுத்த ஆண்டிற்கான வியாபார சந்தை திறக்கப்பட உள்ளது.அதில் மாட்டிக் கொள்ள இருக்கும் பெற்றோர்களையும் குறிப்பாக நாளைய தலைமுறையை காப்பாற்ற இயலும் என்று நினைக்கிறேன்.யாருமே ஏன் யோசிப்பதில்லை பள்ளிக் கட்டணம் அதிகமாக இருக்கிறது என்பது பற்றி.??கல்வி என்பது நம் இந்திய சட்டம் படி இலாபம் ஈட்டக்கூடாது என்பது உண்மை.ஆனால் இன்று அதில் தான் அதிக இலாபம்.  

இன்னும் சில மூத்த வலைப்பதிவர்களை நான்  இதுக் குறித்து கூக்குரல் எழுப்புமாறு விரும்பி   வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

1.முனைவர்.இரா.குணசீலன் ஐயா.
2.கில்லர்ஜி ஐயா.
3.நா.முத்துநிலவன் ஐயா.
4.மீரா.செல்வக் குமார் ஐயா.
5.வலிப்போகன்  ஐயா.
6.திண்டுக்கல் தனபாலன் ஐயா.
7.பகவான் ஜி  ஐயா.
8.பரிவை.சே.குமார் ஐயா.
9.ஸ்ரீராம் ஐயா.
10.வெங்கட் நாகராஜ்  ஐயா.
11.தமிழ் இளங்கோ  ஐயா.
12.வி.என்.எஸ்.உதயசந்திரன் ஐயா.
13.தேன்மதுர கிரேஸ் அம்மா.
14.கீதமஞ்சரி அம்மா.
15.சென்னைப்பித்தன் ஐயா.
16.ஊமைக் கனவுகள் ஐயா.
17.அருணா செல்வம் அம்மா.
18.எஸ்.பி.செந்தில் குமார் ஐயா.
19.டி.என்.முரளிதரன் ஐயா.
20.மு.கோபி சரபோஜி ஐயா.

நீங்கள் அனைவரும்  இதுக்குறித்து ஒரு விழிப்புணர்வு பதிவைத் தொடரலாமே.தங்களை போன்ற மூத்த வலைப்பதிவர்கள் ஒன்று சேர்ந்து இதற்கான  கூக்குரலை ஒரே சமயத்தில்  எழுப்பினால்   சிறிய முன்னேற்றம் அடையலாமே.கல்வி சுமையல்ல சுகம் என்று அனைவரும் அறிய இயலும்.

நம்பிக்கை விதையை  தங்கள் மீது தூவியுள்ளேன் விதைகளுக்கு வீரியம் ஊட்டுங்கள்.நன்றி.

Image result for மாற்று


14 கருத்துகள்:

 1. நன்று அம்மா...உன் எண்ணம் நல்லது..விரைவில் எழுதுகிறேன்...
  என்னையும் இணைத்ததற்கு நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.

   நீக்கு
 2. நல்லதொரு செயலைத் தொடங்கி வைத்தமைக்கு எமது பாராட்டுகள் சகோ
  இது படிப்பறிவு பந்தப்பட்டது பெரிய விடயமே என்னையும் அழைத்து இருக்கின்றீர்கள் முயல்கிறேன் நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.

   நீக்கு
 3. நானும் அந்த நீயா நானா நிகழ்ச்சியை பார்த்தேன். கல்வியை சந்தைப் பொருள் ஆக்கியதில் பெற்றோருக்கு முக்கிய பங்கு உண்டு.விரைவில் என் கருத்தையும் எழுதுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.

   நீக்கு
 4. வாழ்த்துக்கள் சகோதரி...
  சமூக நோக்கில் ஒரு கட்டுரை எழுதி அதைத் தொடர எல்லோரையும் அழைத்திருப்பது மகிழ்ச்சி....
  கண்டிப்பாக எழுதுகிறேன் சகோதரி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.

   நீக்கு
 5. சிந்தனையைத் தூண்டும் பதிவு. இந்தியாவில் ஏறிய விலைவாசி என்றுமே இறங்கியதில்லை. கல்விக் கட்டண உயர்வும் அவ்வாறே. தனியார் கல்வி நிறுவனங்களை அரசுடைமையாக்கி. அனைத்துக் கல்வியையும் கட்டணமின்றி வழங்க வேண்டும்.உங்கள் அன்புக் கட்டளைக்கு இணங்க தொடர்பதிவு எழுத முயற்சி செய்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.தங்களின் பதிவை படிக்க ஆவலாக உள்ளேன் ஐயா.மீண்டும் நன்றி ஐயா.

   நீக்கு
 6. அருமையான பதிவு வைசாலி. நாங்கள் எங்கள் தளத்தில் கல்வி குறித்து பதிவுகள் நீங்கள் இப்போது சொல்லியிருக்கும் கருத்துகள் உட்பட சொல்லி எழுதியிருக்கிறோம். சமீபத்தில் நடந்த அந்த சித்தா கல்லூரி மாணவிகளின் தற்கொலை/கொலை வரை கல்வியின் தரம் குறித்துதான் எழுதியுள்ளோம். முரளிதரன் கல்வித்துறையில் இருப்பதால் அவரும் கல்வி பற்றி பதிவுகள் எழுதுவார். எங்கள் பதிவுகளுக்கு அவரும் அவரது தளத்தில் எழுதுவார்.

  தொடருங்கள். நாங்களும் எழுதுகின்றோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றிகள் ஐயா.கல்வியால் தான் நாடு முன்னேற்றம் அடையும் என்று இருக்கையில் இப்படி கல்வி கட்டணம் உயர்வால் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டுமா என்ற எண்ணமே வருங்காலத்தில் நிலவும் என்ற அச்சம் எனக்கு உண்டு ஐயா.
   நமது அரசு கல்வியை தனியாரிடம் ஒப்படைத்து பெரிய தவறை செய்துவிட்டது ஐயா.இதனால் நடுத்தரக் குடும்பத்தினர் ரொம்பவே பாதிக்கப்படுகின்றனர்.ஆனாலும் இதுப் போன்ற பள்ளிகளைத் தான் பெற்றோர்களும் தேர்ந்தெடுக்கின்றன ஐயா.
   நான் மக்களிடம் இதுக் குறித்து நேரடியாக கருத்தைகளை சேகரித்து வருகின்றேன் விரைவில் இதுக்குறித்து எழுதுகிறேன் ஐயா.
   இதுவரை என்னுள் இருக்கும் அனைத்து கேள்விகளையும் அதற்கான விடையை அறிந்துக் கொள்ள ஒவ்வொரு வலைப்பதிவரிடமும் ஒரு பயணத்தை மேற்கொண்டு வருகின்றேன் ஐயா.
   தங்களிடம் எனது கேள்வி,இப்பொழுது தேர்தல் சமயம் என்பதால் அதுக்குறித்து கேட்கிறேன் ஐயா.தேர்தலின் போது ஒரு ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படுகிறது என்பது நாடறிந்த உண்மை.இது தேர்தல் ஆணையத்திற்கும் தெரியும் ஆனால் இதுக் குறித்து ஏன் தேர்தல் ஆணையம் எந்த நடைவடிக்கையும் எடுப்பதில்லை..???இதுவே எனது கேள்வி ஐயா.
   தங்களிடம் இருந்து எனது இந்த இரண்டு கருத்துகளுக்கான பதிவை படிக்க ஆவலாக உள்ளேன் ஐயா.மீண்டும் நன்றிகள் ஐயா.

   நீக்கு
 7. உங்கள் கல்லூரி குறித்தும் நாங்கள் முத்துநிலவன் ஐயா/அண்ணா அவர்களின் தளத்தில் அவரது நேர்காணலில் சொல்லியிருக்கிறோம். அவரது தொடர்பதிவில் கூட நாங்கள் இளையவர்களின் தளம் மட்டுமே அறிமுகப்படுத்த எண்ணி உங்கள் தளம் பற்றிச் சொல்ல்ல நினைத்து அன்று நம் மூத்த பதிவர் ஒருவரின் மரணச் செய்தி அதிர்ச்சி தந்த காரணத்தால் அவருக்கு அஞ்சலி செலுத்தி முடித்துக் கொண்டுவிட்டோம். மீண்டும் அதைத் தொடர்ந்து எழுத வேண்டும் என்று நினைத்துள்ளோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றிகள் ஐயா. எங்கள் கல்லூரியின் வலைப்பக்கத்தை அறிமுகம் செய்தமைக்கு தங்களுக்கும் முத்துநிலவன் ஐயாவுக்கும் நன்றிகள் ஐயா.

   நீக்கு