கல்யாணம், காது குத்து முதல் ஃபேஸ்புக் வரை பல அலப்பறைகளையும், அட்ராசிட்டிகளையும் உண்டாக்க மிக முக்கிய காரணம் போட்டோஷாப். தொழில்நுட்ப துறையில் மிகப்பெரிய சக்சஸுக்கு காரணம் இந்த போட்டோ ஷாப் சாப்ட்வேர் தான். அப்துல் கலாமுடன், மகேந்திர சிங் தோனியுடன், நடிகர் ரஜினிகாந்துடன், கூகுள் 'சுந்தர் பிச்சை' உடன் என யாருடன் வேண்டுமானாலும் நாம் இணைந்து நிற்கும்படியான புகைப்படம் ரெடி பண்ண போட்டோஷாப் தான் உதவி புரியும்.
அடோப் நிறுவனத்தின் போட்டோஷாப் சாப்ட்வேர் தான் முதன் முதலில் வெகுஜன மக்கள் பயன்படுத்தும் விண்டோஸ் ஓ.எஸ்.-ல் வந்து இன்றளவும் டாப்பில் இருக்கிறது. ஒவ்வொரு முறை போட்டோஷாப் இயக்கும்போதும், சீதாராமன் நாராயணன் என்ற பெயர் வரும். யார் இந்த சீதாராமன் நாராயணன் என்று என்றைக்காவது நீங்கள் தேடியிருக்கிறீர்களா?
அவர் வேறு யாரும் இல்லை, நமது தஞ்சாவூர்காரர் தான். போட்டோஷாப்பில் புரட்சியை ஏற்படுத்தியவர். இன்றைக்கு நாம் பயன்படுத்தும் போட்டோஷாப்பை உருவாக்கியவர்களில் முக்கியமானவர் இவர். சமீபத்தில் தமிழகம் வந்திருந்த அவருடன் சில நிமிடங்கள் உரையாடியதில் இருந்து சில துளிகள் இங்கே.
தமிழ்நாடு ஓவர் டூ போட்டோஷாப் எப்படி சாத்தியமானது?
கும்பகோணம் அடுத்துள்ள ஸ்ரீவாஞ்சியம் தான் என் சொந்த ஊர். வளர்ந்தது எல்லாம் மெட்ராஸில் தான். சென்னை சாந்தோம் பள்ளியில் தான் எஸ்.எஸ்.எல்.சி. படிச்சு முடிச்சேன். பிறகு, திருச்சி என்.ஐ டி-யில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடிச்சேன். 1980களில், அப்போது தான் கம்ப்யூட்டர் வளர்ச்சி அடுத்தகட்ட நிலைக்கு தாவிக்கொண்டு இருந்தது. மெக்கனிக்கல் படிச்சாலும் எனக்கு கம்ப்யூட்டர் மேல் இருந்த மோகம் அடங்கவில்லை.

அந்த காலகட்டத்தில் கம்ப்யூட்டர் சைன்ஸ் குரூப்பே கிடையாது. வெளிநாடுகளில் தான் படிக்க வேண்டும் என்ற நிலை. அப்பாவும், அம்மாவும் கவர்மென்ட் வேலையில் இருந்தார்கள். எனக்கு 4 சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரன். கணினி மேல் இருந்த ஆர்வத்தில் பி.இ. முடிச்சவுடனே அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு அப்ளை செஞ்சேன்.
மெரிட்டில் சதர்ன் இல்லினோயிஸ் பல்கலைக்கழகத்தில் இடம் கிடச்சுது. ஆனால் மெக்கானிக்கல் படிக்க தான் சீட் கொடுத்தாங்க. அதனால, வேற வழியில்லாம எம்.எஸ். மெக்கானிக்கல் பண்ணிட்டு பிறகு எம்.எஸ். கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சேன். அதன் பிறகு கிறிஸ்டல் கிராஃபிக்ஸ் நிறுவனத்தில் 3டி கிராபிக்ஸ் செய்யும் வேலையில் இருந்தேன். அடுத்த இரண்டு வருடத்தில் அடோப் நிறுவனத்தில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
இன்றைய நவீன முறையில் பயன்படுத்தப்படும் போட்டோஷாப் மென்பொருளை எப்படி கட்டமைத்தீர்கள்?
தாமஸ் நோல், ஜான் நோல் என்ற இருவரும் தான் உலகிலேயே முதன் முதலில் கருப்பு-வெள்ளை படங்களை ஸ்கேன் செய்ய 'பார்னி ஸ்கேன்' என்ற சாப்ட்வேரை வடிவமைத்தார்கள். பின்னர் அந்த சாப்ட்வேரை அடோப் நிறுவனத்திற்கு அவர்கள் விற்று விட்டார்கள். விண்டோஸ் நிறுவனம், அதன் இயக்க மென்பொருளுக்கு ஏற்றவாறு போட்டோஷாப் சாப்ட்வேரை மாற்ற அடோப் நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்தது.
அடோப்பின் முயற்சிகள் தோற்றுபோய் கொண்டிருந்த சமயத்தில் நானும், பீட்டர் மெரில் இருவரும் இணைந்து பல கட்ட சோதனைகளுக்கு பிறகு விண்டோசில் சி ++ மொழி உதவியுடன் நிரல் எழுதி வெற்றிகரமாக இயக்க வைத்தோம். அப்போது அது வரவேற்பை பெற்றாலும், மிக பெரிய அளவில் பயன்பாட்டுக்கு வரவில்லை.
டிஜிட்டல் கேமரா வந்த பிறகு தான் ஒரு மாபெரும் தாக்கத்தை அது உலகம் முழுவதும் ஏற்படுத்தியது. நாங்கள் முதன் முதலில் விண்டோசில் பயன்படுத்தப்படும் போட்டோஷாப் 2.5ஐ உருவாக்கி ஏறக்குறைய 22 ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போதும், என் தலைமையிலான குழு ஒவ்வொரு வெர்சனிலும் புது புது மாற்றங்களை கொண்டுவந்து கொண்டே இருக்கிறோம் .
இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி பிரமிப்பாக இருக்கிறதே . மாணவர்கள் சி++ கற்றுக்கொண்டு இருக்கும்போதே ஆண்ட்ராய்ட் வந்துவிட்டதே... மாணவர்கள் எப்படி அப்டேட் செய்து கொள்வது?
நாம் பேசும் மொழி போல தான் கணினி மொழியும். கணினி மொழிகளில் ஏதாவதொன்றை நன்றாக கற்று தேர்ச்சி பெறுபவர்களுக்கு பிரச்னை இல்லை. ஆனால், சி, சி++, ஜாவா. ஆண்ட்ராய்ட் என எல்லாவற்றையும் அரைகுறையாக கற்றுக்கொள்வதே பிரச்னை. எந்த வழியில் ஒரு பிரச்னைக்கு தீர்வு கண்டுபிடிக்க போகிறோம் என்பது முக்கியமல்ல, எப்படி தீர்வு கண்டுபிடிக்க போகிறோம் என்பதே முக்கியம். இதை புரிந்துகொண்டால்போதும். சி++, ஜாவா, ஆண்ட்ராய்ட் என எதை கற்றாலும் நன்றாக கற்று அதிலேயே தீர்வை கண்டுபிடிக்கலாம். புரோக்ராம் நீளம் கொஞ்சம் கூட குறைய இருக்கலாம் அவ்வளவு தான்.
மொபைல் போன்களில் போட்டோஷாப் பயன்பாடு வெற்றி பெறவில்லையே ஏன்?
மொபைல் போன் தொடு திரைகளில் நாம் தொட்டு நகர்த்தும் துல்லியம் போய்விடுகிறது. பெரும்பாலும் ஆண்ட்ராய்டு தொழில்நுட்ப போன்களில் ஸ்டிக் பயன்படுத்தப்படுவதில்லை, ஸ்டிக் பயன்படுத்தினாலும் கூட கணிப்பொறியில் கிடைக்கும் துல்லியம் கிடைக்காது. ஏர் பிளாட்பார்மில் ஆண்ட்ராய்ட் போன்களில் நாங்கள் வெளியிட்டுள்ள அப்ளிகேஷனும் போதிய வரவேற்பு பெறவில்லை. ஆனால் நம்பிக்கை இழக்கவில்லை. விரைவில் கணினியில் பயன்படுத்தும் அதே போட்டோஷாப்பை மொபைலிலும் கொண்டு வருவோம். வெயிட் அண்ட் சீ என்றார்.

தமிழன் தமிழின் ஓசையை உலகளவில் பரப்பி உள்ளனர்.இதை அறிந்துக் கொண்டு பெருமை அடைவோம் நாம் தமிழன் என்றும் தமிழ் நம் தாய்மொழி என்றும் தலை நிமிர்ந்து நிற்கலாம்..!!
நன்றிகள் பல நான் இதை அறிந்துக் கொள்ள உதவியது விகடன் செய்தித்தாள்..
உலகத்துக்குத் தமிழரின் கொடைகள் நிறையவே உண்டு. என்றாலும் கணினித்துறையில் தமிழாின் அரிய பங்களிப்பை அறிமுகம் செய்துவரும் தங்கள் பணி போற்றுதலுக்குரியது. தொடர்க வைசாலி.
பதிலளிநீக்குநன்றிகள் பல ஐயா.நிச்சயம் தொடர்வேன் தமிழரின் பங்களிப்பை உலகத்துக்கு அறிந்திடச் செய்வேன் ஐயா. நன்றி.
நீக்குநல்ல தகவல். இந்திய இளைய சமுதாயம் கடமைக்கு ஒரு பரீட்சை பாஸ் பண்ணாமல் இது போல உருப்படியாய்க் கற்றுக்கொள்ளக் கற்க வேண்டும்.
பதிலளிநீக்குவருக ஐயா.தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் பல ஐயா.
நீக்குஅறிவோம் இவரைப் பற்றி. நல்லதொரு தகவலைப் பலரும் அறியும் வண்ணம் பகிர்ந்தமை அருமை. தொடருங்கள். நம்மூரில் பொதுவாக மதிப்பெண், கடமை, பெற்றோரின் திணிப்பு என்றுதான் கல்வி அதை விட்டு வெளியில் வந்து விரும்பிப் படித்து சமுதாயத்திற்கு, தொழில்நுட்பத்திற்கு உதவும் வகையில் செய்தால் நம் இளைஞர்கள் எங்கோ செல்வார்கள். தமிழர்கள் நிறைய பேர் சாதித்துவருகின்றார்கள். தொடருங்கள் வைசாலி
பதிலளிநீக்குவருக ஐயா.உண்மையே தமிழர் நிறைய பேர் உள்ளனர் சாதித்தவர்கள்.அவர்களை என்னால் முடியும் வரை வெளிகொணருவேன் ஐயா.தங்களின் வருகைக்கும் மறுமொழியின் ஊக்கத்திற்கும் நன்றிகள் பல ஐயா.
நீக்குஅறிமுகத்திற்ம் தகவலுக்கும் நன்றி!!
பதிலளிநீக்குவருக ஐயா.தங்களின் தொடர் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.
நீக்குபெருமைக்குறிய விடயத்தை பகிர்வாக தந்தமைக்கு மிக்க நன்றி சகோ பயனுள்ள பதிவு தொடரட்டும்.....
பதிலளிநீக்குவாங்க ஜி.தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.தொடருவேன் ஐயா.
நீக்குஅருமையான தகவல்! எத்தனையோ முறை போட்டோஷாப் ஓபன் பண்ணிருக்கேன் ஆனா முதல் வரிசைல இருக்கிற தமிழனின் பெயரை பார்த்ததில்லை. நல்ல தகவல்.
பதிலளிநீக்குஇந்த வலைப்பூவின் முடிவில் வரும் `Photo slideshow' ரொம்ப சூப்பர். எத்தனை பேர் பார்த்திருக்காங்கன்னு தெரியல்ல...மிகவும் நல்ல பயனுள்ள தகவல்கள்!! பகிர்ந்தமைக்கு நன்றி.
நல்லது,தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றி ஐயா.
நீக்குநல்லது,தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றி ஐயா.
நீக்கு