வெள்ளி, 4 மார்ச், 2016

தாயன்பு

                              தாயன்பு


     

தாய் குழந்தையிடத்தில் வைக்கும் அன்பு மேலானது. தாய் பதில் பலனை எதிர்பாராது குழந்தையிடத்தே அன்பு வைக்கின்றார். அது மகிழ்வதைப் பார்த்து அவளும் மகிழ்கின்றாள்.அது வருந்துவதை கண்டு தானும் வருந்து கின்றாள்.பதில் பலனை எதிர்பாராது செலுத்தும் அன்பு கடவுள் தன்மை உடையது. தன்னலம் கருதாது இவ்வுலகில் சிலவற்றைச் செய்கின்றவர்களைப் புனிதமுடையவர்களாக வைத்து உலகம் போற்றுகின்றது. “தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்” என்னும் உயர்ந்த பண்பு காரணமாக புத்தர் உலக மக்களால் போற்றப்பட்டார்.ஒவ்வொரு தாயும் தன் குழந்தைகளுக்குத் தெய்வம் ஆவள். “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்பதும் இக்கருத்து பற்றியதேயாகும். கடவுள் ஒவ்வொரு வீட்டிலும் இருப்பதற்கு பதில், தாயை அங்கு அனுப்பியுள்ளார்.

2 கருத்துகள்: