அறியாமையை நீக்கும் மருந்து;
பாடல்:
இம்மை பயக்குமால்; ஈயக் குறைவு இன்றால்;
தம்மை விளக்குமால்; தாம் உளராக் கேடு
இன்றால்;
எம்மை உலகத்தும் யாம் காணேம், கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து.
பொருள்;
கல்வி இவ்வுலக இன்பத்தைத் தரும்
பிறர்க்குத் தருவதால் குறைவாகாது கற்றவர் புகழை எங்கும் பரவச் செய்யும்.நம் உயிர் உள்ளவரை
கல்வி என்றுமே அழியாது. அதனால் இந்த உலகத்தில் கல்வியைப்போல அறியாமையைப் போக்கும் மருந்தையாம்
கண்டதில்லை.
பாடல் பகிர்வுக்கும், விளக்கம் தந்தமைக்கும் நன்றி.
பதிலளிநீக்குகல்வி என்பது கேடிலாச் செல்வம் என்பது எவ்வளவு உண்மை..நல்ல பகிர்வு சகோ.நன்றி.
பதிலளிநீக்கு