செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

துடித்தெழு தமிழா 

                                          உயிரினமே நீ உயிர் இழந்து இருப்பதனை இன்னுமா அறியவில்லை. உலகில் உயிர்கலெல்லாம் உணர்ச்சியற்று கிடக்கின்றன.உறவுகள் கோடி இருப்பினும் உன்னதம் அறியா பிழைக்கின்றன .
               உடல் மண்ணுக்கில்லையாம் ! உயிர் உற்றோருக்கில்லையாம் !                                                உடன் பிறந்தோராயினும் வெவ்வேறு உருவமாம்.  உயிர் பிழைத்தால் போதும் உணர்வுகள் இல்லையாம் . உயிர்கள்கொள்ளையாம்,உள்ளமே இல்லையாம்
உணர்வுகள் தொல்லையாம்! உம்மின் உணர்ச்சிகளுக்கே எல்லையாம்।                              உருகிய பனிமலையே ஓடாத ஓடையானால் ! எரியும் எரிமலையே எரிந்து சம்பலானால், உச்சியில் ஊற்றுகளே  உக்கிரத்தில் வேர்த்து போனால். இந்த உணர்ச்சியிலா உயிரினம் ஈடேறுமா, இல்லை கடேறுமா . கவலைகள் இல்லையாம் நம் நாடு கலையிழந்தாலும் ! இங்கு அடிமைகள் கொள்ளையாம் நம் மண்ணில் விதை விளைந்தாலும் !
                       ஐவகை நிலங்களுக்கு தொப்புள் கொடி அறுத்து நம் தாய் நாடாம்!ஆனால், இன்று தொட்டிலில் அழும் குழந்தைக்கு தினைமாவு தீவனமாம்.தீர்த்தார் பசிபோகும் தீர்ந்தால் ருசிபோகும் .
                        தாய் பால்(வெள்ளை) மனம் மறந்ததென்ன.நம் பாண்டியர் குலநாட்டிலே ! ஆவின் துயர்த்தித்தான்(பசுவின் துன்பத்தினை போக்கினான் ) ,புறாவுக்கு ஈடறுத்தான் (புராவிற்கு நஷ்டஈடாக  தன் தசையை  கொடுத்தான் ) என்றல்லவா போற்றியது சங்க நூல்கள் .
                       தமிழர் , புலவர்களின்  ஓலைச்சுவடிகளை ஆற்றில் விட்டு , அந்நியர் அண்டை நாட்டவர்கள் அதனை பெற்று , ஐம்புலன்களை  அனைத்தையும் கற்று , அடிமைகளாய் நம்மை ஏற்று , அதிர்வில்லா அடைக்கலம் இட்டு .
                      நம் ஐம்பொறிகளை தீயில் சுட்டு, நடைபிணமாய் ஆக்கினரே அன்றாவது அறியவேண்டாமா ? அவர் சுட்ட புண் எரிச்சலை தாங்கிக்கொண்டோம் . நம் உணர்ச்சிகள் பொங்கி வழிவதனை நாம் எங்கே கண்டோம் .
                      சேரன்,சோழன் ,பாண்டியன் என்னும் மூவரை வைத்து முக்காலம் வென்று ! முற்றையும் அறிந்து நாம் என்னத்தை கையாண்டோம்.  நமது , எண்ணத்தையே நாம் கைதீண்டோம்.  இஸ்லாமியன் ஆயினும் என் தமையன்! கிருத்துவன் ஆயினும் என் மைத்துனன் என்றெல்லாம் ஊரறிய உமிழ் இறைத்தோம் !
                     இன்றோ , ஒரு படி நெல்லுக்காக உற்றானும் ஊரான் என்கிறோம் . பஞ்சம் பாடுகிறது நாம் அதில் தான் ஆடுகிறோம் . என்ன தான் நாம் நம் தாய் திருநாட்டில் வாழ்ந்தாலும் , தமிழ் மொழி  ஆயிந்தாலும், அறிகிறோமா நாம் ஆயிரத்தில் ஒன்றென ! மொழிகிறோமா என் தாய் திருநாடென! அன்று அவனாய் வாழ்ந்தான் ! இன்று இவனாய் வாழ்க்கிறான் ! நாளை எவனோ வாழ்வான் ! என்று தானே நாம் இன்னும்  ஏய்கிறோம்.
                   முக்காலத்தையும் வென்ற முந்தைய தமிழர்களே கேளுங்கள் ! முயற்சிகள் இன்றி முன்னேற்றம் கண்டதுண்டோ ? இகழ்ச்சிகள் இன்றி நாம் இன்னிமைகள் வென்றதுண்டோ ? இன்னா சொல்லையும்  இன்சொல்லாக ஏற்று ஈடுகொடுங்கள் ! இடைவிடாது ஈரம் விடுங்கள் ! " ஆற்றில் கடப்பதனால் பாறை கரைவதில்லை , ஆழம் இருப்பதனால் கடலும் வற்றவில்லை " கரையில் மிதக்கும் காகித கப்பலா ?
 கடலில் கிடக்கும் முத்தின் சிப்பிகளா ? முடிவெடுங்கள் ! - முடிவாய் எண்ண முயன்றால் கூட முட்டாள் என்ற சொற்பதம் அடைவாய் ,சரியாய் பாதையை தொடுத்தல் சொர்க பதம்  அடைவாய் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக