திங்கள், 17 பிப்ரவரி, 2020

பவித்திரம்

65.தமிழ் மீது பற்று
பிறக்கையிலே நான் பிடிகொண்டேன்
தாய் தழுவையிலே நான் விழிகொண்டேன்
தங்கை அழைக்கையிலே நான் செவிகொண்டேன்
தாமரை மலரையிலே நான் மதிகண்டேன்
தமிழே உன்னைப் படிக்கையிலே
உன் மீது நான் பதிகொண்டேன்

66.உன்னருகே நானிருந்தால்
சற்றுநேரம் உற்றுநோக்கி
உன்னருகே நானிருந்தால்
மற்றொரு உறவில்லை உலகினிலே
காற்றோடு கடலினிலே கலந்திடவே
காணவந்தேன் காதலனே!!!
சாரல் ஒன்றும் வீழவில்லை
சாகும் வரை வினையில்லை
காதல் ஒன்றும் கனவில்லை
காலையினில் கலைந்திடவே
காலம்வரை காத்திருப்பேன்
காணும்வரை கரையிருப்பேன்
காணவருவாயா காதலனே!!!

67.அழகு
நல்ல வனங்களே நாட்டிற்கு அழகு
நல்ல வண்ணங்களே ஆடைக்கு அழகு
நல்ல குணங்களே நண்பனுக்கு அழகு
என்றும் அழகாய் வாழப்பழகு

68.நினைவுகள்
நான் உன்னை நினைக்கும் ஒவ்வொரு  நொடியிலும்
உன்னுடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன்
என் நினைவுகளுக்கோ என்றுமில்லை ஒரு எல்லை
உன் நினைவுகளோ மனமெங்கும் கொள்ளை
என் மனமோ மாறாத  ஒன்று
நமக்கு மணமாகாதா என்று
ஏங்கிய பொழுதுகளும் உண்டு
எண்ணிய  என் இமைகளோ  சோர்ந்த்து
அப்பொழுதும் உன் நினைவுகள் தானே
என்னுள்ளே ஊர்ந்தது

69.அவன்
புன்கவி வண்மம் பெற்றவன்- என்
தந்தை எண்ணம் கொண்டவன்- என்
தாயின் நன்மனம் கற்றவன்- அவன்யார்?

70.பெண்ணின் வாசலிலே
நான் பிறக்கையிலே
தாயின் தொப்புள்கொடி அறுக்கப்பட்டது
தாய்ப்பால் தடுக்கப்பட்டது
நான் நடக்கையிலே
தொட்டில்கொடி அறுக்கப்பட்டது
படுக்கையாலே பிடிக்கப்பட்டது
என் பருவத்திலோ
உறவுக்கொடி அறுக்கப்பட்டது
ஊரோரால் மறுக்கப்பட்டது
உன் பிரிவினால் இன்று
என் தாலிக்கொடி அறுக்கப்பட்டது
எனக்கோ வாழ்க்கையே
வெறுத்துவிட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக