41.உன்னை விட்டு பிரியிலே
கண்கள் கூட கலங்கவில்லை
கைகள் கூட அசைக்கவில்லை
நெஞ்சம் கொஞ்சம் தயங்கவில்லை
நினைவை தேடி ஏங்கவில்லை
மனதில் என்றும் மாற்றமில்லை
மயக்கம் தான் மரணமில்லை
நம்
உறவிற்கு என்றும் முடிவேயில்லை..
42.காத்திருக்கிறோம், கரையேருவோம்
விடியலுக்காக காத்திருக்கிறது சூரியன்
சூரியனிற்காக காத்திருக்கிறது தாமரை
மாலைக்காக காத்திருக்கிறது நிலவு
நிலவிற்காக காத்திருக்கிறது நதிகரை
நீண்ட வானில் நீயும் நானும்
சூரியனாய், நிலவாய்
முழுமதி பெற காத்திருக்கிறோம்
நிகழ்காலத்தால் காய்த்திரிக்கிறோம்
நிறைவேற்றியே கரையேருவோம்.
43.கருமை நிற கண்ணா
கருமேகம் தான் மழையை உண்டாக்கும்
கருக்கரும்பு தான் சுவையை உண்டாக்கும்
கரம் ஒன்று தான் உழைப்பை உண்டாக்கும்
கரும்பலகை தான் கல்வியை உண்டாக்கும்
கருமுடி தான் அழகை உண்டாக்கும்
கருநிறன் தான் ஈர்ப்பை உண்டாக்கும்
கருவிழி தான் காட்சியை உண்டாக்கும்
கற்பு தான் பெண்மையை உண்டாக்கும்
இவையனைத்தும்
கருக்கொண்ட இடம் எங்கோ அறியவில்லை
இடம் கொண்டது
உன்னில் தான் என் கண்ணா
44.எனக்கெனவே
அன்பாய் என்னை பார்த்துக்கொள்
ஆறுயிரில் என்னை சேர்த்துக்கொள்
அழகாய் நீயும் பூத்துக்கொள்
-என் மனதில் மட்டும்!
45.இளைய சமுதாயமே கைகொடுப்பீர்
சிந்தையில் சிந்தித்தால்,
நான் மந்திரம் போதித்தால்,
விந்தையால் விதை விதைத்தால்,
மந்தையில் வளம் நீ படைத்தால்,
சந்தையில் சாதிப்பாய், சரித்திரம் நீ படைப்பாய்,
சாகச உடைஉடுப்பாய், சாதியை நீ உடைப்பாய்,
சமரசம் அதை தொகுப்பாய், சங்கமம் நீ தொகுப்பாய்,
சங்க நூல் வழி மதிப்பாய் – நீ
தமிழனாய் தடம் பதிப்பாய்
46.இளமையிலே வலிமைகளே
இளமை காலமிது, இனிமை காலமாம்,
இனிமை காலமிது, இன்பம் காணுமாம்,
இகழ்ச்சி தனை, இன்று ஏற்குமாம்,
இழிவுதனை, கொன்று புதைக்குமாம்,
புகழ்ச்சி அதை மனதில் பதுக்குமாம்,
வளர்ச்சி பெற நாளும், உழைக்குமாம், - தன்
உயிரைவிட, உறவை வளர்க்குமாம்,
உயர்ந்த உச்சிகளும், அதற்கு
உதிரி பூக்கலாம்!..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக