சனி, 15 பிப்ரவரி, 2020


36.உன்னோடு நான்
உன்னோடு உயிராக, உயிரோடு உயர்வாக
உன்னத உணர்வோடு உந்தன் உரவோடு
உயிர்வாழ்வேன், உலகினிலே!
ஊசலாய் உய்வேன், உன் மனதினிலே!
உன்னால் தானே, உரைந்தேன் காதலிலே..






37.காதல் கவிதை
கவிதை சொல்ல நினைக்கிறேன்உன்
கண்கள் கண்டு வியக்கிறேன்
கடந்து செல்ல நினைக்கிறேன்
கரைந்தும் நான் கிடக்கிறேன்
கடலில் கலைய நினைப்பினும்
கரையோரம் நின்று தவிக்கிறேன்
கண் முன்னால் நீ நின்றால்
கண் இமைக்க கூட வெறுக்கிறேன்
காதல் சொல்ல நினைக்கிறேன்
உன் பெயரை தானே ஜெபிக்கிறேன்
38.உன்னை கண்டேன்
உன்னை ஏனோ நான் கண்டுக்கொண்டேன்
என்னை நானே உன்னில் விட்டுச்சென்றேன்
தன்னால் நானும் பற்றுக்கொண்டேன்-உன்
முன்னால் நானும் கற்றுக்கொண்டேன்-உன்னை
உற்று நான் கற்றுக்கொண்டேன்……..






39.தலைவா
கவிதை என்ற தலைப்பில்
தலைவா உன்னை நானும் சந்திக்கிறேன்
சரித்திரம் என்ற தலையனை
சொல்லை கற்பித்தேன்
கலைகளை எல்லாம் உன்
கண் முன்னாலே சிற்பித்தேன்.
கவனம் சிதறா கவனிக்க உன்னை
என் கண்களை நானும் அற்பித்தேன்
அழகுற காதல் சிற்பம் அமைய
நானே முற்பித்தேன்
அனைவரும் வண்ணம் களையரவே
நான் வெற்பித்தேன்
வேண்டுதல் இன்றி காணுதல் இல்லை
உன்னை என்று மெய்ப்பித்தேன்




40.தொடர்வோம்
நான் என்பது வினா?
நீ என்பது விடை!
நாம்  என்பது தொடர் கதை……

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக