31.வாடினேன்
காதலாலே கண்ணாமூச்சி ஆடினேன்
காற்றாய் உன்னை மூச்சில் தழுவி பாடினேன்
கவிதையெங்கும் உன்னை தானே தேடினேன்
காணாமலே உன்னால் நானும் வாடினேன்
32.நான் தானோ
நீ என்பதன் அர்த்தமே
நான்!..
நீ கொண்ட சோலையில்
நான் வரவா மலராக
நீ கண்ட பார்வையில்
நான் ஆனேன் முழுநிலவாக
நீ சொன்ன வார்த்தை தான்
நான் வந்த வழி
நான் உன் மீது கொண்ட
காதலை இன்றாவது
உணர்வாயா நீ! என் உறவே
உன் முன்னால் நிலைக்கும்
நான் உன் கண்ணால் கலங்கியதேனோ
தன்னால் சிதைந்தேன் நானோ
இனி நீ என்ற சொல்லும்
நான் தானோ?..
33.மனம் எய்த வில்
உன்னை அன்று கண்டேன் என் கனவில்,
நான் அன்றே நின்றேன் உன் மனதில்,
உன் அழியாத நினைவில்,
என் அலைபாயும் வயதில்,
நம் அணையாத மனதில்,
நீ இட்ட வில்…
34.
மாலை
பொழுதினிலே
உன் பெயரை சொல்ல தோனவில்லை,
என் பெயரும் சொல்ல தேவையில்லை,
கண் இமைக்க கூட நேரமில்லை,
காதலை இழக்கவும் மனமேயில்லை
உன்னை கண்ட மாலையிலே..
35.மறக்கின்ற மனமே
காதல் என்னும் வார்த்தையை – என்
கவிதையில் நீ பார்க்கிறாய் – உன்
கண்ணுடன் அதை சேர்க்கிறாய் – என்
மனதில் நீ பதிக்கிறாய் – உன்
மனதாய் எண்ணி நினைக்கிறாய் – என்
மணமாய் நீ இருக்கிறாய் – உன்
அழகால் என்னை இழுக்கிறாய் – என்
ஆலமெல்லாம் நீ கடக்கிறாய் – உன்
ஆறுயிரையும் எனக்கென சிதைக்கிறாய்
ஏனோ, இதனை என்னிடம் நீ மறைக்கிறாய்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக