ஞாயிறு, 5 மார்ச், 2017

500 வது பதிவு!


தமிழக அரசு மற்றும் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் இணைந்து இணையத்தில் தமிழை வளா்க்கும் நோக்குடன் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களிலும், அவற்றுக்குட்பட்ட இணைவுபெற்ற கல்லூரிகளிலும் கணித்தமிழ்ப் பேரவைகளை ஏற்படுத்துமாறு அறிவுறுத்தியது.

                        கே.எஸ்.ஆா் மகளிர் கலை  அறிவியல் கல்லூரியில், தாளாளா் அரிமா கே.எஸ்.ரங்கசாமி எம்ஜேஎப் அவா்களின் அனுமதியுடன், செயலா் திரு. ஆா் சீனிவாசன் மற்றும் செயல்இயக்குநா் திருமதி கவிதா சீனிவாசன் அவா்களின் வாழ்த்துக்களுடன், முதல்வா் முதல்வா் மா.கார்த்திகேயன் அவா்கள் நெறிகாட்டுதலில் கணித்தமிழ்ப் பேரவை 15.12.2015 இனிதே தொடங்கப்பட்டது. தமிழ்இணையக் கல்விக்கழகத்திலிருந்து திரு.தமிழ்ப்பரிதி ஐயா அவர்கள் கலந்துகொண்டு எம் கல்லூரி கணித்தமிழ்ப்பேரவைக்கூட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
 
கல்லூரியின் ஒருங்கிணைப்பாளராக,  முனைவா் இரா.குணசீலன் அவர்கள் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது.

மாணவிகளின் ஒத்துழைப்புடன்,
1. கணினியிலும், தமிழிலும் ஆா்வமிக்க 

100 மாணவா்களைத் தேர்ந்தெடுத்தல்.


2. ஒருங்குறி முறையிலான தமிழ்த்தட்டச்சு முறையைக் கற்பித்தல்.


3. தமிழ்த்தட்டச்சு தெரியாதவா்களாக இருந்தால் அவா்களுக்கு தமிழ் 99 

முறையை பயிற்றுவித்தல்.


4. தமிழ் வலைப்பதிவில் எழுதும் முறையை அறிமுகப்படுத்துதல்.


5. தமிழ்விக்கிப்பீயா குறித்த அறிமுகம், அதன் பிற திட்டங்கள் குறித்த 

அறிமுகம், அதில் பங்களிப்பாளராகும் வழிமுறைகளைத் தெரிவித்தல்


6. தமிழ்க்குறுஞ்செயலிகள் குறித்த அறிமுகத்துடன் அவற்றை 

உருவாக்குவதற்கான பயிற்சிகளை வழங்குதல்


7. தமிழ் மென்பொருள்களை உருவாக்குதல்.


8. இணையத்தில் மின்னூல் உருவாக்குதல்


9. இணையத்தில் உள்ள நூலகங்களைப் பயன்படுத்த துணைநிற்றல்


10. இலவச மென்பொருள்கள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தி 

அவற்றைப் பயன்படுத்த வழிவகுத்தல் 


என்னும் நோக்கங்களுடன் எம் கல்லூரியின்  கணித்தமிழ்ப் பேரவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எமது பணியைப் பாராட்டி தமிழ்இணையக் கல்விகழகம் ஆதார நிதியாக ரூ 25000 வழங்கியுள்ளது.
இன்று எம் கல்லூரியில் 600 மாணவிகள் தமிழ் ஒருங்குறி வழியிலான தமிழ்த்தட்டச்சுப் பயிற்சிபெற்றுள்ளனர்.
கே.எஸ்.ஆா் மகளிர் கலை அறிவியல்கல்லூரியின் வலைப்பதிவில் தொடர்ந்து எழுதிவருகிறார்கள்.
எம் கல்லூரி மாணவிகள் கல்வி, அறிவியல், வணிகம், ஆன்மீகம், உளவியல், இலக்கியம், மொழிபெயர்ப்பு, படைப்பாக்கம் என எல்லாத்துறைகளிலும் எழுதிவருகிறார்கள். பல்வேறு நாடுகளிலிருந்து பார்வையாளர்களையும், மறுமொழிகளையும் பெற்றுள்ளனர். தமிழ்மணம் திரட்டியில தரவரிசையில் எம் கல்லூரி வலைப்பதிவு 122 வது இடத்தில் உள்ளது.
இன்று 500 பதிவு என்னும் இலக்கை அடைந்துள்ளனர். இந்த மகிழ்ச்சியான நேரத்தில் இந்த வலைப்பதிவில் எழுதிய ஒவ்வொரு மாணவிகளையும் வாழ்த்துகிறேன். குறிப்பாக வணிகவியல் துறை மாணவிகள் செ.வைசாலி, மற்றும் அ.கோகிலா, மற்றும் ஆங்கிலத்துறை மாணவி ஜெ.ஜனனி, மூன்றாமாண்டு கணிதவியல் மாணவி கு.நந்தினி ஆகியோருக்கு எனது சிறப்பான பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொ்ளகிறேன். அவர்களை ஊக்குவித்த எம் முதல்வர் முனைவா் மா.கார்த்திகேயன் அவர்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும், வலையுலக உறவுகளுகம் நெஞ்சம் நிறைந்த நன்றியை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

13 கருத்துகள்:

 1. உங்களுக்கும் உங்கள் கல்லூரி நிர்வாகத்தினருக்கும் மற்றும் மாணவியர்கள் செ.வைசாலி, அ.கோகிலா, ஜெ.ஜனனி, கு.நந்தினி அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் மேலும் இந்த தளம் வளர் எனது வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் ஊக்குவித்தலுக்கும் நன்றிகள் நண்பரே

   நீக்கு
 2. பெண் எழுத்தாளர்கள் குறைவாக காணப்படும் இந்நிலையில் எமது கல்லூரியில் கணித்தமிழ்ப் பேரவை என்ற அமைப்பின் மூலம் எங்களையும் எங்களது எழுத்துக்களையும் அடையாளப்படுத்த வாய்ப்பளித்த எமது கல்லூரி முதல்வருக்கும் ஆசிரியர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  கலாம் ஐயா கூறுவார் வாய்ப்புக்காக காத்திருக்காதே உனக்கான வாய்ப்புக்களை நீயே உருவாக்கு என்று. ஆம் எனக்கான வாய்ப்புகளை ஒவ்வாரு முறையும் எனக்கு கிடைத்த குருநாத தந்தையான மற்றும் நல்ல வழிக்காட்டியாகவும் நெறியாளராகவும் கிடைத்த எனது ஆசான் முனைவர் இரா.குணசீலன் ஐயா தான் என்னுடைய அடையாளம் காண செய்தவர் என்ற கர்வத்தோடு அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  மேலும் எங்களது எழுத்துகளுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் எனது வலையுலக தமிழ் உறவுகளுக்கு எமது கல்லூரியின் சார்பிலும் எமது சகோதரிகள் சார்பிலும் அன்பு கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும். எங்களின் சுடர் விளக்குகளை தூண்டும் கோலே உங்கள் அனைவரின் மறுமொழிகள் தான்.

  மீண்டும் அனைத்து உறவுகளுக்கும் நன்றி நன்றி நன்றி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல ஆசிரியரால் நல்ல மாணவரை உருவாக்கமுடியும்!

   நல்ல மாணவரால் நல்ல ஆசிரியராக உயரமுடியும்!

   என்ற சிந்தனைக்கு தாங்கள் நல்ல எடுத்துக்காட்டு.
   வாழ்வில் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்.

   நீக்கு
  2. தங்களை உறுதுணையாய் கொண்டு நிச்சயம் பல சாதனைகளை படைப்பேன் ஐயா.என்றும் தங்களின் மாணவியாகவே அடையாளம் காண்பேன்.

   எனது அடையாளமும் பலமும் தாங்கள் தான் ஐயா.

   நன்றிகள் சொல்ல மாட்டேன் ஐயா.இன்னும் நாம் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் உள்ளது எனவே நன்றி கூறி இங்கு முடிக்கும் நிலை வேண்டாம் ஐயா.

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் ஐயா.

   நீக்கு
 4. எமது வாழ்த்துகளும்... கில்லர்ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் ஐயா.

   நீக்கு
 5. நல்ல கல்லூரி நிர்வாகம் என்பதை, ஆண்டுவிழாவின் போது நேரில்கண்டு மகிழ்ந்தேன்.
  நல்ல ஆசிரியர் என்பதை முன்னமே அறிந்து, திரு குணசீலன் அவர்களை எமது “கணினித் தமிழ்ச்சங்கம்” நடத்திய பதிவர் விழாவில் உலகளாவிய இணைய-இலக்கியப் போட்டிகளில் நடுவராகப் பணியாற்ற அழைத்து கௌரவித்தோம்.
  நல்லவற்றைத் தேடிப்பயிலும் நன்மாணவியர் குறிப்பாக என் அன்பிற்குரிய மகள் செ.வைசாலியுடன், அ.கோகிலா, ஜெ.ஜெனனி, கு.நந்தினி மற்றும் தாரணி ஆகிய மாணவச் செல்வங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
  தற்கால மாணவர்கள் படிப்பில் முந்துகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் படிப்போடும் கூடுதலாக என்ன தெரிந்துவைத்திருக்கிறார்கள் என்பதை வேலைவாய்ப்பின் போதுதான் அவரவரும் அறிவார்கள். அறிவார்ந்த இப்பிள்ளைகள் நிச்சயமாக என்னைப் போலும் ஆசிரியர்களை விடவும் வெகுவேகமாக முன்னேறுவார்கள் என்பதே மகிழ்ச்சிதரும் செய்தியாகும். இவ்வாய்ப்பைத் தொடரும் மாணவிகளுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். கல்லூரி நிர்வாகத்திற்கும், அன்பு நண்பர் நல்ல பேராசிரியர் முனைவர் இரா.குணசீலனுக்கும் என் வணக்கங்கள். விரைவில் ஆயிரமாவது பதிவுடன் மின்னூல் தொகுப்புகளாக இவற்றைத் தந்து உலகளாவிய பெருமை பெறவும் அன்புடன் அழைக்கிறேன். (அவரவர் தொகுப்பைத் தனித்தனியாகவே தரலாம், கல்லூரியின் பெயரால் தொகுப்பாகவும் தரலாம்) முயற்சி செய்யுங்கள். வாழ்த்துகள். வணக்கம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஐயா, தங்கள் கருத்துரையும் , வழிகாட்டுதலும் எமது மாணவிகளுக்கு பெரும் ஊக்கத்தை தருகிறது. எனது எழுத்துக்கான மதிப்பை நான் கடந்த எட்டு ஆண்டுகளாகப் பெற்றுவிட்டேன். இனி எனது இலக்கு என்னைவிட மிகச்சிறந்த நூறு மாணவிகளை தமிழ் எழுத்துலகத்துக்கு அறிமுகம் செய்வது. அந்த நம்பிக்கையை எனது மாணவிகள் நிறைவேற்றுவார்கள் என்று திடமாக நம்புகிறேன். தங்கள் கருத்துரைக்கு நன்றிகள் ஐயா.

   நீக்கு
  2. தங்களுடைய பாராட்டுதலுக்கு மிக்க மகிழ்ச்சியும் நன்றிகளும் எனது அன்பு அப்பா.
   ஊக்குவிக்க ஆளிருந்தால் ஊக்குவிற்பவன் கூட தேக்குவிற்பான் என்ற சிந்தனைக்குரிய எனது குணசீலன் ஐயாவின் வழிக்காட்டுதல் இருக்கையில் நிச்சயமாக உலகளவில் அடையாளம் காண்போம்.
   மின்னூல் பற்றி தாங்கள் கோவையில் சந்தித்த போது என்னிடம் கூறியிருந்தீர்கள் பா.
   விரைவில் தாங்கள் கூறுவது போல் ஆயிரம் பதிவுகளோடு சந்திப்போம்.
   தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் அப்பா.

   நீக்கு