வெள்ளி, 17 மார்ச், 2017

கணித்தமிழ் நூலகம் !

கே.எஸ்.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் சிறப்பாக செயல்பட்டு வரும் கணித்தமிழ்ப் பேரவைக்கான ஆதார நிதியாக ரூ 25000 வழங்கப்பட்டது. கணித்தமிழ் வளர்ச்சியை மாணவிகளிடம் கொண்டுசெல்லும் முயற்சியாக ரூபாய் 8000 மதிப்புள்ள நூல்கள் வாங்கி கணித்தமிழ் நூலகத்தை எம் கல்லூரியில் உருவாக்கியுள்ளோம்.

ஆதார நிதி வழங்கிய தமிழ் இணையக் கல்விக் கழக இயக்குநருக்கும், மாநில கணித்தமிழ்ப்பேரவை ஒருங்கிணைப்பாளர் தமிழ்ப்பரிதி ஐயா அவர்களுக்கும் எமது நன்றிகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

எம் முயற்சிக்கு என்றும் துணை நிற்கும் முதல்வர் முனைவா் மா.கார்த்திகேயன் அவர்களுக்கும்
எம் கல்லூரி நிர்வாகத்துக்கும் நன்றிகலந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

எம் கல்லூரியின் கணித்தமிழ்ப் பேரவையின் செயல் வீராங்கனைகளான மாணவிகளுக்கு நன்றிகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

கணித்தமிழ் நூலகத்துக்காக வாங்கிய நூல்களின் விவரம்..

தமிழ்த் தட்டச்சுப்பயிற்சி

செல்பேசி பழுது நீக்குதல்

கீ போர்டு சார்ட் கட் எம் எஸ். ஓ

கீ போர்டு சார்ட் கட் - சி ஜி டி

கணினியின் அடிப்படை

கட்டற்ற மென்பொருள் ஜிம்ப்

போட்டோ சாப், கோரல் டிரா செயல்முறைப் பயிற்சிகள்

கணினிப் பராமரிப்பு

இணையத்தை அறிவோம்

இது உங்களுக்கானதா பாரு்ஙகள்

கணினித் தமிழ் - இல.சுந்தரம்

தமிழ் விக்கிப்பீடியா

நெட்வொர்க் தொழிலநுட்பம்

லினக்சு

நீங்களும் உருவாக்கலாம் வலைப்பூ

கட்டற்ற மென்பொருள்

லினக்சு

சிஎஸ்எஸ்

எச்டி எம் எல்

மை எக்யூல்

ரூபி

மற்றும் தமிழ்க் கம்யூட்டர்,

கம்யூட்டர் உலகம் இதழ்களின் ஒரு ஆண்டு சந்தா.

கட்டற்ற மென்பொருள் குறுவட்டு 8

கணித்தமிழ் மென்பொருள்கள் குறுவட்டு 2

கணித்தமிழ் வளர்ப்போம்! காலத்தை வெல்வோம்!

8 கருத்துகள்:

  1. கணித்தமிழ் சார்ந்த நூல்கள் எங்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைய உள்ளது.இந்நூல்களை குறித்து பின்வரும் கட்டுரைகளில் எழுத இருக்கிறோம்.கணித்தமிழை வளர்ப்போம் தங்களின் வழிக்காட்டுதலுடன் வெற்றி வாகை சூடுவோம்.
    நன்றி குரு ஜி.

    பதிலளிநீக்கு
  2. முனைவருக்கு வாழ்த்துகள் - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  3. உங்கள் மாணவிகளை கொண்டே பல புதிய நூல்களை தமிழில் எழுத சொல்லி அதை மின்னூலாக உங்கள் கல்லூரி சார்பில் வெளியிடலாமே இந்த கால மாணவிகளுக்கு ஆங்கில் அறிவு நிச்சயம் இருக்கும் அவர்கள் கம்பியூட்டர் சம்பந்தமான கட்டுரைகளை படித்து அதை அவர்கள் பாணியில் தமிழில் எழுதலாம் ஒவ்வொரு மாணவிக்கும் ஒரு தலைப்பில் கட்டுரை எழுத சொல்லி அதை அழகாக தொகுத்தும் வெளியிடலாம். மேலும் இதை புக்காக கூட வெளியிடலாம் புத்தகமாக வெளியிட்டால் கல்லூரிகளிலே விற்றும் விடலாம் இதனால் மாணவர்கள் அறிவும் வளர்வதோடு அவர்களையும் தமிழ் எழுத்தாளாரக்க இது மிகவும் பயிற்சிகளமாக இருக்கும் இதற்கு உங்கள் கல்லூரி நிர்வாகதினரிடம் பேசி முடிவுவெடுங்கள் குணசீலன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வழிகாட்டுதலுக்கு நன்றிகள் ஐயா. எதிர்காலத்தில் மாணவர்களின் படைப்புகளை நூலாக வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம் ஐயா நன்றி.

      நீக்கு