வியாழன், 30 மார்ச், 2017

இன்றை சிந்தனை (காணொளி)

வாய்ப்புக்காகக் காத்திருக்காதே உருவாக்கு!
என்று என் மாணவிகளுக்கு அடிக்கடி சொல்வதுண்டு..
என் மாணவிகளுள் தமிழ்மணி முருகன் அவர்கள் எங்கள் கல்லூரியில் வேதியியல்துறை பயின்று வருகிறார். இவருக்கு வானொலி அறிவிப்பாளராகவேண்டும் என்பது பெரிய கனவு.
அதற்கான வாய்ப்புக்காக பலமுறை என்னைச் சந்தித்தார்..
அவருக்கான வாய்ப்பை நான் அவருக்காக உருவாக்கியுள்ளேன்.
இனி நாள்தோறும் ஒரு சிந்தனையை வேர்களைத்தேடி என்னும் யுடியுப் வலைக்காட்சி வழியாக இணையத்தில் பதிவேற்றவுள்ளேன்.
உங்கள் ஊக்குவித்தலுடன் இன்று அவரது குரல் யுடியுப், முகநூல், கட்செவி உள்ளிட்ட பல்வேறு சமூகத் தளங்களிலும் ஒலிக்கிறது.
வாழ்த்துக்கள் தமிழ்மணி முருகன்!
எட்டுத்திக்கும் ஒலிக்கட்டும் உங்கள் குரல்!


1 கருத்து:

  1. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.தங்களின் ஊக்குவிக்கும் முறைக்கு நான் தலை வணங்குகிறேன் ஐயா..
    வாழ்த்துகள் எனது சகோதரியே..
    வாய்ப்புகளை பயன்படுத்தி வெற்றி பெற்று தங்களை பிறருக்கு அடையாளப்படுத்திக் கொள்ள வாழ்த்துகள் அக்கா.

    பதிலளிநீக்கு