புதன், 29 மார்ச், 2017

உழைப்பின் அருமை...
Image result for டால்ஸ்டாய்... இரஷ்ய நாட்டில் புகழ்பெற்ற எழுத்தாளர் ஒருவர் இருந்தார். அவ்வப்போது உழவுத்தொழிலையும்  செய்து வந்தார்.  ஒருமுறை தொடர்வண்டி நிலையத்தில் அவர் நின்றிருந்தபோது, அங்கிருந்த பெண்மணிஒருவர் அவரைக் கையைத்தட்டி அழைத்தார். அவரின் தோற்றம் ஒரு கூலிக்காரர்போல் இருந்ததோ என்னவோ?

ஐயா, தொடர்வண்டி புறப்படும் நேரமாகிவிட்டது.  என் கணவர் அருகிலுள்ள சிற்றுண்டி விடுதியில் உள்ளார்.  அவரை, இங்கு அழைத்து வாருங்கள். நீங்கள் செய்கின்ற இந்த உதவிக்குக் கூலி பெற்றுக்கொள்ளுங்கள்எனக் கூறிய அப்பெண்மணி, அவருடைய கணவரின் தோற்ற அடையாளங்களைக் குறிப்பிட்டார்.

அவரும் ஒப்புக்கொண்டு அப்பெண்மணியின் கணவரை உடனடியாக அழைத்து வந்தார்.  அவர் செய்த வேலைக்கான கூலியாகச் சிறுதொகையைப் பெற்றுக்கொண்டார்.

சிறிதுநேரங்கழித்த பின்னர்தான்  அப்பெண்மணிக்கு, அவர்தாம் இரஷ்ய நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் என்பது தெரிந்தது.

தான் செய்த தவற்றை உணர்ந்து அவரிடம் மன்னிப்புக் கேட்டார் அப்பெண்மணி.  ஆனால் டால்ஸ்டாயோ, “அதனால் என்ன, நீங்கள் சொன்ன வேலைக்காகப் பெற்றுக்கொண்ட கூலியைத் திருப்பித் தரமாட்டேன்என்றார். புகழ் பெற்றவராயினும் உழைப்பின் அருமையை அவர் அறிந்திருந்தார்.

உழைத்து உண்ணும் உணவே சுவைக்கும். உழைக்காமல் உண்பது பிறர் உழைப்பைச் சுரண்டுவதற்கு ஒப்பாகும்.  எந்த வயதினராக இருப்பினும், உழைத்தே உண்ணுதல் வேண்டும்.  அப்பொழுதுதான் அந்த வீடும் நாடும் முன்னேறும்……

1 கருத்து:

  1. “அதனால் என்ன, நீங்கள் சொன்ன வேலைக்காகப் பெற்றுக்கொண்ட கூலியைத் திருப்பித் தரமாட்டேன்” என்றார்.
    ஹ ...ஹஹா... ஆனால் இந்தியாவில் இப்படியெல்லாம் சொல்லி தப்பிக்கமுடியாது டால்ஸ்டாய்....
    https://www.scientificjudgment.com/

    பதிலளிநீக்கு