புதன், 15 மார்ச், 2017

முயற்சி

                                             
                               
                            

மாணவப்பருவத்தில் இருக்கும் நாம் அனைவரும் ஏதேனும் ஒரு செயலில் வெற்றி பெற நினைத்தால் அதற்கு தகுந்த பறிற்சி மட்டும் எடுத்தால் போதாது. அதற்கு முறையான பயிற்சியுடன் கூடிய முயற்சியும் எடுக்க வேண்டும். நீங்கள் ஒரு பாடத்தை படிக்கிறீர்கள் என்றால் அதில் பயிற்சியுடன் முயற்சி எடுக்க வேண்டும். நீங்கள் ஒரு விளையாட்டு வீராங்கனையாக இருந்தால் அதில் வெற்றிக் கோப்பையை வெல்ல பயிற்சியுடன் முயற்சி எடுக்க வேண்டும். நாம் அனைவரும் கற்றது கையளவு கல்லாதது உலக அளவு. ஒரு வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவியை பார்த்தீர்கள் என்றால் அவள் பயிற்சியுடன் கூடிய முயற்சி எடுத்திருப்பாள். காந்தியடிகளின் முயற்சிக்கு பின்பு தான் உலகில் ”அகிம்சை கிடைத்தது”, அன்னை தெரசாவின் முயற்சிக்கு பின்பு தான் உலகில் “அன்பு நிலவியது”, காமராசரின் முயற்சிக்கு பின்பு தான் உலகில் உள்ள ஏழை மக்களுக்கு “கல்வி கிடைத்தது”. ஆகையால் மாணவர்களே நாம் செய்கின்ற அனைத்து செயலிலும் பயிற்சிக்கு அதிகமான முயற்சியை எடுத்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும்..  

3 கருத்துகள்:

  1. முதலில் தங்களது தமிழ் எழுத்துகளை அன்போடு வரவேற்கிறேன் கிருத்திகா.

    தங்களின் முயற்சிக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும் தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு