ஹிட்லர் நன்மையும் செய்துள்ளார்
முன்னுரை
உலகில்
யாவரும் நூறு சதவிதம் நல்லவர்களும்
இல்லை. நூறு சதவிதம் கெட்டவர்களும்
இல்லை. ஒருவர் எவ்வளவு நல்லவராக இருந்தாலும் அவர் செய்யும் ஒரு சில தவறு அவர் செய்த அத்துனை
நன்மைகளையும் மறைத்துவிடும்.அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக ஹிட்லரைக் கூறலாம்.
ஜெர்மனியின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர்
உலகமே
கொடுங்கோலனாக நினைக்கும் ஹிட்லர் தான் ஜெர்மனியின்
வளர்ச்சிக்கு அடிப்படையானவர். பின்னாளில் அவர் நடத்திய கொடுங்கோலாட்சி
காரணமாக அவருடைய சாதனைகள் யாருக்கும்
தெரியாமல் போய்விட்டன.
நல்லவர் என்று பெயர்
எடுப்பது கடினம்
கெட்டவர் என்று
பெயர் எடுப்பது எளிது
ஜெர்மனியின்
மிகச்சிறந்த மனிதர்
ஹிட்லரின்
ஆரம்பகால சாதனைகளை பார்த்தால் ஜெர்மனியின் சரித்தரித்தில் தோன்றிய மிகச் சிறந்த
மனிதராககே இருந்தார். முதலாம் உலகப் போர்
முடிந்திருந்த காலத்தில் ஜெர்மனியின் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருந்தது.
மக்களை வறுமை வாட்டி எடுத்தது.
இதை மூன்றே வருடங்களில் சரிசெய்ந்தவர்,
ஹிட்லர். 1933-ல் ஹிட்லர் சான்சலர்
பதவியை ஏற்றபோது அறுபது லட்சம் மக்கள்
வேலையில்லாமல் இருந்தார்கள். 1936-ல் ஜெர்மனியில் வேலையில்லாதவர்
என்று ஒருவர் கூட இல்லை.
இத்தனைக்கும் ஹிட்லருக்கு பொருளாதாரம் பற்றி ஒன்றும் தெரியாது.
அவருடைய அமைச்சரான ஜால்மர் ஷ்ஹாக்ட்
என்பவர் தான் ஜெர்மனியை அடியோடு மாற்றிக் காட்டினார்.
வேலைக்கேற்ற
ஊதியம்
ஹிட்லரின்
ஆட்சியில் வேலைக்கேற்ற ஊதியம், போனஸ், விலைவாசி எல்லாம் சரியாக நிர்ணயக்கப்பட்டது.
வாகனங்கள் வேகமாக செல்ல நீண்ட சாலைகளை உலகில் முதன்முதலாக அமைத்தவர் ஹிட்லர் தான்.
இன்றைய நமது நான்கு வழிச்சாலைகளை அறிமுகப்படுத்தியவர் ஹிட்லர் தான். முதியவர்களுக்கு
பென்சன், அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இலவச மருத்துவம், எல்லோருக்கும் மருத்துவ
காப்பீடு என்று வரிசையாக ஹிட்லர் அறிவித்த ஒவ்வொன்றும் மிகப்பெரிய புரட்சி திட்டங்கள்.
மிகப்பெரிய
புரட்சி திட்டங்கள்
போர்ஷ் கார் நிர்வன அதிபர் பெர்டினான்ட் போர்ஷை அழைத்து
சாமானியர்களும் வாங்கும் விலையில் கார் தயாரிக்குமாறும் கூறினார். பின் பகுதியில் என்ஜின் வைத்து தயாரிக்கப்பட்ட
அந்த சிறிய கார்க்கு போக்ஸ்வேன் என்று பெயரிட்டார். இன்று அந்த கார்கள் உலகம் முழுவதும்
புகழ்பெற்று விளங்குகின்றன. தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படகூடாது என்பதில்
கண்டிப்பாக இருந்த ஹிட்லர், அதற்கென சட்டமும் கொண்டு வந்தார். அன்றைய தொழில்சாலைகளும்
அதற்கான சாதனைகளை பொருத்திக் கொண்டன.
சுத்தமான நதிகள்
அன்று
ஜெர்மனியில் ஓடிய நதிகள் அனைத்தும் சுத்தமாக இருந்தன. ஹிட்லர் காலத்தில் எந்த தொழிற்சாலைகளிலும்
சம்பள பிரச்சனை, வேலை நிறுத்தம் கிடையாது. முதலாளிகள் பக்கமும் சாயாமல் தொழிலாளர்கள்
பக்கமும் சாயாமல் நடுநிலை வகித்தார். பிரச்சனையை ஏற்படுத்துபவர்கள் முதலாளியாக இருந்தாலும்,
தொழிலாளியாக இருந்தாலும் சிறையில் தள்ளினார். ஹிட்லர் ஆட்சி பொறுப்பை ஏற்றபோது ஜெர்மனி
ராணுவத்தில் ஒரு லட்சம் வீரர்கள் இருந்தன. அவர்களிடம் நவீன ரக துப்பாக்கிகள் கிடையாது.
நான்கே ஆண்டுகளில் நவீன போர் விமானங்கள், பீரங்கிகள், துப்பாக்கிகள், டாங்கிகள் கொண்ட
ஐரோப்பாவில் மிக சக்தி வாய்ந்த ராணுவமாக மாற்றினார்.
முதல் ஐந்து
வருட சாதனைகள்
ஹிட்லரின்
12 வருட ஆட்சியில் முதல் ஐந்து வருடமும் அவர் செய்த சாதனைகள், உலக பொருளாதார மேதைகளை
வியப்பில் ஆழ்த்தினர். ஆனால், அதன் பின்னர் ஹிட்லர் ஒரு கொலைகார சாத்தானாக மாறத் தொடங்கியதால்,
அது மட்டுமே இன்றும் பேசப்படுகிறது. சாதனைகள் மறக்கப்பட்டுவிட்டன.
முடிவுரை
ஹிட்லர்
என்றால் நம் நினைவுக்கு வருவது அவர் செய்த கொடுங்கோலாட்சி மட்டுமே. ஒருவேளை முதல் வருடம்
போல் எல்லா வருடமும் அவர் சாதனையே செய்திருந்தால் அவரை இவ்வாறு பேசியிருப்போமா என்று
தெரியவில்லை.
எவ்வாறு
நாட்டை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்கும் எவ்வாறெல்லாம் நாட்டு
மக்களை துன்புறுத்தக் கூடாது என்பதற்கும் ஹிட்லரே மிகச்சிறந்த எடுத்துக்காட்டாவார்.
அறியத்தக்க செய்தி சகோ.உண்மையே இவ்வுலகில் நிலைபெற்று வாழ வேண்டுமென்றால் பிறரின் சொல்லால் வாழ்த்துகளும் உண்டு அதேபோல் தூற்றும் சொல்லும் உண்டு.எது எப்படியோ ஹிட்லரின் மறுபக்கத்தை தெரிந்துக் கொண்டேன் நன்றி.
பதிலளிநீக்குநல்லதொரு பதிவு நந்தினி. பதிவின் வழி நற்சிந்தனையை வழங்கினீர்கள். நன்றி.
பதிலளிநீக்குநீங்கள் சொல்லியிருப்பது உண்மையே. தனது நாட்டிற்காக பல வளர்ச்சித் திட்டங்கள் கொண்டுவந்தவர் அவர். ஆனால் இப்போது அதைப் பற்றியெல்லாம் யாரும் பேசுவது கிடையாது. ஜெர்மனியிலேயே ஹிட்லர் பற்றி மக்கள் பேச மிகவும் அச்சப்படுவதாக அறிந்திருக்கிறேன். அவரைப் புகழ்ந்தால் அவர்கள் மீது ஒரு நாட்சி முத்திரை விழுந்துவிடும் என்ற பயம் இதற்கு காரணமாக இருக்கலாம். ஹிட்லரா அவன் ஒரு கொடுங்கோலன் அவ்வளவுதான் நமக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்ட பாடம். இதை எழுதியவர்கள் இரண்டாம் உலகப் போரை வென்ற "நல்லவர்களான" அமெரிக்க, ரஷ்ய, மற்றும் பிரிட்டிஷ் பேனாக்கள்.
பதிலளிநீக்குஹிட்லர் ரகசியமாக யு எப் ஓ போன்ற பறக்கும் தட்டுக்கள் வடிவ விமானங்களை தயாரித்திருந்தார் என்றும் தனது தோல்வி நெருங்கியதும் அதை அறிந்த அனைத்து விஞ்ஞானிகளையும் கொன்றுவிட்டதாகவும் ஒரு தகவல் உண்டு.
ஒருவேளை ஹிட்லர் இரண்டாம் உலகப்போருக்கு முன்பே இறந்திருந்தால் அவர் இன்றைக்கு ஒரு தேச பக்தனாகவும், ஜெர்மனியின் மிகச் சிறந்த அதிபர் எனவும் போற்றப்பட்டிருப்பார்.
நீங்கள் கூறிய தகவல்கள் எனக்கு இன்னும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி ஐயா. தொடர்ந்து மறுமொழி கொடுத்து எங்களை ஊக்குவிக்க வேண்டுகிறேன்.
நீக்குஉபாயோகமான செய்தி அக்கா . இதை படித்ததால் நான் ஹிட்லரின் மறு முகத்தை அறிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குநன்றி ஐயா.
பதிலளிநீக்குஹிட்லரின் மெயின்காஃம்ப் படிச்சிருக்கேன், நிறைய படமும் பார்த்திருக்கிறேன். நீங்க சொன்னது சரிதான், யூதர்களைக்கெதிராக அவர் செய்த கொடுமைகள் ஏராளம். அதே நேரத்தில ஜெர்மனியை வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்ல நிறைய செஞ்சிருக்காரு. இன்னும் கொஞ்ச நாளைக்கு ஹிட்லர் சரித்திரத்தில இருந்திருந்தா அமெரிக்காங்கற பேரே வந்திருக்காது. இங்க இருக்கிற ஊழல் ஆட்சிக்கு ஹிட்லரோட சர்வாதிகார ஆட்சியே பரவாயில்லை...ஊழல், இலவசம், லஞ்சம், கொலை என எல்லா கெட்ட விஷயங்களும் இங்கிருக்கு!!!
பதிலளிநீக்குநல்லதொரு பதிவு தங்களின் பணி மேலும் மேன்மையடைய வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குசர்வதிகாரம் என்ற போர்வையில் மறைக்கபட்ட மிக பெரிய ஆளுமை இட்லர்
பதிலளிநீக்கு