வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

பிரம்ம குப்தா

   

       இந்தியாவின் மிகச் சிறந்த கணிதமேதைகள் மற்றும் வானவியல் நிபுணர்களில் ஒருவர் பிரம்ம குப்தா ஆவார்.  இவர் “தெற்கு மார்வார்” என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட வட குஜராத்தில் “பினமாலா” என்னுமிடத்தில் கி.பி.598 ஆம் ஆண்டு பிறந்தார்.  இவரது தந்தையின் பெயர் ஜிஷ்ணு.
     பிரம்ம குப்தா எழுதிய ”பிரம்ம ஸ்புட சித்தாந்தம்” என்னும் நூல் மிகவும் புகழ்பெற்றதாகும்.  இது தவிர அவர் “கண்ட கத்யகா” என்னும் நூலையும் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது.
     பிரம்ம குப்தாவின் நூலுக்கு விளக்கம் அளித்துள்ள “வருணா” என்பவர், பிரம்மகுப்தாவை “பினமாலிக ஆச்சார்யா” என்று புகழ்ந்து கூறியுள்ளார்.
     ”பிரம்ம ஸ்புட சித்தாந்தம்” என்னும் நூல் 24 அத்தியாயங்களைக் கொண்டதாகும்.  அவ்வத்தியாயங்களில் மொத்தம் 1008 செய்யுட்கள் உள்ளன.  அந்நூலில் எண்கணிதம் அல்ஜீப்ரா பற்றிய பல தகவல்கள் கூறப்பட்டுள்ளன.
     அந்நூலின் 12ஆவது அத்தியாயம் எண்கணிதம், நில அளவை போன்றவை பற்றி தெரிவிக்கிறது.  18 ஆவது அத்தியாயம் அல்ஜீப்ராவைப் பற்றி எடுத்துரைக்கிறது.  இன்னும் சில அத்தியாயங்களில் வானவியல் பற்றியும் பல தகவல்கள் அடங்கியுள்ளன.    
     பிரம்ம குப்தா ஜியோமிதியில் நாற்கரம், செங்கோண முக்கோணம் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தியுள்ளார்.
     பிரம்ம குப்தாவின் தேற்றம் இரு முக்கோணங்களில் பக்கங்களால் உருவாக்கப்பட்ட நாற்கரத்தின் தன்மையை எடுத்துரைக்கிறது.  அந்நாற்கரத்தன் பரப்பளவிற்குச் சமமான நாற்கரம் பற்றிய தகவலையும் எடுத்துரைக்கிறது.
     இது தவிர பிரம்ம குப்தா கண்டறிந்துள்ள மற்றொரு உண்மை கீழ்க்கண்டவாறு அமைந்துள்ளது.
      ஒரு நாற்கரத்தின் நான்கு முனைகளும், ஒரு வட்டத்தின் சுற்றுப்பாதையைத் தொட்டுக் கொண்டிருந்தால், அந்நாற்கரத்தின் பரப்பளவைக் கீழ்க்காணும் சூத்திரத்தின் படி அறிந்து கொள்ள முடியும்.
     உதராணமாக, A,B,C,D என்பது ஒரு நாற்கரம் என்று வைத்துக் கொள்வோம்.
     a,b,c,d என்பன முறையே அந்நாற்கரத்தின் பக்கங்களாகும்.
     அந்நாற்கரத்தின் சுற்றளவை ‘2S’ என்று பிரம்மகுப்தா குறிப்பிட்டுள்ளார்.
     நாற்கரத்தின் சுற்றளவு, 2s= a+b+c+d ஆகும்.
                    
     அல்ஜீப்ரா, எண்கணிதம் போன்றவற்றில் பிரம்ம குப்தா செய்த ஆராய்ச்சிகளின் விளைவாக உருவான சூத்திரம் NX2 +1=Y2 ஆகும்.  இது வர்க்கப் பிரகிருதி என்று அழைக்கப்படும்.
     N க்கு குறிப்பிட்ட மதிப்பு அளித்தால் X,Y இவற்றிற்கான மதிப்பைக் கண்டறியலாம்.
     இந்தியக் கணிதமேதைகளுள் ஒருவராகத் திகழ்ந்த இரண்டாம் பாஸ்கரா, பிரம்ம குப்தாவைப் பற்றிக் குறிப்பிடுகையில் ”கணிதத்துறையில் பிரம்மகுப்தா ஒரு ரத்தினம்” என்று புகழ்ந்துள்ளார்.
     நாற்கரங்கள் பற்றி பிரம்மகுப்தா கூறிய பல உண்மைகள் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன்.  அரேபியர்கள் வானவியல் நிபுணர் “டாலமி“யைப் பற்றி அறியுமுன்பே, வானவியல் பற்றி கற்பித்தவர் பிரம்மகுப்தா ஆவார்.  இன்றளவும் பிரம்மகுப்தாவின் வானவியல் கருத்துக்கள் அரேபிய மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன.

  



7 கருத்துகள்:

  1. அருமையான பதிவு
    https://tamilmoozi.blogspot.com/2020/04/blog-post_30.html?m=1

    பதிலளிநீக்கு