திங்கள், 22 பிப்ரவரி, 2016

பதினாறு செல்வங்கள்
நிலைபெறும்   புகழ் - பாப்பா
நீடுகொள்   கல்வி!
உலைநிறை நெல் – தம்பி
 உரம்மிகு   அறிவு! 

கலையாழ்  பொன் – பாப்பா
கனஞ்சூழ்   துணிவு!
தொலைக்கால ஆயுள் – தம்பி
தொய்விலாப்  பெருமை!

வளம்தரும் இளமை – பாப்பா
வாழ்வொத்த   நுகர்ச்சி!
உளம்மகிழ் மக்கள் – தம்பி
உய்யநல்      பொருள்!

களம்நல வெற்றி – பாப்பா
களிப்புறும்  நோயின்மை!
தளம்ஒளிர்  ஆற்றல் – தம்பி
தரணிவாழ் நல்லூழ்!

செல்வங்கள்   பதினாறும் – பாப்பா
செழித்திடப் பேறாகும்!
நன்னெறி      மனம்சூழ – தம்பி

நானிலம்   சீராகும்!

4 கருத்துகள்: