ஞாயிறு, 31 ஜனவரி, 2016

உலகை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்



                       உலகை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்



 உலகம் முழுவதும்  ஜிகா வைரஸ் என்ற புதிய கிருமி பரவி வருகிறது. இதுவும் டெங்கு காய்ச்சல் போலவே, ஏடிஸ் வகை கொசுக்களால் ஏற்படும். இதற்கு தடுப்பூசி கிடையாது. இதுவரை யாரும் குணமானது இல்லை.  

ஜிகா வைரஸ்

      ஒருபுறம் விஞ்ஞானம் வளர வளர மறுபுறம் புதிய புதிய நோய்க்கிருமிகள் உருவாகி வருகின்றன. டெங்கு, சிக்கன்குனியாவைத் தொடர்ந்து, கொசுக்கடியால் புதிய கிருமி தொற்றி வருவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.       அந்த கிருமியின் பெயர் ஜிகா வைரஸ்   1947 – ம்  ஆண்டு உகாண்டாவில் குரங்குகளை தாக்கியபோதுதான், இந்த கிருமி பற்றி தெரிய வந்தது. பிறகு, 1952–ம் ஆண்டு உகாண்டாவிரலும், டான்சியாவிலும் மனிதர்களையும் தாக்கியது.    சமீபகாலத்தில் , 2007 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் , பசுபிக் நாடுகளில்  ஜிகா வைரஸ்  தாக்கியது.  அதையடுத்து, கடந்த  ஆண்டு அமெரிக்க நாடுகளான பிரேசில் மற்றும் கொலம்பியாவிலும், ஆப்பிரிக்காவிலும் அக்கிருமி தாக்கியது. 13 அமெரிக்க நாடுகளில் இதன் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மூளை பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகள்

        பிரேசில் நாட்டில் கடந்த சில மாதங்களில், எண்ணற்ற குழந்தைகள் உடல் குறைபாடுடன் பிறந்து வருகின்றன. சிறிய தலையுடனும், மூளை பாதிப்புடனும் பிறந்துள்ளன. 3 ஆயிரத்து 500 குழந்தைகள் இதுபோன்று பிறந்திருப்பதால், இதற்கும் ஜிகா வைரசுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். தொடக்க காலத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக ஜிகா வைரஸ் தாக்குதல் இருந்ததால், மூளை பாதிப்புக்கும் அதற்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழவில்லை. சமீபகாலமாகவே, இந்த சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால், கர்ப்பிணி பெண்களின் தொப்புளை தாக்கும் ஜிகா வைரஸ், அதன் வழியாக, கருவில் இருக்கும் சிசுவின் மூளைக்கு செல்லக்கூடியது.

உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

       ஜிகா வைரஸ், அமெரிக்கா முழுவதும் பரவ வாய்ப்புள்ளதாக உலக  சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகம் முழுவதும் பரவக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இந்த கிருமி தாக்கியவர்கள், இதுவரை குணமானது இல்லை. இதற்கு தடுப்பூசியும் கிடையாது.   இந்தியாவில், இக்கிருமி தாக்கியதாக இதுவரை எந்த செய்தியும் இல்லை. அதனால் மத்திய அரசு எந்த உஷார் நடவடிக்கையும் பிறப்பிக்கவில்லை.
ஏடிஸ் கொசுக்கள்

 டெங்கு, சிக்கன்குனியாவைப் போன்று    ஜிகா  கிருமியும், ஏடிஸ் வகை கொசுக்கள் மூலம் பரவக்கூடியது. இந்த வகையான கொசுக்கள் பகலில்தான் கடிக்கும். பாத்திரம், டயர் போன்றவற்றில் தேங்கி உள்ள நன்னீரில், இக்கொசுக்கள் முட்டையிடும். ஆகவே, பாத்திரங்களை மூடி வைக்குமாறும், தேவையற்ற பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுமாறும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அறிகுறிகள்
  ஜிகா வைரஸ் தாக்கினால், டெங்கு காய்ச்சலுக்குரிய அறிகுறிகளே காணப்படும். அதாவது, ஒரு வாரத்துக்கு கடுமையான காயச்சல் நீடிக்கும். தோலில் கொப்புளம் ஏற்படும். கண்கள் சிவந்து விடும்ழ மூட்டு வலி, உடல் அசதி, தலைவலி ஏற்படும்.


2 கருத்துகள்: