வெள்ளி, 22 ஜனவரி, 2016

திருக்குறள் பலூன்


 திருக்குறள் பலூன்

சிறியவர் முதல் பெரியவர் வரை பலூன் என்றால் அனைவருக்கும் விருப்பம்தான். பல வண்ணங்களில் பல வடிவங்களில் இருக்கும் இது அனைவரையும் கவர்கிறது. குறள் பலூன் என்றால் என்னவாக இருக்கும்? பலூனில் ஒரு குறள் எழுதியிருப்பார்களா? என்று நாம் நினைக்கலாம். அதுதான் இல்லை. சுமார் 100 அடி உயரம் கொண்ட இந்த பலூனில் வள்ளுவர் எழுதிய 1330 குறளும்  தமிழ் மற்றும் ஆங்கில விளக்கத்துடனும் வள்ளுவரின் படத்துடன் இடம் பெறும்.

உருவான வீதம்

  A.R. செல்வ சரவணா மற்றும் பெனெடிக் இருவரின் முயற்சியால் உருவாக்கப்பட்டது தான் இந்த குறள் பலூன். இவர்கள் அழகிய பலூன்களை வடிவமைப்பதில் வல்லவர்கள். இவர்களின் வித்தியாசமான முயற்சி தான் இந்த குறள் பலூன். இந்த பலூனை கூடிய விரைவில் உலகெங்கும் பறக்க விட உள்ளனர். மிகப்பெரிய வெப்ப காற்று பலூனில் நம் புகைப்படமும பயணம் செய்ய முடியும் என்றால் அந்த சந்தோசத்தை விவரிக்க முடியாது. அதற்காக நாம் செய்ய வேண்டியது 7500 ரூபாய் செலுத்த வேண்டும். இதன் அடிப்படை நோக்கம் திருக்குறளை உலகறியச் செய்ய வேண்டும் என்பதே.
திருக்குறளின் சிறப்பு
 ஏன் ஒரு தமிழ் நூலை உலகறியச் செய்ய வேண்டும்? என நினைக்கலாம். இந்த உலகிற்குத் தேவையான அனைத்துக் கருத்துக்களையும் இரண்டடியில் கூறிய வள்ளுவரின் திறமே இதற்கு காரணம். வேறு எந்த மொழியிலும் இத்தனை சிறப்புடைய நூல் இல்லை. எக்காலத்திற்கும் பொருந்தாத திருக்குறள் முக்காலத்தையும் உணரத்துவதாக உள்ளது.

திருக்குறளை படிக்க அடுத்த பிறவியில் தமிழனாக பிறக்க வேண்டும் - காந்தி

தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலும் நம்மால் திருக்குறளின் சுவையை முழுமையாக உணர முடியாது. இதுவே திருக்குறளின் தனித்தன்மை ஆகும். உலக நாடுகள் அனைத்தும் நம் நாட்டை திரும்பிப் பார்க்கும் விதமாக இந்த குறள் பலூன் பயணம் இருக்கும் என நம்பப்படுகிறது.


6 கருத்துகள்: