சனி, 30 ஜனவரி, 2016

கற்றவர் எந்நாட்டினும் சிறப்படைவர்

                                         - முன்றுறையரையனார்

இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. 400 வெண்பாக்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் பழமொழி ஒன்றைப் பெற்று வருவதால் இந்நூல் “பழமொழி” எனப் பெயர் பெற்றது. 

ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்

நாற்றிசையும் செல்லாத நாடில்லைஅந்நாடு;

வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால்

ஆற்றுணா வேண்டுவ தில்.  (பாடல் எண் - 40)

ஆற்றுணா வேண்டுவது இல் என்பது பழமொழி.
ஆற்றுணா – கட்டுச்சோறு. இல் – தேவையில்லை.
கற்க வேண்டிய நூல்களை தேர்ந்ததெடுத்து கற்று அறிந்தவர்களே அறிவுடையவர்கள் ஆவார்கள். அத்தகைய அறிவுடையவர்கள் நான்கு திசைகளிலும் செல்லாத நாடில்லை. அந்நாடுகள் அவர்களுக்கு வேற்று நாடாக இராது. அவர்களின் சொந்த நாடுகளாகவே அவை விளங்கும். அத்தகையோர் செல்லும் வழிக்குக் கட்டுச்சோறு கொண்டுபோக வேண்டியது இல்லை. கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு ஏற்படும்.2 கருத்துகள்:

  1. உண்மை கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு தான்.அழியாத செல்வம் அல்லவா..?? தோழி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. கட்டிசோறும் தேவையில்லை
    கல்விதான் கடல்கடந்தவருக்கு
    கட்டுகட்டா காசும் தருதே!


    பதிலளிநீக்கு