வெள்ளி, 1 ஜனவரி, 2016

செம்மொழித் தமிழ்..!!

         

தமிழ் மொழியின் தோற்றம் ஏறத்தாழ கி.மு.50,000 என்பது தேவநேயபாவணரின் கருத்து.இயேசு பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியம் இருந்தது.இயேசுவிற்கு 500 ஆண்டுகளுக்கு பிறகே ஆங்கிலம் தோன்றியது..

உலகின் வாழும் எழுநூறு கோடி மக்கள் பேசும் சுமார் ஏழாயிரத்து முன்னூற்று முப்பது மொழிகளில் முதன்மையாக வரலாறு படைக்கின்ற மொழி தமிழ்மொழி..


செம்மொழிக்கான 11 தகுதி கோட்பாடுகள்..!!

1.தொன்மை
2.தனித்தன்மை
3.பொதுப்பண்பு
4.நடுநிலைமை
5.தாய்த்தன்மை
6.பண்பாடு
7.கலைப்பட்டறிவு
8.பிறமொழித் தாக்கமில்லாத்  தனித்தன்மை
9.இலக்கிய வளம்
10.உயர் சிந்தனை
11.இலக்கண மொழிக் கோட்பாடு.

பதினொரு தகுதிக் கோட்பாடுகளும் பொருந்தும் ஒரே செம்மொழி நம் தமிழ் மொழி மட்டுமே..!!

தமிழின் மீதுக் கொண்ட காதல்..!!

தமிழ் என்றால் முதலில் அனைவருக்கும் நினைவில் வருவது தமிழ் எழுத்தின் முதல் எழுத்தான " " ஆம் நாம் முதலில் பேசும் போது அ என்றே ஆரம்பிப்போம் கவனித்துப் பாருங்கள் ..

ஒரு சின்ன கவிதை ,
    பூக்கள் உதிர்ந்தன மண்ணின் மீதுக்
   கொண்டக் கோபத்தால் அல்ல,
   மண்ணின் மீதுக் கொண்ட காதலால்..!!

   நானும் காதல் கொண்டேன் உன் மீது
   தமிழே உன் மீது தான்..!!

முதலில் நினைவில் வரும்  நூல்கள்;

   1.திருக்குறள்
   2.சிலப்பதிகாரம்
   
   
இன்னும் பல நூல்கள் உள்ளன..ஒவ்வொரு நூலும் நமது வாழ்க்கை முறையினை அடிப்படையாகக் கொண்டது..

சங்கத் தமிழ்;

1.முதல் சங்கம்
2.இடைச் சங்கம்
3.கடைச் சங்கம்
தமிழுக்கு  அமுதென்றுப் பேர்...!!

தமிழை வளர்ப்போம்;தமிழால் உயர்வோம்;தமிழால் இணைவோம்;

வாழ்கத் தமிழ்..!! வளர்கத் தமிழ்..!!





 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக