ஆங்கிலத்தில் பல எழுத்தாளர்கள் எனினும் சிலர் மட்டுமே எவருடனும் ஒப்பிட முடியாதவகையில் தம்
படைப்புகளை தந்துள்ளனர். இந்த வகையில் ஆங்கில இலக்கியத்தை பற்றி சிந்திக்கும்போது நம்
நினைவுக்கு வரும் முதல் எழுத்தாளர் ஷேக்ஸ்பியர். தம் கதாப்பாதிரங்களாலும்,ஒரு சாதரண செய்தியை
விவரித்துக்கூறுவதிலும்,இந்த உலகம் முழுவதிலும் பெருமளவில் புகழ் பெற்றார். இந்த வகையில்
எல்லா இலக்கிய கூறுகளையும் பின்பற்றி, அரிய பல கருத்துக்களை இவ்வுலகிற்கு தந்தவர்
ஷேக்ஸ்பியரின் நன்பர் பென்ஜான்சன். 16ஆம் நூற்றாண்டில் இரண்டாம் முக்கியத்துவம்
வாய்ந்தவர். இவர் எழுதிய நூல்கள் அனைத்திலும் எல்லா இலக்கண, இலக்கிய முறைகளையும்
பின்பற்றி தம் அடையாளத்தை பதித்தவர். இவர் 1573இல் வெச்ட்மினிச்டெர் என்ற இடத்தில்
பிறந்தார். லார்டு அமிரல் தியேட்டா் கம்பெனியின் உறுப்பினராவார். நாடக எழுத்தாளர்,
நடிகர், போர் வீரர், என பல துறைகளில் தடம் பதித்தவர். நகைச்சுவை,சோகம்,காதல்
கதைகள் எழுதுவதில் வல்லவர். எலிசபெத் காலத்தை பற்றிய இவரது படைப்பு மிக குறைவுதான்.
எனினும் அக்காலத்தில்இவர் வெளியிட்ட நூல்கள் அனைத்தும் வெற்றி பெற்றன.
இவர் இவர் இறந்த பிறகு இவர் கல்லறையில் ``ஓ அரிய பென்ஜான்சன்’’என்று
எழுதப்பட்டிருந்தது. நகைச்சுவை என்ற படைப்புக்கு இவர் தான் இலக்கணம் வகுத்தார்.
தங்களின் தமிழ் எழுத்துக்களை அன்புடன் வரவேற்கிறேன் ஜனனி..
பதிலளிநீக்குஅருமையான பதிவு வாழ்த்துக்கள்..
மிக நன்றி தோழி
பதிலளிநீக்கு