முல்லை
முளிதயிர் பிசைந்த காந்தள்
மெல்விரல்
கழுவுறு கலிங்கம், கழாஅது உடீஇ
குவளை உண்கண் குய்ப்புகை கமழுத்
தான் துழந்து அட்டதீம் புளிப்
பாகர்
’இனிது’ எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல்
முகனே.
-கூடலூர் கிழார்(பா.எ-167)
திணை
முல்லை
துறை
கடிநகர் சென்ற செவிலித்தாய் நற்றாய்க்கு உரைத்தது.
துறை விளக்கம் | |||
திருமணமான மகளின் குடும்ப நிலையை பற்றி செவிலித்தாய் நற்றாய்க்கு உரைப்பது.
பாடல் விளக்கம்
முற்றிய தயிரினை பிசைந்த போது காந்தள் மலரை போன்ற மெல்லிய விரலை கொண்ட தலைவியின் கைகள் சிவந்தன, மேலும் தாளிப்பின் போது வரும் புகையானது குவளை போன்ற அவளது கண்ணின் மையை கலைத்தது, தானே தூழாவி சமைத்த
இனிய புளிப்பையுடைய குழம்பை தன் தலைவன் இனிது என உண்ணும் போது
தலைவியின் முகமானது நுண்ணிதாக மகிழ்ந்தது. இவ்வாறு தலைவியின் குடும்ப
நிலையைப் பற்றி செவிலித்தாய் நற்றாய்க்கு உரைக்கிறாள்.
|
அழகானக் காட்சி சகோதரி..
பதிலளிநீக்குநன்றி...
நீக்கு