செவ்வாய், 5 ஜனவரி, 2016

பன்னாட்டு தமிழ் மரபுக் கருத்தரங்கம்தமிழர் தம் தெய்வ வழிபாடுகளும் குறியீடுகளும்;


தமிழர்களாகிய நாம் பின்பற்றும் வழிபாடுகளும் குறியீடுகளும் குறித்து 05.01.2016 இன்று எஸ்.எஸ்.எம் கல்லூரியில்  தமிழ் மரபு அறக்கட்டளை(உலகளாவிய அமைப்பு) நடத்தியக் கருத்தரங்கில் கணித்தமிழ்ப் பேரவையில் உள்ள 25 மாணவிகள் கலந்துக் கொண்டோம்.


நிகழ்ச்சியின் முக்கியத்துவம்;
தமிழர்களாகிய நாம் இன்று வாழும் நகரத்து வாழ்வில் எவற்றையெல்லாம் இழந்திருக்கிறோம், மேலும் தமிழ் மரபுக்களைப் பின் தொடர்க்கிறோம் என்ற பெயரில் அவற்றை எப்படி வீணாக்குக்கின்றோம் என்பது பற்றியும் இவற்றில் இருந்து எப்படி நமது தமிழர் மரபைக் காப்பாற்றுவது குறித்து அமைந்தது..மேலும் இன்றைய நகரத்து வாழ்க்கையில் கணினியின் முக்கியத்துவம் மற்றும் தமிழ் மொழியை மின்னாக்குவதுக் குறித்தும் பயிற்சிப் பட்டறை அமைந்தது.

தமிழர் பண்பாட்டு வரலாற்றுச் சான்றுகள் பாதுகாப்பு;1.கல்வெட்டு
2.ஓலைச்சுவடிகள்
3.ஆவணங்கள்
4.பழம் நூல்கள்
5.சுவர் சித்திரங்கள்
6.பாறை ஓவியங்கள்
7.பாறை குறியீடுகள்
8.ஈமக்கிரியச் சின்னம்
9.நடுகல்

ஆகியவை தமிழரின் அடையாளமாகத் திகழ்பவை.மேலும் இவை வரலாற்றுச் சின்னமாகும் ஆனால் நம் அருமை மக்கள் தெய்வ வழிபாடு என்ற பெயரிலும் கோவில் மறுசீரமைப்புப் பணி என்ற பெயரிலும் இவற்றை அழிக்கின்றன.நாளைய சமுதாயமாகியத் தமிழர் மட்டும் அல்ல யாருக்குமே தமிழன் இருந்தான் வாழ்ந்தான் என்பதற்கான அடையாலமே இல்லாமல் செய்வதும் காப்பதும் நமது கையில் தான் என்பது எனது கருத்து.


யாதும் ஊரே;யாவரும் கேளீர்:


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக