வியாழன், 24 நவம்பர், 2016

தி கேஜ்ட் மங்கி

                                                                தி கேஜ்ட் மங்கி
     

ஒரு ஊரில் ஏழை மனிதன் ஒருவன் வாழ்ந்து வந்தான்.அவனிடம் குரங்கு ஒன்று இருந்தது.அந்த குரங்கு நிறைய வித்தைகளை காட்டும். தினமும் அந்த குரங்கினை தூக்கி அலைந்து வித்தை காட்டி கடுமையாக உழைத்தான்.மக்களும் அந்த வித்தைகளை பார்த்து சில சில்லறைகளைக் கொடுப்பர்.அந்த சில்லறைகளை எடுத்து தன் உரிமையாளரிடம் கொடுக்கும் அந்த குரங்கு.ஒரு நாள் அந்த குரங்கை உரிமையாளர் பூங்காவிற்கு அழைத்துச் சென்றார்.
           

அங்கு கூண்டிற்குள் இருந்த குரங்குகளுக்கு மக்கள் பழங்கள் ரொட்டித்துண்டுகள் கொடுத்ததைக் கண்டது.அதைக் கண்டபின் இந்த குரங்கு மிகவும் அதிர்ஷசாலி, என்னைப்போல,உணவிற்கு கடினமாக உழைக்கத்தேவையில்லை.இலவசமாக உணவு அதனைத்தேடி வருகிறது என்று எண்ணியது.
            அன்றிரவு அந்த பூங்காவிற்கு சென்று தங்கி உணவுகளையும் சுதந்திரத்தையும் அனுபவித்தது.சில காலம் கழித்து அந்த குரங்கு சலுப்பாக உணர்ந்தது.உணவு உண்ண பார்வையாளர்கள் வரும்வரை காத்திருக்கவேண்டும்.பின்பு,தன் உரிமையாளரிடமே ஓடி வந்து உழைத்து பிழைத்தது.      
                                                      (தரவு)
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***இந்த தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி


1 கருத்து: