வெள்ளி, 18 நவம்பர், 2016

தி க்ரேட்டஸ்ட் சொல்யூசன்

                                                  தி க்ரேட்டஸ்ட் சொல்யூசன்
                                    --டைனி டாட் ஸ்டோரிஸ்ஒரு யாசகர் சிறிய கிராமம் ஒன்றில் வசித்து வந்தார்.ஒரு நாள் அந்த கிராமத்து தலைவரை சந்தித்து யாசகம் கேட்க முடிவு செய்தார்.அங்கு செல்கையில் தலைவர் மன்னரை சந்தித்து கிராம மக்கள் நலனுக்காக நன்கொடை வாங்க சென்ற செய்தியை யாசகர் அறிந்தார்.மன்னர் ஊர் தலைவருக்கு உதவி செய்வதால் அவர் ஊர் தலைவரைவிட மிகுந்த செல்வாக்குடையவர் என்றறிந்து அவரிடம் யாசகம் கேட்க முடிவு செய்தார்.அவ்வூரின் தலைநகருக்கு செல்லும்போது கோயிலுக்கு வெளியே மிகப் பெரிய கூட்டத்தை பார்த்தார்.அங்குள்ளவர்களிடம் விசாரித்ததில் மன்னர் அங்குள்ள கோயிலுக்கு வருகை புரிவதை அறிந்தார்.யாசகர் எட்டிப்  பார்த்ததில் மன்னர் ஆண்டவனிடம்``என்னை ஆசிர்தித்து அரண்மனை கஜானா எப்பொழுதும் நிறைந்திருக்க அருளிபுரிக’’ என்று வேண்டினார்அக்கனம் யாசகர் ஆண்டவன் மன்னரை விட பெரிய பலம் பெற்றவர் என்றறிந்தார்.


      
   

பின்னர் இறைவன் அவர்முன் காட்சி ளித்து``உன்னுடைய சிக்கலுக்காக தீர்வு கடின உழைப்பு. யாசிப்பதை நிறுத்தி உழைக்க ஆரம்பித்தாலே வாழ இயலும்’’`என்று அறிவுறுத்தினார்.அந்த அறிவுரையை மதித்து யாசிப்பதை நிறுத்தி நன்றாக வாழ கடினமாக உழைக்க ஆரம்பித்தார்.
           


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக