வெள்ளி, 18 நவம்பர், 2016

டிட் ஃபார் டாட்

                                                            டிட் ஃபார் டாட்
                                    டைனி டாட் ஸ்டோரீஸ்
             

காட்டில் நதி ஒன்று அமைதியாக பாய்ந்துக்கொண்டிருந்த்து.அங்கு பசியுடன் ஒரு சிங்கம் தண்ணீர் அருந்த வந்தது.அங்கு தண்ணீர் குடித்துக்கொண்டிருக்கையில் கழுதை ஒன்று அங்கிருப்பதை கண்டது.சிங்கம்``கழுதையெல்லாம் முட்டாள்கள்,அவற்றை இன்று மதியம் எனக்கு உணவாக்க நான் ஏதாவது செய்ய வேண்டும்’’ என்று எண்ணியது.அதற்கு சிங்கம் ``தோழர் கழுதையே அங்கு ஏதாதவது குள்ள நரிகள் இருக்கின்றனவா?அவர்களின் இனிமையான பாடல் சத்தம் எனக்கு கேட்கிறது?’’ என்றது.

            அதற்கு கழுதை``இல்லை ஐயா குள்ள நரிகளால் இனிமையாக பாட இயலாது.தான் உங்களுக்காக இப்பொழுது பாடுகிறேன்,’’ என்று கூறிய அந்த முட்டாள் கழுதை வானத்தை நோக்கி கண்களை மூடி கனைக்க தொடங்கியது.அச்சமயத்தில் நதியைக் கடந்து சிங்கம் கழுதையின் கழுத்தை கவ்வியது.ஆனால் கழுதை தந்திரமாக,``அட நீங்கள் என்னை உனவாக்க வேண்டுமா?எனக்கு ஆட்சியபனை இல்லை ஆனால், நல்ல சிங்கங்கள் உணவு உட்கொள்வதற்கு முன் இறைவனிடம் பிராத்தனை செய்யும் என்று கேள்விப்பட்டேன்?.என்றது. ஆமாம்!,ஆமாம்! நான் பிராத்தனை செய்ய வேண்டும் என்று கூறி கண்ணை மூடியது.அக்கனத்தில் கழுதை சிங்கத்தை நன்கு உதைத்து அங்கிருந்து ஓடிவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக