டூ வாட் யூ சே
--டைனி டாட்
ஒரு
சிறிய கிராமத்தில் வயதான முதியவர் ஒருவர் வசித்து வந்தார்.நிறைய முறை அவர்``எனக்கு குடும்பம் என்று எதுவும் இல்லை.இதற்கு நான் இறப்பதே மேல்’’ என்று கூறுவார்.தினமும் காலையில் காட்டிற் சென்று விரகு வெட்டி சேர்ப்பார்.பிறகு அதனை சந்தையில் விற்று விடுவார்.அந்த பணத்தைக் கொண்டு சிறிய உணவு வண்டியில் உணவு உட்கொள்வார்.ஒரு நாள் அவர்க்கு காய்ச்சல் வந்தது.இருந்தும் அவர் வேலைக்கு சென்றார்,ஏனெனில் அந்த காய்ச்சலை குணப்படுத்துவதற்கும் உணவிற்கும் வேறு பணம் அவரிடம் இல்லை.அந்த கட்டைகளை தன் முதுகில் சுமந்து திரும்ப ``எனக்கு எந்த உதவியும் இல்லை இதற்கு எமன் என்னை கொண்டு செல்லலாம்?’’ என்றார்.
அந்த சொல் எமனிற்கு கேட்டு அவர் முன் காட்சி அளித்து, தன்னுடன் சொர்க்கத்திற்கு வர அழைத்தார்.அதற்கு அந்த முதியவர்``எமதர்ம ராஜா நான் ஏதோ உதவிக்காக புளம்பிக்கொண்டிருந்தேன்?’’ என்றார்.பின்பு எமராஜா அவருக்கு கட்டைகளை தூக்க உதவி புரிந்து புன்முறுவலுடன் தன் மனதிற்குள்``மக்கள் தன் சொல்களை நம்புவதில்லை,’’என்று எண்ணினார்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக