வியாழன், 19 அக்டோபர், 2017

நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

                                                நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?
நாம் எப்பொழுதும்  ஒரே போல் இருக்க நாம் ஜடம் அல்ல ரோபோட்களும் அல்ல. நாம் மனிதர்கள் இன்பம், துன்பம், விரக்தி, சோகம், அபரிமிதமான மகிழ்ச்சி, அளவுகடந்த கோபம் போன்ற குணங்கள் மனிதனுக்குள் இருப்பது இயல்பு. ஆனால் அந்த ஒவ்வொறு உணர்ச்சிகளையும் நாம் எவ்வாறு கையால்கிறோம் என்பதிலேயே இருக்கிறது புத்தி. அதற்க்காக எல்லா இடங்களிலும் நம்மால் பொறுமை காத்து இருக்க முடியாது.


           ஆகையால் சில நேரங்கள் நாம் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க கூட்டது. வாழ்க்கையில் இப்பொழுது இன்பமாக இனிப்பாக இருக்கும் சில செய்திகள் பிறகு நமக்கு கசப்பாக மாறும். ஆகையால், நமது வாழ்க்கையில் எடுக்கும் ஒவ்வொறு முடிவும் மிக சரியாக தொலைநோக்கு பார்வையுடன் எடுக்க வேண்டும். உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நம்மை நாமே தண்டித்துக்கொள்ளக் கூடாது. சில உறவுகள் நம்மிடம் வந்து செல்லும் ஆனால், அவைகளை கண்டு நாம் வருத்தப்படவோ, நம்மை விட்டு சென்று விட்டனரே என்று வேதனைக்கொள்ளவோ கூடாது. அனைத்தினையும் வாழ்வில் ஒரு அங்கமாக பார்க்த் தொடங்கினால், நம் வாழ்கையை அழகாக உணரலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக