புதன், 4 மார்ச், 2020

சங்க தமிழரே ! சரிக்கின்ற தமிழரே !

                     சங்க கால தமிழர்கள் சங்கம் வைத்து தமிழை வளர்த்து சரித்திரம் படைத்தனர். இன்றோ ஆங்காங்கே இருக்கும் பள்ளிக் கூடங்களில் கற்பிக்கப்படும்.  நமது தாய் மொழியான தமிழ் வழி கல்வியை நாமே ஏற்க மறுக்கின்றோம்.
                     வெளிநாட்டவர் இங்கு வந்து தமிழ் கற்று அதனை தங்கள் நாடுகளில்,அவரவர் மொழிகளில் மொழி பெயர்த்து கொண்டனர்.ஆனால், தமிழ் மண்ணில் பிறந்து வாழ்ந்து வாழ்ந்து வரும் தமிழர்களாகிய நாமே தமிழ் வழிக்கல்வியை வெறுக்கின்றனர்.
             வரலாற்றை புரட்டி பார்த்தால் சாதனைகள் எத்துணை சரித்திரங்கள் எத்துணை இருகின்றது நம் தமிழ் மண்ணில் விமானத்தை கண்டெடுக்கும் முன்னரே புராணக்கதைகளில்  பறவைகளை வாகனமாக கொண்டு விண்தொட்ட காட்சிகள் தான் மறக்குமா நமக்கு !
சங்கம் வைத்த தமிழனின் ,சரித்திரத்தை உடைக்கும் நிகழ் மனிதர்களே !
            சாதனைகள் பல புரிந்து தனிமொழியாய் விளங்கி , மொழிகளில் சிறந்தது நம் தமிழ் மொழி . சோதனைகள் பல கடந்து சரித்திரத்தை படைத்தது நம் தமிழ் குலம்.
                  தமிழரின் சிந்தைக்கு நிகரென ஏதேனும் உண்டா 
                       ஒழுக்க நெறிக்கு குருகுலம் ,ஓங்கி உயர்ந்த மலைகளின் இயற்கை வளம் , பண்பாடு போற்றும் தனிக்குலமே நமது தமிழரின் குலம்
பெரியோர் சொல்லுக்கு எதிர்ப்பில்லா இருந்த நமது சமூகம் இன்று பெற்றவர்களையே மறுத்து ,மறந்தும் வருகிறது.
                    வீரம் கோபமாய் மாறியது ,விவேகம் மூடமாய் மாறியது , எண்ணங்கள் எண்ணிக்கைகளில் அடங்கியது. இந்நிலை நீடித்தால் சரித்திரம் பேசிய தமிழர்களின் வாழ்வு ।நமது தலைமுறையோடு  முடிந்துவிடுமா।
எல்லோரும் வெளியூரில் வேலை செய்து அடிமைகளாய் வாழ்வதை காட்டிலும் .உன் ஊரில் நீ உனக்கு வேண்டியதை செய்து மகிழ்வோடு வாழ்வதே மேல்.
இதனை , அறியா இன்றைய தமிழ் சமூகம் சீர்குழைந்த நிலையை எய்தியுள்ளது.இந்நிலையை போக்க வேண்டும்.
தமிழன் வாழ்வதற்காக பிறந்தவனல்ல ஆள்வதற்காக பிறந்தவன் என்பதனை அனைவருமே உணர வேண்டும் !
இன்றளவில் ,பெரும்பாலான மக்கள் வாழ்க்கையை சரியான வழியில் நடத்துவதாக எண்ணி எந்தவிதமான சமுதாய இன்னல்களிலும் ஈடுபடாமல்। தமது சுய வாழ்வை வாழ்ந்துவருகின்றனர் .
முறைகேடுகளை தடுக்கும் முயற்சிகளை விட்டுவிட்டு ஒருவருடன் ஒருவர் எந்தவித தொடர்பும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர் .
சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்று கேட்டு திரியும் தமிழர்களாகிய நாம் சட்டங்கள் நிறுவப்படாத காலத்தில் நமது சங்க தமிழர்கள் படைத்த சாதனைகளையும் ,போதனைகளையும் செவியேறா கதைகளாய் கொண்டுள்ளனர்.
இன்று உங்கள் செவிகளில் ஏற துடிக்கும் இதுபோன்ற சரித்திரம் சரியவில்லை .நாளை நீங்கள் படைக்க காத்திருக்கும், வரலாரே சரிந்து கொண்டு தான் இருக்கிறது .
நமது சரித்திரத்தை பாதுகாக்க வேண்டியது நம் கடமை ।நமது கடமையை நாம் செய்ய எந்த தயக்கமும் கொள்ளக் கூடாது.
துணிவுடன் செயல்பட்டு ,துன்பங்களை அகற்றி பிறருக்கு தூணாக நிற்பதே நமது வழக்கம் .அதனையே, நாமும் பின்பற்றுவோம் .
சரிவிலிருந்து மீண்டும் எழுவோம் ,தாய் மொழியையும் ,தாய் நாட்டையும் வரலாற்று பெட்டகங்களில் நிகழ்வாக பதிவிடாது ।நிலையான  சரித்திரமாக மாற்றுவோம் .
சங்க தமிழனுக்கே தலை வணங்குவோம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக