செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

டாடா குழும தலைவராக தமிழன் சாதனை...



டாடா தொழிற் குழுமத்தின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த என்.சந்திரசேகரன் இன்று பதவியேற்க உள்ளார்.

டாடா குழும தலைவராக இருந்த சைரஸ் மிஸ்த்ரி நீக்கப்பட்ட நிலையில் அவரது இடத்துக்கு சந்திரசேகரன் கடந்த மாதம் தேர்வு செய்யப்பட்டார்.

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்யங்களில் ஒன்றின் தலைவராக பதவியேற்கும் சந்திரசேகரனின் சொந்த ஊர் நாமக்கல் அருகிலுள்ள மோகனு}ர் ஆகும்.

டாடா குழுமத்தின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ்ஸின் தலைமைப் பொறுப்பையும் சந்திரசேகரன் கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 150 ஆண்டுகள் பாரம்பரியம்மிக்க டாடா குழுமத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் பார்சி இனத்தைச் சாராத முதல் நபர் சந்திரசேகராவார்.

 புதிய பணி சவால்கள் நிறைந்தது என்று கருத்து தெரிவித்த அவர், அந்த சவாலை மாறுபட்ட வழியில் திறமையாக எதிர்கொண்டு வெற்றி பெறுவதாக நம்பிக்கை தெரிவித்தார்.

 ரூ.1,000 கோடிக்கும் மேலாக இழப்பை ஏற்படுத்தியுள்ள ரத்தன் டாடாவின் கனவான நானோ கார் திட்டம் குறித்தும் முடிவெடுக்கும் பொறுப்பும் சந்திரசேகரனுக்கு தலையில் விழுந்துள்ளது.

 நீண்ட தூர மாரத்தான் ஓட்டப்பந்தய வீரரான சந்திரசேகரன் சர்வதேசப் போட்டிகளில் வெற்றிகளைக் குவித்தவர். பல்வேறு வெற்றிகளைக் குவித்த சந்திரசேகரன், ரூ.7 லட்சம் கோடி மதிப்புள்ள உலகளாவிய டாடா குழுமத்தின் நிர்வாகப் பிரச்சனைகளை எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதை அனைவரும் எதிர்நோக்கியுள்ளனர்.

 டாடா சன்ஸ் நிறுவனத்தின் கீழ் டி.சி.எஸ்., டாடா பவர், டாடா மோட்டார்ஸ், டாடா கெமிக்கல்ஸ், இந்தியன் ஹோட்டல்ஸ், டாடா ஸ்டீல், டாடா க்ளோபல் பீவரேஜஸ் உள்பட சுமார் 100 நிறுவனங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

2 கருத்துகள்: