யாரோ கதவு தட்டப்படும்
ஓசை கேட்டு நித்திரையிலிருந்து கண்
விழித்தார் ராஜ்.
யார்
நீங்க? என்றார் கண்ணை கசக்கிக் கொண்டே.
டேய் ராஜ் ! நான் திவாகர்
சின்ன வயசுல ஒன்னா படிச்சோமே ஞாபகமில்லையா ? என்றார் .அந்த நபர்
ஓ!திவாகர் எப்படி இருக்க பார்த்து ரொம்ப
வருஷமாச்சே, ஆமா ஏன் இந்த ராத்திரி நேரத்தில் ,என்னைத்
தேடி வந்திருக்க என்ன விஷயம்? என்று ஆச்சிரியத்துடன் வினவினார்.
ஒன்னுமில்லை ஒரு அவசர விசயமா இந்தப் பக்கம்
வந்தேன் அப்படியே உன்னைப் பாக்கணும்னு தோணுச்சி அதான் வந்துட்டேன் உங்கட்ட ஒரு உண்மைய
சொல்லணும் என்னன்னா, சின்ன வயசுல நீ காதலிச்சியே ஒரு பொண்ணு யமுனா ,அவ யாரையோ காதலிக்கலடா
.என்னை தான் காதலிச்சா .உன் மேல பிரியத்தினால , நீ கஷ்டபடுவேன்னு நான் இதை உங்கட்ட
சொல்ல இப்ப அவ என் மனைவிடா தப்பா நினைக்காதன்னு
சொல்லிட்டு விறுவிறுவென நடந்து சென்று விட்டார் . தன் நண்பன் அதிர்ந்து நின்றதைக்
கூடக் கவனிக்காமல்.
மறுபடியும் தூங்கப்போனபோது தூக்கமே பிடிக்காமல்
சோபாவில் வந்தமர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்து
கொண்டிருந்தார் திடீரென பதறியடித்து எழுந்து நின்றார்,அந்த ஏ.சிக் குளிரிளும் அவர்
மகத்தில் வியர்வைத்துளிகள் மின்னத் தொடங்கின.
அந்த தொலைக்காட்சியில் ஒரு பெண் இன்று
இரவு 10.30 மணிக்கு காரில் சென்றுகொண்டிருந்த போது ஏற்பட்ட வபத்திளால் திவாகர் என்னும்
நபர் உயிரிழந்தார் என்று உருக்கமாக வாசித்துக் கொண்டிருந்தாள். திவாகர் தன்னை சந்தித்தது இரவு 11.00 என்பதை எண்ணிப் பார்த்த போது
ராஜ்க்கு மூச்சே நின்றுவிடுவது போல தோன்றியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக