இன்று இணையத்தில் நான் வாசித்து வந்த பதிவுகளில் ஒன்று அப்பதிவை பற்றிய தகவல்களை தேட வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது. அப்பதிவு ஒரு பறவையை குறித்தது. இதை பற்றி அறிய தந்த எனது நெறியாளர் குணசீலன் அவர்களுக்கு நன்றிகள்.
பறவைகள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பாடல் வரியே எனது நினைவிற்கு வந்தது...
சரி அந்த பறவையின் பெயர் செம்போத்து,செம்பகம் அல்லது செங்காகம். இது காகம் உருவதை கொண்ட குயில் இனம். இப்பறவையினம் தரையில் வாழக்கூடியவை. கோடைக்காலத்தில் 3 முதல் 4 முட்டைகளை இடும்.
இவ்வகை பறவைகள் சிறுபாம்பு, பூச்சிகள் மற்றும் கூடுகளை உட்கொண்டு வாழும். இப்பறவைகளை பற்றி படிக்க படிக்க வியப்பாகவும் பிரம்மிப்பாகவும் இருந்தது. இப்பறவைகளின் வட்டார பெயர்கள் அழகாக இருந்தன.
சங்க இலக்கியங்களில் இப்பறவைகள் காணப்படுகின்றன. இதற்கு பறக்கும் தன்மை குறைவே. ஆனால் இப்பறவை தமிழ் ஈழத்தின் தேசிய பறவை ஆகும்.
மேலும் தெரிந்து கொள்ள...
http://googleweblight.com/i….
http://googleweblight.com/i….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக