வியாழன், 6 ஏப்ரல், 2017

பேஸ்புக் முகப்புக்கு நீல நிறம் ஏன்?



Image result for facebook simple
பேஸ்புக் நிறுவனத்தின் உரிமையாளர்     மார்க் ஜீக்கர்பெர்க்.  திறமைகள் மிக்க மனிதர்.  மார்க் தனது 12-வது வயதிலேயே கம்ப்யூட்டர் புரோகிராமிங் எழுத தொடங்கினார்.  அவரின் ஆர்வத்தை பார்த்த பெற்றோர்கள், அவருக்கு கணினி பற்றிய பயிற்சி அளிக்க ஒரு ஆசிரியரை நியமித்தனர்.
சில நாட்களிலேயே மார்க்கின் திறமையை கண்டு வியந்த ஆசிரியர், அவர் ஒரு பெரிய மேதை என்று அவர் பெற்றோரிடம் தெரிவித்தார்.  உயர்கல்வியை முடிப்பதற்கு முன்பே, மார்க்கை தங்களின் நிறுவனத்தில் பணியமர்த்த மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் போட்டி போட்டன.  ஆனால் மார்க் மறுத்துவிட்டார்.
             2004-ம் ஆண்டு, தான் படித்துக்கொண்டிருந்த ஹாவார்டு பல்கலைகழகத்தின் ஓய்வறையில் இருந்து பேஸ்புக்கை   தொடங்கினார். பேஸ்புக் தொடர்பான ஆராய்ச்சியிலேயே அதிக நேரத்தை செலவிட்டதால், கல்லூரியில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்டார்.

            மார்க்குக்கு நிறக்குருடு நோய் இருந்ததால் சிவப்பு, பச்சை போன்ற நிறங்கள் அவருக்கு சரியாக தெரியாது. நீல நிறத்தை மட்டுமே அவரால் தெளிவாக பார்க்க முடியும். இதனால் தான் பேஸ்புக் முகப்புக்கு நீலநிறம் வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக