வியாழன், 6 ஏப்ரல், 2017

குருவிற்கு நிகரில்லை குருவின்றி நிறைவில்லை...


உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில். (394)

என்ற குறளுக்கேற்க சிறந்த உதாராணம் எனது நெறியாளர் முனைவர் இரா.குணசீலன் ஐயா அவர்கள்.இன்று நான் தங்களுடன் பகிரவுள்ள இப்பதிவு எனது ஐயாவுக்கு பறைசாற்றுகிறேன்.


இதுவரை எங்கள் கல்லூரி வலைத்தளத்தில் கவிதை முதல் தொழில்நுட்பம் வரை சில தெரிந்ததும் தெரியாததையும் படித்து வருகின்றீர்கள்.இன்று எங்கள் கல்லூரி வலைத்தளம் தமிழ்மணம் என்ற வலைத்தளத் திரட்டியில் 123-வது இடத்தைப் பெற்றுள்ளது.

கல்லூரி அளவில் கூட தெரியாத எங்களை உலகளவில் எங்களையும் எங்கள் எழுத்துகளையும் தெரியப்படுத்திய எனது ஆசான் முனைவர் இரா.குணசீலன் ஐயா எட்டு வருடங்களாய் வலையுலகில் வலம் வருக்கின்றார்.ஆனால் அவர் இன்றோடு 37-வது வருடத்தை தொடங்கியுள்ளார்.ஆம் இன்று (06.04.2017) இவரின் பிறந்தநாள்.இவரது வாழ்நாளில் இதுவரை இரண்டு நூல்கள் வெளியிட்டுள்ளார்.

ஒவ்வொரு நாளும் ஒரு தேடல் ஒரு அனுபவம் ஒரு சிறப்பான நாள் என்பதை இவர் மூலமே நான் மட்டுமல்ல எனது சகோதரிகளும் அறிந்துக் கொண்டுள்ளோம்.

பலனை எதிர்பார்க்காதே உன் கடமையை செய் என்ற சிந்தனையை உடைய சிந்தனையாளர் தான் இவர்.என்னிடம் அடிக்கடி மாணவிகள் மற்றும் கல்லூரியின் வளர்ச்சியையும் மற்றும் அவர்களுக்கான முன்னேற்றம் குறித்து தான் பேசுவார்.இவருடைய ஆசை ஒரே நாளில் தமிழ்விக்கிப்பீடியாவில் ஒரு இலட்சம் கட்டுரைகள் இட்டு எங்கள் கல்லூரி மாணவிகள் உலகச் சாதனை படைக்க வேண்டுமென்பதே.ஆனால் அதற்கான சூழல் இன்றுவரை அமையவில்லை.

வாய்ப்புக்காக காத்திருக்காதே உனக்கான வாய்ப்புகளை நீயே உருவாக்கு என்ற அப்துல் கலாம் ஐயாவின் வார்த்தைகளை துணையாய் கொண்டு எனது சகோதரிகளின் ஒத்துழைப்புடன் இன்று ஒரே சமயத்தில் நூறு கட்டுரைகளை வெளியிட்டுள்ளோம்.இதில் 70% எனது சகோதரிகளின் சொந்த படைப்புகள் 30% படித்ததில் பிடித்தது மற்றும் பொது அறிவு தகவல்கள் ஆகும்.

இன்று நாங்கள் வெளியிட்டுள்ள இந்த நூறு பதிவுகள் பற்றி இன்று வரை எனது குருவிற்கு தெரியாது.என்னுடைய அன்பு கட்டளையால் இதுவரை வலைப்பதிவை பார்க்கவில்லை.அதற்கு முதலில் நன்றிகள்.

இவருடைய பிறந்த நாளில் பல பரிசுகள் இவர் பெற்றிருக்கலாம் ஆனால் நானும் எனது சகோதரிகளும் இன்று இவருக்கு வழங்கிய இந்த பரிசு இவருடைய எண்ணத்தின் ஒரு செயல் வடிவமாகும்.

ஊக்குவிக்க ஆளிருந்தால் ஊக்குவிற்பவன் கூட தேக்கு விற்பான்.ஆம் எங்களின் ஊக்குவிப்பாளர் முனைவர் இரா.குணசீலன் ஐயா அவர்களுக்கு எனது சகோதரிகள் சார்பில் எனது அன்பு கலந்த நன்றியையும் பாராட்டுகளையும் பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்க வளமுடன் நலமுடன் எனது குருநாதரே…

10 கருத்துகள்:

 1. ஒரு நல்ல ஆசிரியருக்கு மாணவிகள் கொடுக்கும் மிக நல்ல பரிசு.. மாணவிகளின் மத்தியில் நல்ல ஆசியரியராக வலம் வந்து கொண்டு இருக்கும் இரா.குணசீலன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. நல்ல பதிவு....குணசீலன் அவர்களுக்கு வாழ்த்துகளும்

  பதிலளிநீக்கு
 3. அருமையான வாழ்த்துகள் ...
  கூடவே எமது வாழ்த்துகளையும்
  தெரிவித்துக்கொள்கிறேன்...!!!

  பதிலளிநீக்கு
 4. முனைவர்.இரா.குணசீலன் ஐயா உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... !!!

  மைக்ரோடெக் கணினி பயிற்சி மையம்,
  தளிர்விடும் பாரதம் சமூக சேவைக்குழு.

  பதிலளிநீக்கு
 5. On behalf of myself,Jothimani & vaishali, Hearty Birthday wishes to Dr.R.Gunaseelan,Head,Dept of Tamil.

  Its very nice and stunning birthday gift.Superb vaishali & Co.
  God bless you all & your hard work.
  Good.Keep it up.

  பதிலளிநீக்கு